வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, December 2, 2014

டிசம்பர் : 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

டிசம்பர் : 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

உடலின் ஊனத்தை
தோற்கடித்து
மனதில் ஊனமில்லாமல்
வாழ்வில் போராடும்
நாயகர்களுக்கு
என் வாழ்த்துக்கள்...........






















Wednesday, September 17, 2014

தமிழீழம்...........தமிழீழம்..........

தமிழீழம்
நாங்கள் விலைக்கு
வாங்கிய பூமியில்லை
எங்கள் சகோதர சகோதரிகளின்
குருதியினை விலையாக கொடுத்து
அடைந்த புண்ணிய பூமியடா.......!

 குணிந்தே இருந்த‌
தமிழனை நிமிர்ந்து 
நடக்கச் செய்த பூமியடா!! 
பழம்பெருமை பேசி பேசி
வீணாய் சென்ற வாழ்வினில்
வீரத்தின் மதிப்பினையும்
தியாகத்தினையும் 
காணச் செய்த பூமியடா........
ஜாதி மத மோதல்களில்லாது
தமிழராய் தமிழராக‌ 
வாழச் செய்த பூமியடா.....
தூய‌ தமிழ் மொழியினையும்
வளரச் செய்து
தமிழரின் பண்பினையும்
காத்திட பூமியடா!!!!

யாசகம் கேட்போரில்லாது
வரதட்சனை சாவுகளில்லாது
வீரத்தில் விளைந்த‌
புண்ணிய பூமியடா!!!!

உலகமே எதிர்த்தாலும்
தமிழர் வாழ ஒரு 
சிறந்த கட்டமைப்பினை
பசியினால் மரணமில்லாத‌
வாழ்வு கொடுத்த பூமியடா!!

காமத்தை வளர்க்காது
தூய காதலை வளர்த்த‌
புண்ணிய பூமியடா........

தமிழ் தமிழென்று
மேடைப் பேச்சினில் மட்டுமல்ல‌
இலக்கியத்திலும் வாழ்வியலிலும்
சமூகத்திலும் தமிழினை
வளர்க்கச் செய்த பூமியடா......

பணத்திற்காய் அல்லாது
இனத்திற்காய்
உயிரையும் கொடுத்து
தமிழினத்தினை காத்திடும் 
புலிகள் கொண்ட பூமியடா..............

மரணமே என்றாலும்
தமிழினத்திற்காய்
புன்னகையுடன் ஏற்றிடும்
மாவீரர்கள் கொண்ட பூமியடா........

உலகிலுள்ள ஒவ்வொரு 
தமிழரும் வாழ‌ 
நினைத்திடும் ஒரு 
புண்ணிய பூமியடா........

இன்றுமென்றும்
தமிழரினை தூய‌
மொழிப் பற்றுடனும்
இனப் பற்றுடனும்
காதல் உணர்வுடனும்
தூய கலாச்சாரத்துடனும்
தூய தோழமையுடனும்
வாழ வளர வைக்க‌
களம் காண‌ 
துடித்திடும்  பூமியடா
 எங்கள் தமிழீழம்!!!1
புண்ணிய பூமியடா!!!!!

என்றும் என் தோழியவள்......................

பக்கத்து வீட்டில் குடியிருந்து
அறிமுகம் ஆனாய்
எதிரெதிர் பார்க்கையில் புன்னகையால்
பழக்கம் ஆனாய்
தண்ணீர்க் குழாயடியில் பேசிபேசி
தோழமை யானாய்!
ஒருவடொருவர் மனம்விட்டுப் பேசி
தோழி யானாய்!

என் இன்பத்தை மட்டுமல்ல‌
துயரினையும் உரிமையோடு
கேட்டு பங்கிட்டாய்
பள்ளி நிகழ்வுகளோடு
வீட்டின் துயரையும்
பகிர்ந்துக் கொண்டாய்!

