வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, October 3, 2012

என்னுள் நீ


என்னிதயத் துடிப்பினில்
மெல்லிசையாய்
என் வாழ்வினில்
அர்த்தமாய்
என் புன்னகையில்
இன்பமாய்
என் துயரத்தில்
விழிநீராய்
என் காயங்களில்
வலியாய்
என்னுடல் அசைவினில்
நிழலாய்
என் செயல்களில்
நினைவாய்
என் உறக்கத்தில்
முடியா கனவுகளாய்
என் விழிகளில்
பிம்பமாய்
என்னுள் நீயாய்
என் உயிரோடு
என் உணர்வோடு
கலந்தவளாய் 
என்றும் இருக்கின்றாய் அன்பே

உன் நினைவுகள் என்னுள்


உன் சிந்தைகளில்
என் நினைவுகள்
வந்ததோ இல்லையோ
என் சிந்தைகளில்
உன் நினைவுகளே
என் செயலாய்
வருகின்றது பெண்ணே.....
நிழல் கூட‌ என்னுடன்
முழுவதும் வருவதில்லை
ஆனால் உந்தன் நினைவுகள்
என்னுடன் எங்கும் எப்போதும்
உன் நினைவுகள் 
உன் பிரிவினை நினைக்கத்
தூண்டுவதாய் இருந்தாலும் ‍ அவை
வலியினைத் தந்தாலும்
அவற்றை நினைக்க‌ 
என் மனம் என்றும் 
மறந்ததில்லை........ 

Wednesday, August 1, 2012

எனது மகன் ......

எனது மகனின் பெயர் : மாத்யூ டேனியல்
இன்று எடுத்தது

இன்று எடுத்தது

இன்று எடுத்தது


Tuesday, July 31, 2012

இறைவா உம் அன்பு



கொடிய‌ வனாந்தரம் போன்ற‌
என் வாழ்வினில் நாம்
இம்மட்டும் உயிரோடு இருப்பது
இறைவா உம் அன்பாலே.....
புதைமணல் போன்ற‌
நிந்தைகளிலும் ஆதரவாய்
அணைத்தீர்
இறைவா உம் அன்பாலே....


யாருமில்லை உதவிட‌
என்று தனித்திருக்கையில்
நானிருக்கின்றேன் என்று 
என்னை தேற்றியது
இறைவா உம் அன்பு........


கரும்இருட்டான‌
என் வாழ்விலும்
மெய்யான ஒளியாய்
அணைத்தீரே
இறைவா உந்தன் அன்பாலே......


மனங்கலங்கி வார்த்தைகளில்லாமல்
விழி நீரால் உம்முடன்
யுத்தம் பண்ணிய‌ போதெல்லாம்
வார்த்தைகளினால் என் 
கண்ணீர் துடைத்தீரே
இறைவா உம் அன்பாலே....


முடிவில்லாத‌ பிரச்சனைகளில்
நட்பும் உறவும் என்னை
விட்டு அகன்ற‌ போதும்
உந்தன் வார்த்தைகளால்
என்னை தைரியப்படுத்தினீரே
இறைவா உம் அன்பாலே......


செல்லவும் வழியில்லையே
பிரச்சனைகளை ஜெயிக்கவும்
வழிகளில்லையே என்று 
பரிதவித்த‌ போதும் ‍ 
"நான் புதிய காரியத்தை 
செய்கின்றேன்" என்று சொல்லி
சூழலையும் மனதினையும்
மாற்றினிரே 
இறைவா உம் அன்பாலே.........


என்னிலும் 
பலவானாயிருந்த‌ என் 
சத்துருக்கள் மத்தியிலும்
சத்துரு என்னை மேற்கொள்ளாது
எனக்கு ஜெயம் தந்தீரே
இறைவா உந்தன் அன்பினாலே......


இறைவா உம் அன்பு
தேனிலும் மதுரமே
துன்பத்திலும் இன்பமே
மாறாதது நிலையானது
தனிமையிலும் என்னுடனாய்
அழுகையிலும் ஆறுதலாய்
இறைவா உம் அன்பு
மாத்திரம் போதும் எனக்கு..........


நேசிக்கும் போது
நன்கு நேசித்து
எதிர்ப்பார்ப்பு பொய்யானால்
இதயத்தையே பிடுங்கி எறியும்
உள்ளங்களின் அன்பு வேண்டாம்..


என்றும் மாறாத‌
என்றும் விலகிடாத‌
கண்டித்தாலும் அன்பை விலக்காத‌
இறைவா உந்தன் அன்பே 
எனக்குப் போதும்........

      எல்லா புகழும் என்னைப் படைத்த‌ இறைவன் ஒருவனுக்கே........

