வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, February 23, 2012

அழகின் அழகு நீ.....



என்னவளே,
மயிலுக்கு 
நடனம் அழகு
குயிலுக்கு
குரல் அழகு
குழந்தைக்கு
சிரிப்பு அழகு
முதுமைக்கு
நரை அழகு
தாய்க்கு 
அன்பு அழகு
இருளிற்கு 
கருமை அழகு
நிலவிற்கு
வெண்மை அழகு
வெய்யிலுக்கு
நிழல் அழகு
மேகத்திற்கு
மழை அழகு
அருவிக்கு
சாரல் அழகு
அழகிற்கு
நீ மட்டுமே அழகு...........

என் மனதிற்கு....


என் மனமே,
துவண்டது போதும்
தூங்கியது போதும்
ஓய்ந்தது போதும்.....
இழந்ததை யெல்லாம்
எண்ணி யெண்ணி,
வருந்தியது போதும்.....
இழப்பதற்கு ஒன்றுமில்லை ‍‍ இனி
ஜெயிப்பதற்கு உலகமிருக்கின்றது...
நேற்றைய தினத்தை
குறித்து கவலைப்பட்டு
இன்றைய தினங்களை
இழந்தது போதும்......
இழந்ததை மீட்க‌
தோல்விகளை தோற்கடிக்க‌
இன்றே தொடங்கு
உன் லட்சிய பயணத்தை
இப்போழுதே தொடங்கு
இன்றே நல்ல நாள்..........
நாளை என்பது நிழல்
இன்று என்பதே நிஜம்.......
இன்றே தொடங்கு
உன் பயணத்தை
வெற்றியெனும் இலக்கடைய......
துணிந்து முதலடி
எடுத்து வை.......
உன் பயணத்தை
ஆரம்பித்ததே லட்சியத்தில்
பாதி வெற்றி..........
உறுதியான மனதோடும்
நல் திட்டத்தோடும்.
தொடர் முயற்சியோடும்
முன்னேறிச் செல்
முன்னேறு ‍ முன்னேறு.......
மீண்டும் தோல்விகள்
வந்தாலும் கலங்காதே
இலட்சியப் பயணத்தில்
இளைப்பாறு ஆனால்
ஓய்ந்து விடாதே.....
உன்னுள் எல்லாம்
எல்லாம் உனக்குள்
தொடர்ந்து செல்........
சோர்வை மனதினுள்
நுழைய விடாதே......
அவ்வாறு நுழையும் நிமிடத்தில்
மீசைப் புலவனின்
" அச்சமில்லை அச்சமில்லை
அச்ச மென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து
வீழ்கின்ற போதிலும்
அச்ச மென்பதில்லையே"
என்ற வரிகளை
உரமாக்கி துணிவுக் கொள்..........
மீண்டும் வீறு கொண்டெழும்
உன் மனம்........
மற்றவரை தோற்கடிக்க‌
வேண்டுமேன்று எண்ணாதே
நீ ஜெயிக்க்க
வேண்டு மென்று மட்டும்
உறுதிக் கொள்.........
உன் போராட்டத்தின் முடிவும்
உன் துயரின் முடிவும்
உன் முயற்சியின் முடிவும்.....
உனக்காக ‍‍‍ உனக்காக‌
காத்திருக்கின்றது.....
வெற்றி வெற்றி உனதே
தொடர்ந்து செல்........
முடிவு வரை செல்......
நிச்சயம் உனக்காக‌
வெற்றி தேவதை........
"ஜெய மாலையுடன்/"
காத்திருக்கின்றாள்........

அழியாத‌ அழகு நீ........



என்னவளே,






காலை நேர இயற்கையின்
அழகை ரசித்தேன்
ஆதவன் வளர்ந்த‌வுடன்
மறைந்து விட்டது......
மாலை நேர ஆதவனின்
அழகை ரசித்தேன்
நிலவு வந்தவுடன்
மறைந்து விட்டது.......
அழகைத் தேடினேன்
தேடி தேடி ரசித்தேன்.....
என்னவள் நீ
வந்தாய் என்
கரம் பிடித்தாய்......
என் வாழ்வும்
குறைவோ நிறைவோ
இன்பமோ துன்பமோ...
நின்னுடன் இணைந்தவுடன்
அழியாத அழகாய்
என்னுள் வந்ததடி செல்லம்.










