வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 17, 2015

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........> ஆலோசனை

‪#‎ஜோ‬

நமது பணத்தையும்
செலவழித்து
நமது நேரத்தையும்
செலவழித்து
திரையினில் அடுத்தவரின்
பொய் முகத்தை
ரசித்து வருவதை விட‌


நேரஞ் செலவழிந்தாலும்
பணம் செலவானாலும்
ஆதரவற்ற குழந்தைகளில்
இல்லங்களுக்கு சென்றால்
இருக்கும் நேரமெல்லாம்
அவர்களின் உண்மை முகத்தையும்
புன்னகையையும்
கவலை மறந்திட்ட
மலர்களின் அழகினையும்
கண்டு ரசித்து வரலாம்...........................


---------------------------------------------------------------------------------

பணமிருந்தும் வசதியிருந்தும்
நிம்மதி தேடி
அமைதியை தேடி
ஊர் ஊராக‌
காடு மலையென்று
அலைந்து சென்று
வழிப்பாட்டு தலங்களுக்கு
செல்வதை விட‌


அருகில் இருக்கும்
அனாதை இல்லங்களுக்கும்
முதியோர் இல்லங்களுக்கும்
சென்று உங்கள்
பணத்தையும் நேரத்தையும்
செலவிட்டால் 

நீங்கள் தேடும்

 நிம்மதியும் அமைதியும்

உங்கள் வீட்டில்

உங்களை தேடி வந்து

 குடி வருமே.......................

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........> மரணம்

மரணம்


அன்பு ஆணவம்
ஆசை அரட்டை
இச்சை இரக்கம்
ஈசனுறவு* புகழ்
உறவு மகிழ்வு
ஊண் உடை
துக்கம் கஷ்டம்
நஷ்டம் லாபம்
காதல் காமம்
ஆடம்பரம் ஆளுதல் 
என‌ அனைத்தையும்
ஏற்றும் விரும்பியும்
விடாது தொடர்ந்து 
துடிக்கும் இதயம்
ஏற்காது ஒரு நிமிடம்
துடிப்பினை நிறுத்தும் போது
தான் ஏற்றுக் கொண்ட‌ 
தன்னை ஏற்றுக் கொண்ட‌,
தான் விருப்பங் கொண்ட‌
தன்னை விரும்புகின்ற‌,
தான் சுமக்கின்ற‌
தன்னை சுமக்கின்ற‌,
தான் நேசிக்கின்ற‌
தன்னை நேசிக்கின்ற‌,
அனைத்தையும் அனைவரையும் விட்டு 
சரீரம் தன் சேவைகளை
நிறுத்தி விடுகின்றது
ஒரேயொரு முறை இதயம்
தனது வேலையினை
நிறுத்தும் போது!

மனிதனுக்காய் எதையும்
சிந்திப்பதில்லை.........
மனிதன் சிந்திக்கும்
நேரத்தில் இதயம்
வேலையினை நிறுத்துவதுமில்லை.
மனிதனை நேசித்த‌
மனிதன் விரும்பிய
அனைத்தும் சுற்றியிருந்தாலும்
அவன் மரணத்தை
தடுப்பார் யாருமில்லை
கேள்வி கேட்கவும் துணிவில்லை 
மரணம்......... அது
நோய் நொடியில் துடிக்கும்
ஒரு சரீர வேதனைகளுக்கு
ஒரு நிரந்தர‌ சுகம்!
உறவுகளின் மத்தியில்
ஒரு பேரிழப்பு!
உலகிலிருந்து அவனது
கடமைகளுக்கும் முயற்சிகளுக்கும்
கிடைக்கும் நிரந்தர‌ ஓய்வு

மரணம்..... மரணம்

வாழ்வினை முடிப்பவர்க்கு
மரணம் ஒரு மணம்
மனிதனை நேசிப்போர்க்கு
மரணம் ஒரு ரணம்.


படைப்புகளை விட்டு
படைத்தவனை நோக்கி

செல்ல ஆரம்பமாகும்
பயணம் மரணம்..........

அர்த்தம் : *ஈசனுறவு : இறைவனுடனான உறவு

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........> போராடுவோம் போராடுவோம்

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........> அனுபவம்!

