வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, March 28, 2012

சிகரெட்



முதலில் 
மனிதனின் கவலையைக் 
குறைக்க‌ நீ
தன்னைத் தானே 
உருக்குகின்றாய் என்றேன்....
பின் தான் தெரிந்தது
நீ உருகும் ஒவ்வொரு
பகுதியும் மனிதனின்
ஆயுளைக் குறைக்கின்றாய்.....

Monday, March 19, 2012

தளர்ந்த மனதிற்கு தங்க பஸ்பம்

 தளர்ந்த மனதிற்கு தங்க பஸ்பம்



நான் படித்த புஸ்தகத்திலிருந்து சில வரிகள்
1. ஒரு வேலையை ஆரம்பிக்கும் போதே எப்போது அதனை முடிக்க வேண்டும் என்று தீர்மானி.
2. பத்தில் ஒருவனாய் இருப்பதை விட, பத்தில் முதல்வனாய் இரு
3. முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன் எங்கோ செய்துக் கொண்டிருக்கின்றான்.
4. ஏழையாக பிறப்பது தவறல்ல, ஏழையாகவே இருப்பது தான் தவறு......
5. அலைகள் ஓயக் காத்திருப்பவன் முத்து எடுக்க முடியாது..
6. ஆரம்பிப்பதற்கு அருமையான நாள் எது? இன்று தான்
அருமையான நேரம் எது ? இப்போது தான்.
7. நமது முன்னோர்கள் மரம் நட்டார்கள். நாம் அனுபவிக்கின்றோம்.. நாம் யாருக்குமே முன்னோர் இல்லையா? நாம் எதையாவது சாதிக்க வேண்டாமா?
8. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஓராயிரம் தோல்விகள், துயரங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் இத்தனையும் இருக்கத்தான் செய்யும்..
9. எல்லோருக்கும் சுமைகள் இருக்கின்றன. அதனை தாங்குவதோ, தகர்ப்பதோ, அவரவர் சாமர்த்தியம்.....
10. ஒரு காரியம் கஷ்டமாகத் தோன்றுவதால் நாம் பயப்படுகின்றோம் என்பது முற்றிலும் சரியல்ல. .. நாம் பயப்படுகின்றோம் என்பதால் தான் அந்தக் காரியம் கஷ்டமாக்த் தோன்றுகின்றது...
11. சிறந்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை சிறப்பாக்கு
12. சில தியாகங்களைச் செய்யாமல் வெற்றிகளை அடைய முடியாது..
13. நம்பிக்கையும், போராட்டமும் கலந்தது தான் வாழ்க்கை... நம்பு போராடு
14. நீங்கள் தோல்வியாளர் அல்ல இன்னும் வெற்றியடையாதவர் அவ்வளவே..
14. உன்னால் என்ன முடியும் என்பதைக் கொண்டு நீ உன்னை மதிப்பிடுகின்றாய்.. நீ என்ன சாதித்திருக்கின்றாய் என்பதைக் கொண்டு தான் உலகம் உன்னை மதிப்பிடுகின்றது...
15. ஓய்வெடுப்பது தவறில்லை... ஓய்ந்தே கிடப்பது தான் தவறு....
16. முடியுமா என்பது ஐயம், முடியாது என்பது பயம் முடியும் என்பது பலம்.... மூன்றுக்கும் பிறப்பிடம் மனம்...
17. சிரமப்படாமல் சிகரம் தொட முடியாது.
18. பறந்து தேடும் பறவைக்கே உணவு.. கூட்டில் இருக்கும் குருவிக்கு அல்ல‌
19. கசப்பான அனுபவங்களிலும் ஓர் இனிப்பான வாய்ப்பு
ஒளிந்திருக்கும்.
20. இன்று என்ன செய்கிறாய் என்பதில் தான் நாளை வெற்றி உள்ளது......
நன்றி : "தளர்ந்த மனதுக்கு தங்க பஸ்பம்" புஸ்தகம்
ஆசிரியர் : திரு. தங்கவேலு மாரிமுத்து
விஜயா பதிப்பகம்.

