வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, March 19, 2015

முகநூல் (FACEBOOK)

முகநூல்
எனக்கு முகமறியா
உறவுகளையும் நட்பாக்கி
தந்த நூல் இது!!!!!!
பல முகமறியா
உறவுகளை முகங்கண்டு
என்னை அவர்களுடன்
இணைய செய்திட்ட‌
நூல் இது.......

முகநூல் எனக்கு
சில உண்மை வரலாற்றினையும்
மறைக்கப்பட்ட சில
வரலாற்றினையும் நான்
அறியச் செய்திட்ட‌
வரலாற்று நூல் இது.......




முகநூல் முகமறியா
பலரின் அகச் செயல்களை
எனக்கு வெளிக் காட்டிய
நூல் இது!!!!!!

நட்புறவுகளைக் கொண்டு
சமூகத்திற்கு சிறிய‌
செயலை செய்திட‌
எனக்கு உதவிய நூல் இது!!!!!

சில நேரங்களில்
எனது சோகத்தையும்
எனது கிறுக்கல்களினால்
பகிர்ந்திட்ட நூல் இது..........

மனிதர்களில் எங்கே மனிதம்......?????


உறவுகளுக்குள் இல்லை
அன்பும் பாசமும்
சிறு பிரச்சனைக்கும்
ஒருவரையொருவர் கொன்று
பகைத் தீர்க்க‌
நேரம் பார்த்து
அலையும் மனிதர்கள்
எங்கே மனிதம் இவர்களில்......

திருமணம் முடிந்தபின்னும்
காதலுக்காய் தான் சுமந்த‌
பிள்ளைகளை கொல்லத் துணியும்
அன்னையர் ஒரு புறம்
எங்கே மனிதம் இவர்களில்.....!!
மகனில் வாழ்வில்
பங்குபெற வந்த
மருமகளை வரதட்சனை
பெயரினால் வாழவிடாது
கொடுமைச் செய்யும்
மாமியார்கள் ஒரு புறம்
எங்கே மனிதம் இவர்களில்......!!
ஈரைந்து மாதங்கள்
சுமந்து பெற்றெடுத்த‌
அன்னையினை அவள்
முதிர் வயதில்
வீட்டினில் சேர்க்காது
தள்ளி விடும்
மனிதர்கள் ஒரு புறம்
எங்கே மனிதம் இவர்களில்.......!!!
தகப்பன் சேர்த்த‌
சொத்துக்காய் தான்பிறந்த‌
வயிற்றில் பிறந்த சகோதரனையே
கொலை செய்யும்
மனிதரக்ள் ஒருபுறம்
எங்கே மனிதம் இவர்களில்......!!!
சாலையில் எல்லோரும்
கண் முன்பாகவே
மனித உயிர்களை
கொல்லும் கொடியவர்
ஒரு புறமிருக்க‌
ஆறறிவு உடையோர்
சுற்றி இருந்து பார்த்தும்
செல்களில் வீடியோ எடுக்கும்
மனிதர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்......!!!

வீட்டின் வெளியில்
கையேந்தும் பெண்களை
எட்டி உதைத்துவிட்டு
வீட்டினுள் சிலைக்கு
பாலாபிஷேகம் செய்யும்
மனிதர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்....!!!!
பிறக்கும் போதும்
இறக்கும் போதும்
நம்மோடு ஒன்றும்
வருவதில்லையென்று தெரிந்தும்
கோடிகோடியா சேர்த்து
பணத்தை அழகுப் பார்க்கும்
மனிதர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்.....!!!
காசு பணம் சேர்த்ததும்
உதவி தேடும் மனிதனை
மறந்து ..தான்
இறைவனைத் தேடி
ஊர் சுற்றும் பணக்கார‌
வர்க்க மனிதர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்......!!!!!
சாலையினில் விபத்தில்
அடிப்பட்டு கிடந்தாலும்
சட்டைப் பையினைத்
துழாவி கிடைத்ததை சுருட்டும்
மனிதர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்......!!
மது அருந்தி
விபத்து ஏற்படுத்தி
உயிர்களைக் கொன்றாலும்
பணம் இருந்தால்
"காக்காவலிப்பு வந்ததால்"
விபத்து என்றுரைக்கும்
காவலர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்....!!!
நட்பிற்குள்ளும் சுய‌
நலந்தோன்றி
உயிரையெடுக்கும் போலி
நண்பர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம் .....!!!




தனது வியாபார‌
நோக்கத்திற்காக மனிதர்
உண்ணும் உணவிலும் கூட
தவறானதை கலந்து
லாபம் பார்க்கும்
முதலாளிகள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்......!!
மதங்கள் காத்திடும்
மனிதர்களே நீங்கள்
கடவுளை காத்தது போதும்
இனியாவது கொஞ்சம்
மனிதத் தன்மையுடன்
மனிதர்களை காத்திட உதவுங்கள்....!!!!!!

"வார்த்தைகள்"

எழுத்துக்களின் கூட்டணியே
வார்த்தை!.........
எழுத்தில் இருந்தாலும்
சொல்லில் இருந்தாலும்
வலிமையுடைவை தான்
வார்த்தைகள்........
சில நேரங்களில்
ஓய்ந்து இருக்கும்
மனிதனையும் தட்டி
எழுப்பிடும் சில
வார்த்தைகள்...........
சில நேரங்களில்
ஓடிக் கொண்டிருக்கும்
மனிதனையும் தட்டி
ஓய்த்திடும் சில‌
வார்த்தைகள்...............
எழுத்துக்களின் கூட்டணி
தான் வார்த்தை.....