என்னுடன் வாழ்ந்திட வா...... அன்பே


என் இனியவளே,
நான் உன்னை
திருமண மான நாட்முதல்
மனைவியாய் அல்ல‌
காதலியாய் எந்தன்
தோழியாய் எந்தன்
குழந்தையா யெண்ணித்
தானடி உன்னை
என் உயிருக்குள் உயிராக‌
நேசித்தேன்........
காதலித்து திருமணம்
முடித்தவர்களா என்று
நட்பும் உலகமும்
பொறாமைக் கண்கொண்டு
பார்க்குமளவு வாழ்ந்தோமடி......
என் அன்பிற்கு
வானமே எல்லையென்று
நம்பி உன்னை
நேசித்தேன் காதலித்தேன்
ரோஜா தோட்டமாய்
வளர்த்த வாழ்ந்த
நம் வாழ்வில்
சூறாவளியாய் புயலாய்
நின் தகப்பனின்
சுயநலம் வந்ததடி........
காலத்தின் கோலத்தால்
உனது குடும்பத்தால்
நான்பட்ட
நிந்தைகள் அவமானங்கள்
பலப் பல.....
ஊர்க் கூட்டி உன்னை
திருமணம் செய்தேன்...
அதற்கு பழியாக
ஊர் பழிக்க‌
என்னையும் குடும்பத்தையும்
காவல் நிலையம்
அழைத்துச் சென்றார்
உன் தகப்பன்........
காவல் நிலையத்திலும்
உன் தகப்பன்
தன் சுயநலத்தை மட்டுமே
வென்றெடுக்க‌
அடுகடுக்கான பொய்கள்
கட்சி ஆதரவுடன்.............
உனக்கு காலையில்
காப்பி போட்டு
மிஸ்டு கால் கொடுத்து
எழுப்பும் என் அன்னையை
வார்த்தைகளினால் காவலர்
சுட்டப் போதும்
புன்னகையுடன் நின்
குடும்பத்தாரும் நீயும்......
இதனால்
எனது குடும்பமும்
தலைக் குனிந்தது........
உற்றாரும் உறவினரும்
என் பின்னால்
நான் கேட்கும் படியே
ஏளனம் பேசி பேசி
என்னை
கேலிப் பொருளாக்கினர்.........
நாம்
நலமுடன் வளமுடன்
வாழ்கவென்று வாழ்த்திய உறவு
இந்த உறவே.....
வேண்டாமென்று சொல்லி
நம் உறவை
உடைக்கவும் சொல்லியது
ஆத்திரத்தில் அவசரத்தில்
அதையும் நான் செய்தேன்.....
ஆனாலும்...........
நான் உன் மீதுக் கொண்ட‌
காதலினால் அன்பினால்
அதையும் உடைத்து
என் தாயை
பேசிய சுடு
சொற்களையும் மறந்து
உன்னுடன் வாழ‌
உன்னுடன் மட்டும் வாழ‌
என் குடும்ப கூட்டை
உடைத்துக் கொண்டு
அன்னையை அனாதையாக்கி விட்டு
வெளியில் வந்தேன்.........
நீயோ நன்றாகத்
தான் வாழ்ந்தாய் என்னுடன்
ஆனாலும் உந்தன்
தகப்பனின் ஆலோசனைப்படி........
நான் உன்மீது
அளவற்ற அன்புக் கொண்டேன்
ஆனால் நீயோ....
காசு தான் உலகம் என்றாய்..........
பாசம் தான் உலகம் என்றேன்
ஆனால் நீயோ
வேஷமாய் தான் வாழ்ந்தாய்
என்னுடன் ‍ என்னை நம்பாமல்
உன்னிடம் தாயன்பை
எதிர் பார்த்தேன்.....
ஆனால் நீயோ
உந்தாயை நேசித்து
என்னை அவமானப் படுத்தினாய்........
அன்பின் மிகுதியில்
நானிருக்கும் போதும்
உன் சுயநலத்தோடு
உந்தாய் வீட்டிற்கு
போவதற்கு அனுமதி கேட்பாய்......
என்னதொரு கொடுமை..........
உன்னிடம் கிடைக்காத‌
பாசத்திற்காய் அன்பிற்காய்
நான் மதுவினை
நாடினேன்......
என் மனதையும்
மரக்கச் செய்து
மதுவின் போதையில்
உன்மீது கொண்ட
அன்பை விட‌
உன் தகப்பன் மீதான‌
கோபத்தையும் உன்னிடம் காட்டினேன்.......
அதனையும் நீ புரியாது
என்னை
மீண்டும் மீண்டும்
சுடு சொற்களால் என்னை
வதைத்தாய்........ நானோ
எந்தன் உயிரையே
எந்தன் அன்பையே
அடித்தேன் ... அடித்தேன்.....
அதனால் நானே
என் மீதே
வெறுப் படைந்தேன்................
உன்னை எவ்வளவு
நேசித்தேனோ
அதை விட அதிகமாய்
உன் குடும்பத்தை
வெறுத்தேன்..............
ஆனால் நீயோ
நானில்லாத போது