உன் பெற்றோர்
நம்மைப் பற்றி 
விசாரித்த பொழுதும்
தெளிவாக உறுதியாக‌
சொன்னாய் நான் 
"உன் தோழனென்று"

நிகழ்கால சோகத்தோடு
எதிர்கால லட்சியத்தையும்
சொல்லி வியப்படைந்தாய்

என் திறமையினை
கண்டும் ஆச்சரியமுற்றாய்
அதே சமயத்தில்
என் தவறினைக்
கண்டும் திருந்தச் செய்தாய்!

வயதின் கோளாறால் 
தடுமாறிய போதும்
உறுதியாக 
புரிந்து புரிய வைத்தாய்!

உடல்நிலை 
சரியில்லாத பொழுதும்
அன்னையைப் போல்
தலைக் கோதிவிட்டு
அன்பின் வார்த்தைகளினால்
ஆறுதல் தந்தாய்!

நமக்குள் இவ்வாறு
நட்பு வளர்ந்தாலும்
அடுத்தவர் பார்வைக்கும்
கண்ணியமாய் 
நடந்துக் கொள்ள வைத்தாய்!

உன் தோழிகள்
நம் நட்பினை பகிர‌ 
வந்தபோது சண்டைக் கோழியாய்
சீறி விலக வைத்தாய்!

அடுத்தவர் உன்னிடம்
என் குறையினைப் பற்றி
தவறாக சொல்லிய போதும்
"என் நண்பன்" என்று
பெருமையாக சொல்லி
வாய் மூட வைத்தாய்
அதே நேரத்தில் 
தனிமையில் சந்திக்கும் போது
யாருமறியாது என் 
குறையினை சுட்டிக்காட்டி
கண்டித்திடும் ஆசிரியை ஆனாய்.........

நட்பா காதலா
என்று அறிந்தோர் கேட்கையிலே
மாறிடும் காதல் அல்ல‌
மாறிடா  நட்பு அவன்
எந்தன் நண்பன் என்றென்றும்
என்று சொல்லி
நட்பிற்கு மரியாதை செய்தாய்...........

சண்டைகள் என்னிடம் போட்டு
பேசாமல் நான் இருந்த போதும்
நீ கோயிலில் தவறாது
எனக்காக பிரார்த்தனை செய்தாய்!

வாலிபத்தில் வந்த‌
காதலில் நீ தோற்ற‌
போதும் கூட‌
நான் வாழ்வில் 
ஜெயிக்க வேண்டுமென்று
எனக்கு உரமேற்றினாய்!

உன் இன்பங்களை
என்னிடம் சொல்லாவிட்டாலும்
நின் கண்ணீரினை
என் முன்பாகவே சொல்லி
நட்பினை வாழ வைத்தாய்!

திருமணத்தன்றும் எல்லோர்
முன்னிலையிலும் 
உன் கணவரிடம் பெருமையாக‌
அறிமுகம் செய்தாய்
"நண்பனென்று"

இன்னுமெத்தனை ஜென்மம்
எடுத்தாலும்
என் தோழியாய் 
நீ ஒருவள் போதுமடி எனக்கு!

இணையத் தோழி ஜெப‌-ராணி...........(பாகம் 2)

யாஹூ சாட் மூலம்
முகமறியா தோழியாய்
அறிமுகம் ஆனாய்!

தினந்தோறும் எழுதிய‌
வார்த்தைகளால் பேசிப்பேசி
போன் நம்பரும் தந்தாய்
நட்பினைத் தொடர‌!

தினந்தோறும் வீசிடும்
புதிய தென்றல் போல‌
சுவாஷிக்கும் காற்றினைப் போல
ஒவ்வொரு நாளும்
புத்தம் புதியதாய்
நம் நட்பும் வளர்ந்ததடி!!

கல்லூரி செல்லும்
மாணவி என்றாலும்
தாய்க்குரிய கனிவும்
அன்பும் உன்னிடம் 
என்னை கவர்ந்ததடி!!

குடும்பத்தை விட்டு
பிழைப்பிற்காய் நான் 
வெளியூரில் இருந்தாலும்
உன் நட்பு இருந்ததினால்
பிரிவும் தெரியவில்லை எனக்கு!

ஒவ்வொரு நாளும்
என்னைப் பற்றிய 
விசாரிப்புக் களுக்காகவே
தினமும் என் கடமையினை
தவறாது முடித்திடுவேன்!!