பெண்கள் ‍ ஆண்கள்


தங்களை தானே
நினைக்க மறந்து
அவர்களை நினைப்பவர்களையும்
மறக்க நினைத்து
வெறுக்க நினைப்பவர்கள்

பெண்கள்
தங்களை
நினைக்க மறந்து
தாங்களை
நினைக்க மறந்தவர்களையும்
வெறுக்க நினைப்பவர்களையும்
மறவாமல் நினைப்பவர்கள்

ஆண்கள்

Wednesday, March 14, 2012

பிரிவின் கொடுமை......


என்னவளே,
நான் பேசும்
சொற்களிலும்
நான் காணும்
காட்சிகளிலும்
நான் செல்லும்
வழிகளிலும்
என் இரவினில்
கனவாக‌
என் இதயத்தில்
துடிப்பாக‌
நீ என்னுடன்
இல்லா விட்டாலும் கூட‌
நின் நினைவுகள்
என் ஒவ்வொரு
அசைவுகளிலும் அணுக்களாக‌....



நின் நினைவுகள்

சில நேரங்களில்

சுகமாகவும்
சில நேரங்களில்
சுமையாகவும்
சில நேரங்களில்
அமைதியாகவும்
சில நேரங்களில்
பரபரப்பாகவும்
சில நேரங்களில்
உணர்வுகளாகவும்
சில நேரங்களில்
உணர்ச்சிகளாகவும்
சில நேரங்களில்
சிரிப்பலைகளாகவும்
சில நேரங்களில்
வெடித்திடும் அழுகையாகவும் 

என்னுடல்

பணியில் பணிப் புரிந்தாலும்

இதயம் உன்னை
நினைப்பதையே அதன்
வேலையாக கொண்டு துடிக்கின்றது.......
காற்றை விட‌
நின் நினைவுகளையே
அதிகம் சுவாஷிக்கின்றது........ 


நீ என்னுடன்
இல்லாத போதும்
நீ என்னை
வெறுத்து மறந்த போதும்
நின் நினைவுகள்
உன்னையே நினைக்கத்
தூண்டிக் கொண்டிருக்கின்றது.........
உன்னால் மட்டும் எப்படி

வாழ முடிகின்றது????????

நானில்லாமல்
என் நினைவுகளில்லாமல்.......


தோல்விகள் நஷ்டங்கள்
இழப்புகள் ஏமாற்றங்கள்
மரணங்கள் மாற்றங்கள்
எல்லாம் பலப்பல
நான் கண்டுள்ளேன்
என் வாழ்வில்.......
அப்போதெல்லாம்
இழந்ததைப் பற்றியெல்லாம்
கவலைக் கொண்டதேயில்லை
" இதுவும் மாறும்"
என்ற நம்பிக்கையில்.....
ஆனால் அதெல்லாம் விட‌
கொடுமையிலும் கொடுமை
இந்த பிரிவின் கொடுமை.......
அதிலும்
பிரிவினில் பிரிந்ததைப் பற்றி
சிந்திப்பது நினைப்பது
ஒவ்வொரு நிமிடமும்
மரண வேதனை தான்......




Wednesday, March 7, 2012

மகளிர் தின வாழ்த்துக்கள்....

உலக மகளிர் தினம் : மார்ச் 8
orkut scraps

Women's Day 
<center><a href=scraps

Women's Day 

<div class=

நண்பர்களின் வருகைக்கு மிகவும் நன்றி...!!!

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....