வீட்டைக் காலி செய்துவிட்டு
உன் தகப்பனாருடன்
சென்று விட்டாய்..........
உனக்கோ என் மீதுக்
கோபம்.... உன்
தகப்பனுக்கோ
தன் சுயநலம்
ஜெயிக்க மீண்டுமொரு
வாய்ப்பு என்றினைத்து
அழைத்து சென்று விட்டார்........
நான் மீண்டும்
உறவையும் நாட முடியாமல்
நட்பையும் நாட முடியாமல்
இப்பவும்
நானுன்னை நேசிக்கின்றேன்...
அதிகமதிகமாய் நேசிக்கின்றேன்.....
என் அன்பை
என் காதலை
என்றாவது ஒரு நாள்
புரிந்துக் கொள்வாயென
காதலுடன் காத்திருக்கின்றேன்.....
என் இல்லறமே,
நீ என்னருகில்
இருக்கும் போது
உந்த னருமை
எனக்குத் தெரியவில்லை........
நீ என்னை விட்டுச்
சென்றவுடன்
நீ என்னை விட்டு
விலகிடுவா யொயென்று
என்னுயிர் என்னை
வதைக்கின்றது............
இன்று நான்
உதடுகளில் சிரித்தப் படி
வாழ்ந்தாலும்
உள்ளத்தில் நின் பிரிவால்
மரண வேதனையில்..........
காதலுக்குள்
ஊடல் வரலாம் ‍ ஆனால்
பிரிவு கூடாது
அன்பே.........
நின் தகப்பன் மீதான
கோபத்தில் என்
சொற்களால்
உன்னை வதைத்தேன்.....
அடிகளால்
உன்னை சிதைத்தேன்.......
அப்போது நான்
எண்ண வில்லை.........
நான்
வதைப்பதும் சிதைப்பதும்
என்மீது நீ
கொண்ட நேசித்த‌
அன்பையென்று...........
உன் தகப்பனை
நேசிப்பது தவறல்ல‌
ஆனால் அவர் செய்யும்
தவறினை எண்ணத்தினை
நீ உணரா திருப்பது தவறு.......
ஒரு நிமிடம்
எனக்காக என்னை நினைத்து
நம் வாழ்வைக் குறித்து
நீ முடிவெடு..........
உன்னைப் பெற்றவரே யானாலும்
நம் வாழ்வின் முடிவை
அவர் கையில் தராதே..........
பிறந்த புத்தாண்டில்
நான் என் தவறினை
உணர்ந்து விட்டேன்..........
நின் குடும்பம்
செய்த தவறினை
மன்னித்து மறந்து விட்டேன்............
நாம் தொடர்வோம்
நம் இல்லற பயணத்தை
அன்பு காதல் துணைக் கொண்டு......
நீயில்லாமல் நான்
உயிரில்லாத வெற்றுடல் தான்.........
மழையில்லாத மேகம் தான்......
மணமில்லாத மலர் தான்........
என் மீதான
கோபம் குறைய‌
ஆண்டுகள் பல ஆனாலும்
உனக்காக
காத்திருக்க தயார்......
அதை நீ எனக்குச் சொல்.......
உன் தகப்பனல்ல.......
நம் இல்லறத்தை
பிரிக்கும் உரிமையை
யார் அவர்க்கு கொடுத்தது?????
இப்பவும்
நானுன்னை நேசிக்கின்றேன்...
அதிகமதிகமாய் நேசிக்கின்றேன்.....
என் அன்பை
என் காதலை
என்றாவது ஒரு நாள்
புரிந்துக் கொள்வாயென
காதலுடன்
பல ஆண்டுகள் ஆனாலும் காத்திருக்கின்றேன்.....
உன்னுடன் மீண்டுமொரு
வசந்த வாழ்க்கை வாழ்
உன்னை நேசிக்க‌
உன்னை காதலிக்க‌
உன்னை சேயாய் கவனிக்க‌
உன்னுடன் தோழனாய் நட்புகொள்ள‌
உன் கணவனாய்
உன்னை
அணைத்திடவும் அரவனைக்கவும்..............
உலகமே எதிர்த்தாலும்
உன்னுடன் காதலாய் வாழ‌
என்னை நானே
தயார் படுத்திக் கொண்டேன்...........
எந்தன் அன்பே
உன்னிடம்
நான் **நோக்குவது
என்மீது தூய அன்பும்
நல் நட்பும்
நல் இல்லறமும்
என்னை நம்பும்
என்னை நேசிக்கும்
பெண்ணொருத்தியாய்
புத்தாண்டில் புதியவளாய் வா......
என்னுடன் வாழ‌
விரைவில் வா...........
இல்லையேல்
நீயே புன்னகையுடன்
உந்தன் கரங்களால்
விஷம் தந்து செல்..........
என் வாழ்வினை
ஆரம்பிக்க வா
அல்லது
என் வாழ்வினை
முடிக்க வா............
(** நோக்குவது : எதிர்பார்ப்பது என்ற அர்த்ததில்.....)