‪#‎ஜோ‬


ஒருவரை
மனம் நேசித்திடும் பொழுது
அவர் செய்யும்
தவறுகள் கூட‌
ரசிக்கும் படியாகவே
தெரிகின்றது நம் பார்வைக்கு
அவரையே
மனம் வெறுத்திடும் பொழுது
அவர் செய்யும்
சரியானவை கூட‌
தவறாகவே தெரிகின்றது...................

‪#‎ஜோ‬


ஒருவரின்
நம்பிக்கையினை பெறுவது
மிகவும் கடினம்
ஆனால்
அந்நம்பிக்கையினை இழப்பது
வெகு சுலபம்....................!!!!!!!!!!!!!!

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........>தத்தூவம்

‪#‎ஜோ‬


அழகிய
மலராக யிருந்தாலும்
மலர்ந்திருந்தால் மட்டுமே
உயரத்தில் இருக்கும்
வாடி விட்டால் 
தரைக்கு வந்துவிடும் 
மனித வாழ்விலும்
இதே நிலை தான்
வளமிருக்கும் வரை மட்டுமே
மனிதர்களில் உயர்ந்திருக்கலாம்
தாழ்ந்து விட்டால் 
நாம் இருக்குமிடம்
யாருக்கும் தெரியாது......................

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........> ஜாலியன் லாலாபாக் திடல்


ஆங்கிலேய அரசின்
கொடுங்கோலனால்
எம்மக்களின் உடல்களில்

துளைத்த தோட்டாக்கள்
உடல்கள் போதாதென்று
சுவற்றிலும் துளைத்துள்ளது..............
...



இடம் : ஜாலியன் லாலாபாக் திடல்

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்................... "ஏதேதோ சொல்ல நினைக்கின்றேன்"

ஏதேதோ சொல்ல நினைக்கின்றேன்
ஆனால் மனம் சொல்ல நினைப்பதை
தட்டச்சு பலகையில் அடித்திட‌
இதய கனத்துடன்
விரல்களும் மறுக்கின்றன........

மனிதர்களின் பேச்சினை
நம்பி நம்பியே
உண்மை முகம் தெரியாது
ஏமாறுகின்றேன் பலமுறை

ஏமாந்த பின்னரோ
வருத்த மடைவது ஏனோ
மனம் மட்டுமே..........
ஏமாந்தோம் என்பதை விட‌
ஏன் ஏமாந்தோம் என்று
நினைத்தால் மனம் வலிக்கின்றது.......

ஏதேதோ சொல்ல நினைக்கின்றேன்
நினைப்பதை யெல்லாம்
சொல்லிடவும் இயலவில்லை
சொல்லாமலும் தெளியவில்லை
மனதின் வலி..............

அழகாயிருக்கின்றது என்றே
நேசிக்கின்றேன்
ஆனால் கலையும் போது தான்
தெரிகின்றது
அது நிஜமல்ல‌
நிழலென்று.....................

வார்த்தை ஜாலங்களில்
மயங்கி மயங்கியே
தெரியாவிடினும் இறங்கினேன்
முடியுமென்று நம்பியே......
நம்பினோர் உதறிடும் போது
தான் தெரிகின்றது
இறங்கிய வழியினில்
நான் மட்டுமேயென்று....................

சொல்லத்தான் நினைக்கின்றேன்
சொல்லவும் தவிக்கின்றேன்

மாற்றம் வருமென்று
எண்ணி எண்ணியே
செயல்களை புரிகின்றேன்
மாறி மாறி ஆனால்
மாற்றங்கள் எல்லாம்
ஏமாற்றங்களாய் மாறியே
வலியினை கொடுக்கின்றதே

கை கோர்த்த‌
கரங்கள் எல்லாம்
என்னுள் இணைந்தே
என்றே நம்பினேன்
ஆனால்
இணைந்த கரங்களில்
எல்லாமே கறைகள் உள்ளதே..............

அன்பாய் பழகி
நட்பாய் இனைந்து
பணத்தையும் எண்ணாது
பழகினாலும் கொஞ்ச நாட்களில்
கானல் நீராய் பொய்மை
மறைந்திடும் போது
அவரையும் மறுத்திட‌
மனம் மறுக்கின்றதே......

வார்த்தைகளில் கோட்டை
கட்டி கொடியேற்றுகின்ற‌
வல்லவர்களை எல்லாம்
நல்லவர்களென்று
நம்பி நம்பியே இன்று
எனது மதிப்பும்
சந்தேகத் திற்கிடமாய் ஆனதே.................