என் அன்னைக்கு பிறந்த நாள் : 05.03.2012
நான் காணும் இறைவனே,
நான் பிறந்த நாட்முதல்
வாழ்வின்
இன்பத்தை விட
துன்பத்தையே பகிர்ந்தவளே...
எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
துணைவருக்கு துணையாய் நின்றவளே
துணைவரின் துயருக்கு
இன்முகத்துடன் தோள் கொடுத்தவளே.........
பணமே உலகமெனும் இவ்வுலகில்
அன்பே உலகமேன்று ‍_ அவ்வுலகமே
நின் துணையே என்று
துணைவரை நேசித்தவளே.........
வளர்ந்தேன் நானும்
நீர் உந்தன்
துணைவர் மீதுக் கொண்ட‌
அன்பை தினமும் பார்த்தே
நானும் அன்பை கற்றேன்..........
என் பள்ளித் தேர்வில்
கூட நான்
தோற்கக் கூடாதென்று
எனக்காய் விரதமிருந்து
இறைவனிடம் வேண்டினாய்.......
நின் துணைவர்
நோயில் வாடிய போதும்
மருத்துவர் கூட யோசிக்கையில்
நீ கொஞ்சமும் தவறாது
நின் கடமையை செய்தாய்
இன்னும் அதிக கவன‌த்தோடு.........
கணவனே உலகமென்று
வீட்டுப் பறவையாய்
வாழ்ந்தாய் நின் வாழ்வில்
காலனும் பொறாமைக் கொண்டு
துணைவனை அழைத்த போதும்.....
துணிந்தாய் எதிர்த்தாய்
ஆதரவற்ற பிள்ளைகளை
அன்பில் அணைத்தாய்
மூன்று பிள்ளைகளையும்
அன்பில் வளர்த்து
பெண் பிள்ளைகளை
பண்பில் செதுக்கி _ அவர்க்கு
தகப்பனாய் பெண் பிள்ளைகளுக்கு
உலகில் கடமை முடித்தாய்...........
நானும் கூட‌
கீழ்ப்படியாமையால்
தோற்றப் போதும்
உலகில் அவமடைந்த போதும்
என் மகன் நல்லவனென்று
எனக்குத் துணையாய்
என் தோல்வியில் நின்றாய்........
என் தோல்விகளில்
தோழமைகள் விலகிய போதும்
உறவுகள் நகைத்த போதும்
என் நஷ்டங்களையும்
ஏற்றுக் கொண்டாய் அன்பினால்........
என் ஏமாற்றங்களில் பங்கெடுக்க‌
என் மனைவிக் கூட‌
மறுத்தென்னை ஒதுக்கிய போதும்
என்னை சுமந்தாய் அன்பினால்.......
என் வாழ்க்கைத் துணையால்
அவமானங்கள் நீர் பட்டபோதும்
என் வாழ்க்கை நலனுக்காய்
இன்றும் தன்னையே உருக்குகின்றாய்.......
இன்று உனது
பிற்ந்த நாள் அம்மா........
என்ன பரிசுக் கொடுப்பேன்
நீ எந்தன் அன்னையானதற்கு
உலகிலுள்ள அனைத்தையும்
உன் காலடியில் வைத்தாலும்
உன் அன்பிற்கு ஈடாகுமா............
என் ஜீவனையே வைத்தாலும்
உன் அன்பிற்கு ஈடாகுமா...........
உன் பிறந்த நாள் பரிசாக‌
நானென்ன கொடுத்திட முடியும்.........
நான் காணாத இறைவா.....
என் அம்மாவின் பிறந்த நாளில்
வரமொன்று கேட்கின்றேன் உன்னிடம்
அவரை என்றும் மறவாத
மனங் கொடு எனக்கு
என்றென்றும் நேசிக்கும்
இதயங் கொடு எனக்கு
அம்மா அம்மா என்றழைக்கும்
ந‌ல்குரல் கொடு எனக்கு.........
இன்னும் ஏழேழுபது
ஜென்மம் வந்தாலும்
அவரையே எனக்கு
"அன்னையாய்" கொடுத்திடு..............