நீ வருவாயென....................


என் இனியவளே,,
வெயில் கொளுத்தும்
சாலையில் ஆறுதல் தரும்
மரம் போன்று என்
வாழ்வின் போராட்டத்தில்
என்னுடன் பங்கிட வந்தவளே........
நான் உன்னை
நேசிக்கின்றேன்.... விரும்புகின்றேன்
ஆனால் நீயோ
நானுன் அடிமையாக வில்லையென்று
சொல்கின்றாய்.......
இன்பத்திலும் துன்பத்திலும்
நானிருப்பேன் என்றாய்
ஆனால் இன்றோ ‍
துன்பமே நானானேன்
என்று சொல்லி சென்றாய்.....
உந்தன் வாழ்வை
உயரவைப்பேன் என்றாய்
ஆனால் இன்றோ
என் மதிப்பையும்
பாழாக்கிச் சென்றாய்........
மண‌மாலையிட்டு வந்தவள்
மரணத்தில் தான் பிரிவாள் என்றேன்
ஆனால் நீயோ
என்னினைவுகளுக்கு மரண மாலையிட்டு
சென்று விட்டாய்........
விட்டுக் கொடுத்தலும்
அன்பின் பகுதிதான் என்றேன்....
ஆனால் நீயோ
என்னை விட்டே
சென்று விட்டாய்..
நான் விதைக்கும்
தூய அன்பின் விதை
உன்னில் மட்டும்
நரகலான பலனைத்
தருகின்றதே எப்படி??????????
உன்னை நேசித்தேன்
கவிமொழி பாடினேன்
ஆனால் நீயோ
பொய் உதடுகளின்
பின்னால் சென்று விட்டாய்......
உன்மேல் கோபங் கொண்டேன்
கோபத்தில் தான்
அதிகமதிகமாய் நேசித்தேன் உன்னை
ஆனால் நீயோ
என்மேல் வெறுப்பை
உமிழ்ந்து சென்று விட்டாய்.......
உனக்கு அதிர்ந்து
பேசக்கூட தெரியாதென்றேன்
ஆனால் நீயோ
மன வன்மத்துடன்
புனித உறவுகளைக் கூட‌
கொச்சைப்படுத்தி சென்று விட்டாய்..........
சென்று மாதங்கள்
இரண்டானாலும் நீயோ
என்னைப் பற்றி
அவதூறுகளும் பொய்களும்
ஆனால் நானோ
உதடுகளில் பொய் புன்னகையுடனும்
உள்ளத்தில் அழுகையுடனும்
உன்னை நேசிக்கும் அன்பிலும்
என் நேசம் கொஞசம் கூட‌
குறைவில்லை மாசில்லை.......
அன்பே
விட்டுக் கொடுத்து
வாழ்வதில் தவறில்லை.....
ஆனால்
விட்டுக் கொடுத்துக் கொண்டேயிருந்தால்
அதன் பெயர்
வாழ்க்கையில்லை...
அது அடிமைத்தனம்......
நானுன்னை நேசிக்கின்றேன்....
என் அன்புக் கூட
உன்னை அடிமையாக்க கூடாது
என்பதில் நான்
தெளிவாக உள்ளேன்...
ஆனால் நீயோ
என்னை மிரட்டி
உன்னை நேசிக்க வைக்கலாம்
என்று நினைக்கின்றாய்.........
என்னவளே,
மிரட்டி உருட்டி
அடிமையாக்கலாம்......ஆனால்
தூய அன்பை வாங்க முடியாது...........
என் இனியவளே
வாழ்க்கை என்பது
எது வரை என்பது
எனக்குத் தெரியாது.....
ஆனால் வாழ்வது
ஒரு நாளாக இருந்தாலும்
அந்த ஒரு நாளில்
உண்மையும்
அன்பும் காதலும்
நட்பும்
பணிவும் திமிரும்
ஊடலும் கூடலும்
புதிதுபுதிதாய் ஊறிக்
கொண்டேயிருக்க வேண்டும்
என்று எண்ணுபவன் நான்........
அந்த ஒரு நாள்
என் கடைசி நாளாயிருந்தாலும்
பரவாயில்லை.......
என்னை நேசித்து
என்னை நம்பி
என்னை விரும்பி
என்னை புரிந்து
என்னை வழியனுப்ப
வந்தால் போதும்.........
காலமெல்லாம் காத்திருப்பேன்
என் காதலியாய்
என் அன்பாய்
என் மனைவியாய்
என் தோழியாய்
என் அன்னையாய்
நீ வருவாயென....................