Tuesday, June 5, 2012

என் அம்மா

கருவினில் வளர
அவள் விருப்பங்களை
தியாகந் செயதாள்................
சேயாய் உருவெடுத்து
உதைத்த போதும்
ஆனந்த கண்ணீர்
விட்டு ரசித்தாள்.........................
மரண வலியிலும்
நான் புவியைக் காண
இன்பமாய் பொறுத்துக் கொண்டாள்...................
பிறந்த பின்னும்
உந்தன் பார்வை எல்லாம்
எந்தன் மீதே செலுத்தினாள்...............
நான் செய்யும்
சிறுசிறு சேட்டைகளையும்
செயல்களையும்
கவலை மறந்து ரசித்தாள்...............
நான் தவழ்ந்த போது
என் முட்டி வலிக்குமென்று
தடவிக் கொடுத்தாள்.............
நான் நடந்த போது
என்னை உச்சி
முகர்ந்து முத்தம் தந்தாள்.............
தன் சோகத்தில் கூட‌
என்னை இன்பமாய்
கவனித்தாள்.........
நான் முதலில் பள்ளி
சென்று வந்த போது
போருக்கு சென்று
வெற்றியோடு திரும்புவனை
வரவேற்பது போல்
வாசலில் இருந்து
என்னை அள்ளி அணைத்து
அன்பை பரிமாறினாள்...
நான் கல்லூரி
சென்ற போதும் கூட‌
எவ்வளவு சாப்பிட்டாலும்
நல்லா சாப்பிடுப்பா
என்று சொல்லி
எந்நலத்தையே கவனித்தாள்................
என் பள்ளி
கல்லூரி தேர்வு
நாட்களிலும்
நான் தேர்வு எழுத‌
உண்ணா  நோன்பு கொண்டு
தன்னையே வருத்தினாள்.............
தான் உடம்பு முடியாமல்
படுக்கையில் இருந்தபோதும்
நீ சாப்பிட்டாயா
என்று என்னை விசாரித்தாள்..................
நான் வேலையில்லாமல்
சுற்றிய போது
என்னை விட‌
கவலைக் கொண்டாள்..............
நான் அழுதபோது
என்னைத் தேற்றி
தனிமையில் நானறியாமல்
அழுது தன்
சோகம் தீர்ப்பாள்..............
திருமணப் பந்ததில்
நுழைந்த போது
என் துணைவி உன்னை
புரிந்துக் கொள்ளவில்லை யென்றாலும்
அன்புடன் நான்
விலகிக் கொள்கின்றேன்
என்று சொல்கின்றாள்...............

என் அம்மா

Monday, May 14, 2012

என் தாயின் அன்பு

விளங்க முடியாத ஒன்று 
என் அம்மா 
உன் அன்பினை மட்டுமே 
என்னால் விளங்கவும் முடியவில்லை
மறுக்கவும் முடியவில்லை
உலகிலுள்ள ஒவ்வொன்றும்
ஒன்றையொன்றை
எதிர்ப்பார்த்தே 
விரும்புகின்றது நேசிக்கின்றது
வருகின்றது போகின்றது
அணைக்கின்றது அரவனைக்கின்றது
கண்டிக்கின்றது தண்டிக்கின்றது
ஆனால்
நீ மாத்திரமே
எதையுமே நோக்காமல்
என்னை சுமந்தாய்
என்னை நேசித்தாய்
என்வாழ்வினை விரும்பினாய்
என்னை காக்கின்றாய்
என்னை கண்டித்தாய்
அணைத்தாய் அரவனைத்தாய்
உம் அன்பினால்
என்னைக் கட்டிப் போட்டாய்
நானுன்னை கோபத்தில் 
வெறுத்தாலும் உந்தன்
அன்பினால் அணைத்தாய்
உன் மரணத் தருவாயிலும்
உன்னைப் பற்றியல்ல‌
என் எதிர்காலம் குறித்து
நினைக்கும் மனம் உனக்கெப்படி
வந்தது தாயே......................

காதல் அந்தாதி

காதல் காதல்
என் வாழ்வினை
உணரச் செய்தது காதல்
என் துயரினை
இலகுவாக்கியது காதல்
என் இன்பத்தினை
பெருகச் செய்தது காதல்
என் அழுகையினையும்
ரசிக்கச் செய்தது காதல்
என் தனிமையையும்
விரும்பச் செய்தது காதல்
என் சுவாஷத்தையும்
உணரச் செய்தது காதல்
என் நிழலையும்
கவிதை வடித்தது காதல்
நான் நானாக‌
பேச செய்தது காதல்
என் கோபத்திலும்
சிரிக்க‌ வைத்தது காதல்
என் எழுத்தையும்
அழகாக்கியது காதல்
மரணத்தையும்
வெறுக்க‌ செய்தது காதல்
காதல் காதல் காதல்
காதல் போயின் வாழ்தலில்
இல்லை காதல்

காதலி என்னை காதலி

காதலி தினமும்
என்னை காதலி
காதலி என்னை
மட்டும் காதலி
காதலி எப்போதும்
என்னை காதலி
காதலி எந்நேரமும்
என்னை காதலி
காதலி வாழ்வதற்கு
என்னை காதலி
காதலி உலகை ஜெயிக்க‌
என்னை காதலி
இன்பத்தை அனுபவிக்க‌
என்னை காதலி
துன்பத்தை மறக்க‌
என்னை காதலி
காதலினை காதலிக்க‌
என்னை காதலி
அன்பினை ருசிக்க‌ 
என்னை காதலி
தனிமையில் நினைவினில்
மகிழ்வதற்கு
என்னை காதலி
மரணத்தையும் எதிர்க்க‌
என்னை காதலி
வாழ்க்கை முழுவதும்
என்னோடு வாழ்ந்திட‌
என்னைக் காதலி

Monday, April 30, 2012

வரங்கொடு இறைவா..............






