வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, May 5, 2016

" தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிறந்த நாள்"

" தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிறந்த நாள்"

                       

அடிவாங்கி கொண்டேயிருந்த
தமிழினத்தை
திருப்பி அடிக்கவைத்திட்ட
இயக்கம் பிறந்திட்ட நாள் இன்று!!


தமிழர்க்கென்று தனிராஜ்யத்தை கட்டியெழுப்பி
இன உணர்வையும்
மொழி உணர்வையும்
காத்து வளர்த்திட்ட
இயக்கம் பிறந்திட்ட நாள் இன்று!!


சேர சோழ பாண்டிய
மன்னர்களின் முப்படைகளையும்
கட்டியெழுப்பி தமிழர்களின்
உரிமையை காத்திட்ட
இயக்கம் பிறந்த நாள் இன்று!!!!!




காற்று உட்புகா
இடங்களிலும்
தமிழரின் வாழ்விற்காய்
உட்புகுந்து எதிரிகளை
சிதைத்திட்ட கரும்புலிகளை
தோன்றி வளர்த்திட்ட
இயக்கம் பிறந்த நாள் இன்று !!!!!

தமிழனுக்காய் குரல்கொடுக்க
ஆளில்லை என்றபொழுது
தமிழின உரிமைக்காய்
தமிழன் வாழ்விற்காய்
உயிரையும் கொடுத்திட்ட
இயக்கம் பிறந்த நாள் இன்று!!!




தமிழின நலனுக்காக
எதையும் விட்டுக்கொடுக்காது
எதற்கும் விலைப் போகாது
தமிழினத்தை வளரச்செய்திட்ட
இயக்கம் பிறந்த நாள் இன்று!!!

பெண் உரிமை பற்றி
பேசி பேசி திரியாது
செயலில் செய்து காட்டிய
இயக்கம் பிறந்த நாள் இன்று!!!!
வீரமும் அறமும்
பண்பும் உணர்வும்
கொண்ட தலைவனால்
தமிழினத்தை காத்திட்ட
இயக்கம் உருவாகிய நாள் இன்று!!!!



போரியியலி்ல் மட்டுமல்ல
சமூக கட்டமைப்பிலும்
சிறந்ததொரு அரசையே
நிர்ணயம் செய்திட்ட
இயக்கம் பிறந்த நாள் இன்று!!!!

உலகமே வியந்திடும் வகையில்
தமிழினத்தை
தலை நிமிரச் செய்திட்ட
இயக்கம் உருவாகிய நாள் இன்று!!!!!

உலகமே தடைசெய்தப் பொழுதிலும்
தமிழினத்தை கையேந்தாமல்
தன்மானத்துடன்
வாழ வைத்திட்ட
இயக்கம் தோன்றிய நாள் இன்று!!!!!!!!!!!!!!!!!

ஆம் தமிழினம் மீண்டும்
பெருமைக் கொள்ள
தமிழர்க்காக ஓர் இயக்கம்
தமிழனால் ஓர் இயக்கம்
ஜாதி மதங்கடந்து
"தமிழர்களாய்" தமிழராக
உணர வைத்திட்ட
இயக்கம்.... அது தான்
"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்"