சொல்லில் காட்டிடும்
வேகத்தை
செயலில் காட்டிடவும்
இயல வில்லை எனில்
செயலினை அடுத்தவரிடம்
ஒப்படைத்த‌தால்.............

ஏதேதோ சொல்ல நினைக்கின்றேன்

சொல்லிடவும் இயலவில்லை

ஏற்றிடவும் இயலவில்லை

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்................... " புத்தன்"

அன்றைய புத்தன்
ஆசையை துறக்க சொன்னான்
இன்றைய புத்தன்
ஆடையை கிழித்து

உயிரை பலியாக 

கேட்கின்றான் 

புத்தன் பெயரை 

சொல்லும் நாடுகளனைத்தும்
இன்றைக்கு உயிர்ப்பலிகளை 
கொடுத்து வருகின்றது
புத்தனுக்கு
உலக நாடுகள் எல்லாம்
அமைதியாக தியானத்தில்!!!!!!!!!!!


ஆசையை துறக்க 
சொன்னார் புத்தர்
ஆனால் 
புத்தன் வழி மீதே
ஆசைக் கொண்டே
மனிதர்களை
அழிக்கின்றார்கள் அவர்வழி
வந்திட்ட சதை பிண்டங்கள்.......






"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்...................

என்று தீருமோ
எங்கட அவலங்கள்.....????


நாங்கள் வேண்டுவது
அடுத்தவனின் நிலமோ
அடுத்தவனின் பணமோ அல்ல‌
எங்கட நிலத்தில்
நாங்கள் உழைத்து வாழவே
உழைத்ததை நாங்கள் அனுபவிக்க‌வே
வழி செய்யுங்களேன்
உலக நாடுகளே................




என்று தீருமோ
எங்கட அவலங்கள்................???

யார் தலைவர்????????????????

தமிழினத்தின் விடுதலைக்கு
வீட்டிற்கு ஒரு பிள்ளை கேட்டு
தனது குடும்பத்தில்
மூன்று பிள்ளைகளையும்
விதைத்திட்டவர் தலைவரா???????

பிள்ளைகளின் பதவிக்காக‌
தமிழினமே அழிந்த பொழுது
அமைதி காத்து
நாற்காலியை டில்லிக்கு நகர்த்தி
பதவி பிச்சை கேட்டவர் தலைவரா?????????

தமிழினம் அழிந்தபோது
தமிழுக்காய் மாநாடு
என்று கூவி கூவி
தன்புகழ் பாட வைத்தவர்
தலைவரா???????????????????

பேச்சுவார்த்தை என்றழைத்து
இராணுவ பாதுகாப்பினில்
பிள்ளைகளை சொல்லி
மிரட்டிய போதும்
மிரளாமல் தெளிவாக‌
தமிழினத்தின் நலனுக்காய்
பேசியவர் தலைவரா.............????

பேசிப்பேசி அடுத்தவரை
உசுப்பேற்றி சுயநலனுக்காக‌
அடுத்தவரை பலிக் கொடுக்காது
தன்னையே மாதிரியாக்கி
தான் வாழ்ந்ததையே
பிறருக்கு பாடமாக்கியவர்
தலைவரா.......................

தமிழர்களுக்காக‌
ஆட்சி மேடையேறி
தமிழர்களின் நலனை விட்டு
தனக்காக சொத்து சேர்த்தும்
கோடி கோடியாக பணம்
சேர்த்தவர் தலைவரா??????????

உலகமெங்கும் உறவுகள் இருந்தும்
உதவிட கரங்கள் இருந்தும்
தனக்கென்றும் குடும்பத்திற்கென்றும்
ஒன்றும் சேர்க்காது
தமிழினத்தின் நலனை சிந்தித்தவர்
தலைவரா????????????????????

தமிழினம் தமிழினம்
என்று மேடையில் மட்டுமல்லாது
சமூகவியலிலும் போரியியலிலும்
தமிழினை வளர்த்தவர்
தலைவரா???????????????????

மதுக் கடைகளை திறந்து
உணர்வுகளை அழித்து
மக்களை எல்லாம்
சிந்திக்க விடாது
மந்தைக ளாக்கியவர்
தலைவரா???????????????????????

யார் தலைவர்
தமிழினமே சிந்தித்திடு