வேலைப் பளு
மிகுந்து அதனை
என்னால் முடிக்க முடியுமா
என்றெண்ணி உட்கார்ந்திடும் போதும்
உன்னால் முடியும் முயன்றுப் பார்
என்னை வார்த்தையினால்
தோளில் தட்டியவள் நீ!!!

தகுதிக்கு மீறி முயன்று
பெரும் இழப்பை சந்தித்து
அழுதிட்ட வேலையிலும்
என்ன நடந்துவிட்டது
இன்னும் உயிரோடு தானே
இருக்கின்றாய், எழுந்திடு
என்று ஒரு தோழிக்குரிய‌
கடமையினை செவ்வனே செய்தாய்!!

மனம் சோர்ந்து 
நான் இருக்கையிலே
எனக்கு புத்துயிர் 
தந்தது உன் வார்த்தைகளே..............

கல்லூரி படிப்பிற்காய்
ஹாஸ்டலில் சேருகின்றேன்
என்று சொன்னாய்
நானும் விடைக் கொடுத்தேன்
ஆனால் அதுவே
நம் நட்பிற்கு முடிவாகிவிட்டது!!

வாழ்க்கை எனும்
பயணத்தில் நாம்
எண்ணற்ற பலரோடு
அறிமுகம் ஆகி
நட்பாய் பழகினாலும்
விட்டு விலகிச் சென்ற‌
உன்னை மட்டுமே
மனம் மீண்டும் மீண்டும்
நாடுகின்றது தோழியாய்.................

உந்தன் நட்பினை
மீண்டும் அடைய‌ 
நான் எடுத்த முயற்சிகள்
பல என்றாலும்
ஒன்றும் பலனடையவில்லை....
எனினும்
ஆண்டுகள் கடந்தாலும்
தூரங்கள் இருந்தாலும்
நம் நட்பின் 
நினைவுகள் என்றென்றுன்
என்னுள் மாறாமல்  வாழும்.......

Friday, September 5, 2014

எனது மகன் முதலில் பள்ளியில் சேர்ந்த‌ நாள் :::

செப்டம்பர் 1 : எனது மகன் முதலில் பள்ளியில் சேர்ந்த‌ நாள் :::
(மழலைப் பள்ளியில்)

வீட்டினில் பட்டாம்பூச்சியாய்
புன்னகைப் பூவாய்
சுட்டி தனங்களோடு
குட்டி ராஜாவாய்
உறவுகளோடு கும்மாளமிட்டு
வலம் வந்து திரிந்த‌
எனது மகன்
உலகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள‌
ஒரு மாணவனாய்
முதன்முதலில் பள்ளியில்
சேர்ந்து விட்டான்.

அவனை பள்ளியில்
விடும் போது
அவன் கத்திய‌ அழுகுரலில்
"அப்பா ஏனப்பா அதுக்குள்
என்னையும் புஸ்தக‌ சுமையினை
சுமந்திட‌ அதற்குள்
தயாராக்குகின்றாய்" என்று
கேட்பது போல்
உள்ளது என்னிடம்................

Tuesday, February 18, 2014

உறவில் விரிசல்......

உறவுகளில் உறவுகளுக்குள்
 அன்பு நட்பு என்ற
 மலர் மலர்ந்திருக்கும் போது
விஷயங்கள் இல்லாவிடினும்
மணிநேரக் கணக்கில்
செல்பேசியில் உரையாடல்
நடக்கின்றது.....
தலைப்பு எதுவும்
இல்லாமலே
பேசி முடித்தப்பின்னும்
மனதில் சொல்லிமுடியா
மகிழ்ச்சி வருகின்றது......
ஆனால் அந்த உறவுகளில்
அன்பு நட்பு என்ற‌
மலரில் கிழிசல்கள்
உண்டாகும் போது
கடமைக்காக பேச எண்ணினாலும்
உரையாட மனம் விரும்புவதில்லை
பேசும் வார்த்தைகளிலும்
உயிர் இருப்பதில்லை............
பேசி முடித்தப்பின்னும்
மனதில் ஏனோ
இனம்புரியாத வெற்றிடம்
தானாகவே வருகின்றது......