தோற்றுப் பார்.......


என் நண்பனே,

தோற்றுப் பார்
வெற்றியின் அவசியம் தெரியும்
வெற்றியின் தூரம் தெரியும்
தோற்றுப் பார்
உண்மை உறவு தெரியும்
உண்மை நட்பு தெரியும்
தோற்றுப் பார்
உன் பலவீனம் தெரியும்
பலத்தின் அவசியம் தெரியும்
தோற்றுப் பார்
மனிதத்தின் நிஜமுகம் தெரியும்
இறைவனின் அன்பு தெரியும்
தோற்றுப் பார்
தோல்வியின் காரணிகள் தெரியும்
வெற்றியின் தேவை தெரியும்
தோற்றுப் பார் நண்பனே
ஜெயிப்பதற்கு முன்
முதலில் தோற்றுப் பார்.....
வெற்றியின் உயரம் தெரியும்
வெற்றியை தக்கவைக்க முடியும்........
தோற்றுப் பார்
உனது முயற்சியில்
தோற்றுப் பார் ஆனால்
முயற்சிப்பதில் தோற்றுவிடாதே.........
முயன்றுப் பார்
முயன்றுப் பார் மீண்டும்
முயற்சி செய்
தோறகும் வரை அல்ல‌
ஜெயிப்பது வரை.......

நேசித்துப் பார்......


என் நண்பனே,
நேசித்துப் பார்
குடும்பத்தை நேசித்தால்
பொறுப்புகளை உணரலாம்.......
நேசித்துப் பார்
உறவுகளை நேசித்தால்
இன்பத்தினளவு உயரலாம்.......
நேசித்துப் பார்
நட்பை நேசித்தால்
தனிமையினளவு குறையலாம்......
நேசித்துப் பார்
மனைவியை நேசித்தால்
அன்பின் எல்லை விரியலாம்........
நேசித்துப் பார்
குழந்தைகளை நேசித்தால்
துயரினளவு குறையலாம்.......
நேசித்துப் பார்
முதியோர்களை நேசித்தால்
வாழ்வின் அனுபவம் தெரியலாம்........
நேசித்துப் பார்
ஆதரவற்றோரை நேசித்தால்
உண்மை அன்பை தெரியலாம்.......
நேசித்துப் பார்
ஊனமுற்றோரை நேசித்தால்
இறைவனின் கருனையை தெரியலாம்.......
நேசித்துப் பார்
விலங்குகளை நேசித்தால்
அவற்றின் மொழி தெரியலாம்.......
நேசித்துப் பார்
வெற்றியை நேசித்தால்
வாழ்வின் போராட்டத்தை ரசிக்கலாம்.......
நேசித்துப் பார்
எவ்வித
எதிர்பார்ப்பில்லாமல்
நேசித்துப் பார்........
உன்னைப் போல்
பிறரையும் நேசித்து பார்
மனிதரில் மாணிக்கமாய் திகழலாம்........