வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, September 19, 2019

நவம்பர் மாதம்

*******

நவம்பர் மாதம்

ஓடியோடி ஒளிந்துக் கொண்டிருந்த
தமிழர்களை காத்திடவே
எழுந்து ஓடி விரட்டிய
வீரப்புதல்வர்களின் மாதம் இது!

சுயநலமில்லாது தமிழினத்திற்காய்
தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்காய்
தாங்களே களமிறங்கிய
வீரத்தமிழர்களின் மாதம் இது!

தமிழீழப் பெண்களின்
கற்பினை சூறையாடிய சிங்களவர்களை
வீரத்துடன் வேட்டையாடிய
வீரப்பிள்ளைகளின் மாதம் இது!

சுற்றிலும் எதிரிகளிருந்தாலும்
தமிழர்க்கென்று தேசத்தை கட்டியெழுப்பி
பசியில்லாது இன மொழி உணர்வோடு
தமிழர்களை வளரச் செய்திட்ட
வீரப்புலிகளின் மாதம் இது!


                             

முப்படைகளும் கண்டு
எதிரிகளை விரட்டியடித்து
வெற்றி கொடியேற்றிய
தமிழீழ புலிகளின் மாதம் இது!

அடிமைத் தமிழர்களை
தலை நிமிரச் செய்திட்ட
செயல் வீரராம் வீரத்தின் விளை நிலமாம்
என் அண்ணன் பிறந்திட்ட மாதமும் இதுவே!

Thursday, September 5, 2019

மரம் நடுவோம்........

மழையில்லை மழையில்லை
என புலம்பிடும் மனிதா
மழை குறைந்ததற்கு
காரணமென்ன என்று ஏன்
சிந்திக்க மறுக்கின்றாய்????
சாலை விரிவாக்கமென்ற
பெயரிலும்
நகர விரிவாக்கமென்ற
பெயரிலும்
மரத்தையும் காடுகளையும்
அழித்தால் எங்ஙனம்
மழைப் பொழியும்???
மாதம் மும்மாரி
மழை பொழிந்த
பூமி தான் இன்றும்
ஆனால் மும்மாரி
மழை பெய்யவில்லையே
ஏன் புரியவில்லையா????
இன்று நம்
பார்வையில் பட்டிடும்
மரங்கள் யாவும்
நாம் வைத்தவை அல்லவே
நாளைய சந்ததிக்காய்
நீ எத்தனை
மரங்கள் வைத்துள்ளாய்?????
அரசியல் தலைவர்களின்
பிறந்த நாளில்
நடப்படுகின்றன மரங்கள்
ஆனால் நட மட்டுந்தான்
செய்கின்றனர்...
வளர்ப்ப தில்லையே!!
மனிதரகளே மனிதர்களே
இயற்கையினை நாம்
காத்திட்டால் தான்
இயற்கையும் நம்மை
காத்திடும்!!!!!
நாம் வாழ
இயற்கையினை இன்று
அழித்திட்டால்
நம்மை வாழ்வதற்கே
வழியில்லாது செய்திடும்
இயற்கை!!!!!!
மரங்களை நடுங்கள்
உங்களுக்காக மட்டுமல்ல
நாளைய நம்
சந்ததிக்காகவும்!!!
உங்கள் பிள்ளைகளை
திரைப்பட பாடல்களுக்கு
ஆடச் சொல்லி
ரசிப்பதை விட
மரங்களின் அருமையை சொல்லி
அவர்களின் கரங்களினால்
நட சொல்லி பெருமைப்படுங்கள்!!!
நட்ட மரங்களையும்
காத்திடுங்கள்
உ்ங்கள் பிள்ளைகளைப் போல!!
உங்கள் பிள்ளைகள்
நாளைக்கு குடும்பத்தை
காப்பார்கள் என்றால்
நடுகின்ற மரங்கள்
நாளைக்கு சமூகத்தை
காப்பார்கள் நிச்சயமாக
வளத்துடன் மழையுடனும்!!
மரம் நடுங்கள்
மரங்களை காத்திடுங்கள்!!!