வேண்டும் வேண்டும் காதல் வேண்டும்

காதல் வேண்டும் 
வேண்டும் காதல்
வாழ்கின்ற‌ வாழ்க்கையினை அனுபவித்திட‌
வாழ்வில் காதல் வேண்டும்
நமக்காய் வாழ்வோரை நேசித்திட‌
காதல் வேண்டும்
இயற்கையினை காத்திட அதனை
ரசிக்கும் காதல் வேண்டும்.....
நாம் செய்யும் பணியினை நேசிக்க 
காதல் வேண்டும்
இலட்சியத்தில் முன்னேறிட 
கனவுகளில் காதல் வேண்டும்.......
எண்ணியதை அடைந்திட விடா
முயற்சியில் காதல் வேண்டும்............
இறந்தபின்னும் வாழ்ந்திட அனைவரையும்
நேசிக்கும் காதல் வேண்டும்...........

போதை போதை.........

தெருவில் தனியாக 
சென்றுக் கொண்டிருந்தேன்.
மனதில் சிந்தித்துக் கொண்டே.....
வாகனகங்கள் இருபுறமும்
ஒன்றையொன்று முந்துவதில்
போட்டி போட்டுக் கொண்டு
சென்றுக் கொண்டிருந்தன‌....
மனித தலைகளும் 
முண்டியடித்து சென்றன‌....
சாலை ஓரத்தில்
எதையுமே பொருட்படுத்தாது
எதையுமே காண முடியாது
போதையில் ஒரு ஜீவன்
உறங்கியதா அல்லது மயங்கியதா
என்றுத் தெரியாமல்
தன்னிலை மறந்து 
படுத்துக் கிடந்தது.....
போதை போதை 
அவன் உண்ட போதை
இப்போது அவனையே உண்டு
அவனையே மேற்கொண்டு விட்டது....
என் மனமோ சிந்தித்தது..
போதை போதை....
இவன் குடித்த போதை
வெளிப்படையாக எல்லோருக்கும்
தெரிந்தது... ஆனால் 
ஒவ்வொரு மனிதருமே
போதையை தேடித் தான்
வாழ்கின்றனர் 
தேடும் வரைக்கும் போதை
தேடியது கிடைத்த‌ போதோ
போதை நம்மை 
மேற்கொள்ளும் என்றது என்மனம்
ஆம் உண்மைத் தான்.........
படிக்கும் மாணவர்க்கு
தேர்வில் நல்நிலையில் 
ஜெயிக்க வேண்டுமென்ற போதை....
படித்து முடித்தோர்க்கு
உயர் ஊதியத்தில் வேலை
கிடைக்க வேண்டுமென்ற போதை..........
வேலையில் உள்ளோர்க்கு
அழகான மனைவி 
கிடைக்க வேண்டுமென்ற போதை........
பணமில்லாதவர்க்கு
வாழ்வில் அனுபவிக்க‌
பணம் வேண்டுமென்ற போதை......
பணமிருப்போர்க்கு
பணத்தை செலவழிக்க 
வேண்டுமென்ற போதை....................
எல்லாம் சலித்தோர்க்கு
இறை வழியில்
அமைதி வேண்டுமென்ற போதை...........
வியாதியில் இருப்போர்
வாழ்வினை முடிக்கவெண்ணி
மரணம் வேண்டுமென்ற போதை.....
எல்லாம் கிடைத்து விட்ட போதோ
உலக வாழ்வு முடிந்து
வாழ்ந்த அர்த்தமில்லாமல்
வெறும் போதையோடு
போதை நம்மை மேற்கொண்டு
இதயத்தை நிறுத்துகின்றது........
பணம் படிப்பு
பதவி ஆடம்பரம் 
இருந்தாலும்  உயிரெனும்
போதை இல்லாவிட்டால்
யாரும் பிணமே...............
உண்மைத் தான் 
ஒவ்வொருவருமே ஒரு 
நாள் நம்மையும்
போதை மேற்கொள்ளுமென்று
தெரியாமல் போதையினை
தேடிக் கொண்டுதானிருக்கின்றோம்.............