என் இறைவா
நீ படைத்த உலகில்
எல்லாமே அன்பாக உள்ளது
காக்கை குருவியும்
அன்பாக உள்ளது
ஒற்றுமையாக உள்ளது
ஆனால்
நீ உந்தன் சாயலில்
படைத்த‌ மனிதரில் மட்டும்
அன்பு இல்லையே ஏன்????
ஈரைந்து மாதங்கள்
சுமந்து பெற்றெடுத்த‌
அன்னையை
அவள் முதிர்வயதில்
அவளைக் காப்பாற்ற‌
மனைவியிடம் அன்பு இல்லை

சகோதர சகோதரிகளின் அன்பு
திருமணத்திற்கு பின் இல்லை
நண்பர்களின் அன்பு
துயரத்திற்கு பின் இல்லை
பக்கத்துவீட்டு அன்பு
சண்டைக்கு பின் இல்லை..........
மனைவியின் அன்பு
சிறு ஊடலுக்கு பின் இல்லை 
சின்னச்சின்ன
மனக் கசப்புக்கெல்லாம்
அன்பு மாயமாகி விடுகின்றது......
சின்னசின்ன ஊடலுக்கெல்லாம்
உறவுகளின் பிரிவுகள்.....
இறைவா......
இன்றைய‌ நாட்களில்
பெற்றவரை முதிர்வயதில்
உணவு தந்து ஆதரவளித்திட‌
பெற்ற மகன்கள்
நாட் கணக்கு பார்க்கின்றனர்.........
என்னதோர் கொடுமை
கூடப் பிறந்த‌
சகோதரி முதிர்கன்னியாயிருந்தாலும்
அவள் அரசாங்க சம்பளம்
எதிர்ப்பார்த்து அவள்
திருமணத்தை தள்ளிப்போடும்
சகோதர அன்பு.........
கள்ளக் காதலனுக்காய்
பெற்ற குழந்தையையே
கொல்லத் துணியும்
தாய் அன்பு.......
கூட வாழவந்தவளை
வரதட்சனை பெயரில்
அடுப்புக் கரியாக்கும்
கணவன்மார்கள்.........
பணம் கொடுக்கும்
மிஷினாய் கணவனை
நினைத்து... ஏசும்
மனைவிமார்கள்...........
பெற்றவள் கீழே
விழுந்தாலும் சிறிதும்
பாசமில்லாத பெற்ற‌
குழந்தைகள்...........
தகப்பனின் சொத்தை
பிரிப்பதில் தகராறு
சொந்த சகோதரனையே
கொல்லும் சகோதரன்.......
தன் சொந்த இனம்
அழிக்கப்பட்ட போதும்
கவலை கூட படாமல்
வெற்று அரட்டையில்
அதே இனத்தின் அன்பு.......
கண்களில் தெரியும்
மனிதனை வெறுத்து
காணாத இறைவனை
நேசிக்கும் ஒரு கூட்டம்........
பிள்ளைகள் மீது
காட்ட வேண்டிய‌ 
அன்பு இன்றைக்கு
வீட்டு வளர்ப்பு பிராணிகளிடம்
காட்டும் மனிதர் ஒருபுறம்.....
எங்கு செல்லுதையா
இவ்வுலகம்......
இறைவா மனிதர்க்கு
உலகில் பொழியும்
மழையைப் போல்
எல்லா மனிதர் மீதும்
அன்பினை பொழிந்திடு
பிறர் துன்பங் கண்டு
உள்ளம் துடித்திடும் அன்பு கொடுத்திடு.......
தன் குடும்பத்தை மட்டுமல்ல‌
தன் இனத்தையும்
தன் நாட்டையும்
தன் உலகையும்
தன்னைப் போல்
உலகிலுள்ள எல்லா மனிதரையும்
நேசிக்கும் வரங்கொடு இறைவா.........
வரங் கொடு.......

Tuesday, April 3, 2012

நின் விழி ஈர்ப்பு விசை



என் மலரே
உன்னைப் பார்த்த‌ பின்பு
நான்
புவி ஈர்ப்பு விசையை
நான் நம்புவதில்லை
எனில்
என்னை இழுப்பதெல்லாம்
நின் விழி ஈர்ப்பு விசை தானடி.......
என்னுடலை மட்டுமல்ல‌
என் உள்ளத்தையும் 
ஈர்க்கும் திறமை
நின் விழிகளுக்கு மட்டுமே....
என்ன‌ மாயம் செய்தாய்
என்னிதயம் துடிப்பது
நின் விழிகளை பார்த்தே
துடிக்கின்றது.....
என் நிழலும்
நின் விழிகளின் பார்வையில்
மயங்குகின்றது..........