வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, May 17, 2017


                       ************** மே 17 -2009 **************


சர்வ உலகமே
தமிழீழத்தில்
தமிழர்களாய் பிறந்திட்ட
காரணத்தினால் கைவிட்ட நாள்!

                                   Image may contain: outdoor
உலகினில் வாழும்
எல்லா கடவுள்களும்
நாங்கள் தமிழர்கள்
என்பதினால்
செவிகளையும் விழிகளையும்
மூடிக்கொண்ட நாள்!
விழிகளுக்கு முன்னால்
உறவுகளின் மரணங்கள்
சடிதியில்…… வருவது அறியாது
வீழ்ந்தனர் சடலங்களாக
வாழ்ந்த மண்ணில்!

                          Image may contain: sky and outdoor

உலகைக் காண
கர்ப்பத்திலிருக்கும்
குழந்தையும் தாயின்
வயிற்றினை கிழித்து
சடலமாக தூக்கியெறிந்தது!!
விண்ணில் இருந்து
கொத்து கொத்தாக
வீசப்பட்ட
கொத்தணி குண்டுகள்
ஈவு இரக்கம் பாராது
தமிழர்களின் உடம்பினை
சல்லடையாக்கி துளைத்தது!

தோளின் மேல்
குழந்தையை தூக்கி
ஓடி ஒளிந்திட்ட தந்தையின்
கரத்தில் இருந்தது
தலையில்லாத குழந்தையின் உடலே!!

செழிப்பான தமிழீழ
மண்ணில் எங்கும்
மனிதர்களின் உறுப்புகள்
தனித்தனியே சிதறல்களாய்!!

பச்சிளங் குழந்தைகளும்
கர்ப்பினிப் பெண்களும்
உறுப்புகளையிழந்து
மருத்துவதிற்கு வசதியின்றி
அழுகுரல்களின் ஓசை
விண்ணைத் தொட்ட தினமிது!

Image may contain: one or more people, people standing, beach, ocean and outdoor

சடலங்களைக் கண்டு
அப்பா என்றும்
அம்மா என்றும்
சொல்லி அழுவதற்கு கூட
நேரமில்லை….. புதைத்திடாமல்
மண்ணிலே விட்டுவந்தோம்!

வாய்க்காலிலே எங்கள்
உறவுகளின் சடலங்களை
ஒதுக்கிவிட்டு எங்களின்
தாகந் தீர்த்தோம்!!

எங்கும் மரணம்
எங்கும் ஊனம்
கண்டு கண்டு அழுதழுது
எங்களின் கண்ணீரும்
வற்றியது!!

தமிழீழ மக்களின்
விடுதலைக்காகவும்
தமிழீழ மக்களின்
சுதந்திர வாழ்விற்காகவும்
ஆயுதமேந்தி போராடியவர்களின்
சடலங்கள் வீதியெங்கும்
வீரவணக்கம் செலுத்திடவும்
இயலாத நிலையில்!

எங்கு போகின்றோம்
எங்கு ஓடுகின்றோம்
என்றறியாமலே
ஓடினோம் உயிர்த் தப்பிட!!

காயங்களோடு உயிர்ப் பிழைத்திட
போராடிய எங்கட பிள்ளைகளின் மேல்
கனரக வாகனங் கொண்டு
மண்ணோடு மண்ணாக்கினான் எதிரி!

விழிகளுக்கெதிரே
எங்களுக்காக போரிட்ட
எங்குல நாயகர்களை
அப்பொழுதும்
நேர்க்கு நேரல்லாது
பின்னால் நின்று
சுட்டுக் கொன்று
கூச்சலிட்டான் சிங்களவன்!

முள்ளிவாய்க்காலும்
நந்திக்கடலும்
தமிழர்களின் செங்குருதியினால்
குளித்திட்ட தினமிது!