வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, April 15, 2017

இழிப்பிறவி நீயடா????????



மானிடனே மானிடனே
என்னதோர் இழிப்பிறவி
நீயடா
ஆறறிவு இருந்தும்
மருத்துவர் மாணவர்
வியாபாரி ஆசிரியர்
எனப்பல பெயர்களை
சூட்டிக் கொண்டு
நீ உலகை வலம்வந்தாலும்
எல்லாம் மிருகங்களின்
குணத்தையும் தானடா
உள்ளே வைத்து
சுற்றிக் கொண்டிருக்கின்றாய்
மிருகங்களுக்கும்
இல்லாத குணங்களையும்
அல்லவா நீ
மனிதனெனும் போர்வைக்குள்
மறைத்து வலம்வருகின்றாய்!!


பொறாமையும் வஞ்சனையும்
பொய்யும் இகழ்ச்சியும்
நினைச்சது நடக்கவில்லையென்றால்
ஊரெல்லாம் தூற்றித் திரிவதும்!
முன்னே சிரித்துப் பேசுவதும்
பின்னே துரோகம் செய்வதும்

                               
நண்பனென்று சொல்லி கைக்கொடுப்பதும்
காலுக்குள் குழி தோண்டுவதும்
என்ன இழி குணமடா
உன் குணம்
மிருகங்களே மிருகங்களே
காட்டிற்குள்ளேயே இருந்திடுங்கள்
வெளியில் வந்திட வேண்டாம்
இந்த மானிடர்களின்
குணங்கள் உங்களையும்
அண்டிடுமே

Monday, April 3, 2017

நீ எங்கே என் அன்பே

** நீ எங்கே என் அன்பே ******
விழிகளின் சங்கமத்தில்
விதையாக்கிய என் காதல்
உணர்வுகளின் மீட்டலில்
வளர்த்திட்ட என் காதல்

தனிமையிலும் நிழலிலும்
பேசிபேசி உருவாக்கிய காதல்
கரங்களின் வளையோசையில்
இசைத்து மகிழ்ந்த காதல்!
பூமிப்பந்து அவளை
சுமந்திட்டாலும் அவளின்
நிழலையும் சேர்த்து சுமந்தேன் நான்
என்னிதயத்தில் மகிழ்வாக!!

                               
இதயத்தில்
சிறைப்பிடித்தேன்
காதலியாக அவளை!
மீட்டு கொண்டார்கள்
அவளை மட்டுமல்ல
என் காதலையும்
களவாடி சென்றே
நீ எங்கே
என் அன்பே!
நீயிலாவிட்டாலும்
என் காதலை
திருப்பிக் கொடுத்திடு
நின் நினைவுகளோடு
நான் வாழ்ந்திட

Saturday, April 1, 2017

சிறு கிறுக்கல்...............

*** சிறு கிறுக்கல் *****
கேட்கத் தான் நினைக்கின்றேன்
கேட்கத் தான் முடியலையே
சொல்லத் தான் நினைக்கின்றேன்
சொல்லத்தான் முடியலையே


சொற்கள் வெளிவராது
வாய்க்குள் போராடுகின்றதே
உன்னருகில் வந்துவிட்டேன்
கேட்கவும் முடியலையே
கேட்காமலும் விலகிசென்றிடவும்
வழி யில்லையே பெண்ணே
உன்முன்னால் நின்றிடும் பொழுது
காற்று கலைத்திட்ட மேகமாய்
கலைகின்றது என் எண்ணங்கள்
ஆனாலும் ஆனாலும்
சொல்லிடவே எண்ணுகின்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.

உன் கூந்தலில்
விழுந்த மலர்களை
குப்பையில் எடுத்துப் போட
நீ செய்வாயா அல்லது
நானே செய்யவா என்று
கேட்டிடவும் சொல்லிடவுமே எண்ணுகின்றேன்