சில நேரங்களில்
ஒட்டி உறவாடும்
உறவுகளையும்
தள்ளிட செய்திடும்
சில வார்த்தைகள்..........

தோளோடு தோள்
நிற்கும் நட்பினையும்
மனதினில் பிரித்திடும்
சில வார்த்தைகள்...............

வார்த்தைகள்
நமக்குள்
இருக்கும் வரை தான்
பலனற்றவை....
ஆனால் சொல்லிலோ
எழுத்திலோ
புறப்பட்டு விட்டால்
தனது வேலையினை
சிறந்தே முடித்திடும்
வார்த்தைகள்.......

எழுத்துக்களின் கூட்டணி
தான் வார்த்தை....

"இது தான் இந்தியாவின் சட்டமா........"

ஆயிரக் கணக்கில்
வீட்டை வைத்து
நகையை வைத்து
கடன் வாங்கி
வாழ்க்கை நடத்திடும்
மனிதர்கள்
கடனை திருப்பி தர‌
இயல வில்லை யென்றால்
புகைப்படத்துடன் விளம்பரம்
செய்து சொத்தையும்
பறிக்கும் வங்கிகள்........

கோடிக் கணக்கில்
கடன் வாங்கி
கட்டா விட்டாலும்
அவர்களின் படத்தினை
போடுவதில்லை......
சொத்தினை ஏன்
பறிமுதல் செய்வதுமில்லை.......
ஏனோ........ ஏனோ

இது தான்
சம தர்மமா.......
இது தான்
இந்தியாவின் சட்டமா........
சட்டம் ஏழைகளை
மட்டும் தான் ஊனமாக்கிடுமா..........
        


13.03.2015 தினமலர் செய்தி ::::::

                   "தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் உள்ள, முதல், 50 நிறுவனங்களின் பட்டியலை, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகளுக்கு செலுத்தாத வராக் கடன் தொகை, 40,528 கோடி ரூபாய் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, ஐ.டி.பி.ஐ., மற்றும் வெளிநாட்டு வங்கிகளைத் தவிர்த்து, பிற வங்கிகளின் வராக் கடன் விவரங்கள் இவை என்றும், வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முதல் இடத்தில் உள்ளது."

எதிர்பார்ப்புகள் :::::::::::::::

செயலின் முடிவினை
நன்றாகவே முடிக்க
எண்ணுகின்றோம்.....ஆனால்
முடிவோ முடிவின்றி
மாறிடும் போது
செயல்கள் மட்டுமல்ல
நமது மனமும்
செயல்களை நிறுத்துகின்றது ஏனோ?????

எதிர்பார்ப்புகள் என்பது
பொய்யாகும் போது
செய்த செயல்களும்
பொய்யாய் மாறுகின்றது....
அதற்கான முயற்சிகளும்
கானல் நீராய்
மாறுவது ஏனோ?????

நினைத்தது
நடக்க வில்லை
என்பதை கூட‌
மனம் ஏற்க‌
தாமதிப்பது ஏனோ?????

செயல்களின் முடிவு
தோல்வி யென்றாலும்
நம் மனதை மட்டுமல்ல‌
உடலையும்
வருத்திடுவது ஏனோ?????

ஒன்றும் புரியவில்லை
எனக்கும் ஏனோ
மனதின் ஏக்கங்களையும்
சொல்ல தெரிவதில்லை
எனக்கும்................

எம் தலைவனும், சிங்கள அடிமையும்.


குச்சு குச்சு வண்டி ரயில் வண்டி

குச்சு குச்சு வண்டி
ரயில் வண்டி
புறப்பட போகுது
ரயில் வண்டி....
புகையை பின்னாடி
தள்ளினாலும்
முன்னாடி செல்லும்
ரயில் வண்டி
குச்ச்சு குச்சு வண்டி
ரயிலு வண்டி
வண்டியின் டிரைவர்
மாறியாச்சு......
பயணத்தின் வேகமும்
கூடியாச்சு........
ஒரே பாதையில்
சென்றாலும்
அனைவரின் பயணத்தையும்
நிறுத்திடும் வண்டி........
தடுப்பவர்களை எல்லாம்
மீறி சென்றிடும் வண்டி
இந்த ரயிலு வண்டி.........
புறப்பட போகுது
ரயிலு வண்டி........
இறுதி வரையிலும்
பயணஞ் செய்வோர் மட்டும்
ஏறி வாங்க வாங்க........
மற்றையோர் எல்லாம்
ஓரத்தில் இருந்து
வழியனுப்பிடுக ரயிலை......
குச்சு குச்சு வண்டி
ரயிலு வண்டி......
வண்டியின் வேகம்
கூட்டியாச்சு.......
நினைத்ததை அடைந்திடவே
புது வேகம் கூட்டியாச்சு
வண்டியின் டிரைவர்
மாறியாச்சு..........
ஓய்வுகள் இனியில்லை
ரயிலுக்கு
செல்லுமிட மெல்லாம்
இனி தடையில்லை
பயணத்திற்கு......
தடைக ளெல்லாம்
ஒதுங்கி நிற்கும்
ரயிலு வண்டிக்கு
வழியில் நிற்காது!!!!!



குச்சு குச்சு வண்டி
ரயிலு வண்டி..........
புறப்பட போகுது
ரயிலு வண்டி..........
வண்டியின் பாதை
மாறிடாது...... பாதையில்
தடைகள் வந்திடாலும்
பயணம் நின்றிடாது.......

செல்லும் இடம்
தெரிந்த வண்டி
ரயிலு வண்டி......
விரைவில் அடைந்திடும்
ரயிலு வண்டி.....
குச்சு குச்ச்சு வண்டி.....
ரயிலு வண்டி....