வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 8, 2019

தவமாய் தவமிருந்து.........

மார்கழி குளிரில்
அதிகாலையில்
நீராடி
ஈரக் கூந்தலுடன்
சாலையில்
நீர்த் துளிகள் சிதறிட
ஆதாம் காலத்து
தேவதையாய்
அன்ன நடை
பயின்று செல்கின்றாள்!!!
அவள் கூந்தலில்
சூடிய மலருக்கும்
மணந்தருகின்றாள்!!!
அவள் காலில்
சுற்றிய கொலுசிற்கும்
சிரிப்பொலி தருகின்றாள்

                                        
நீரின்மேல் தெரிந்திடும்
அ்ல்லி மொட்டாய்
அவள் முகம்
மலர்ந்தும் மலராத
வெட்கத்துடனும்
அவள் விழிகளில்
நாணத்துடனும்
நடக்கின்றாள் முன்னாடி
அவளை பார்த்திட்ட
விழிகளும் செல்கின்றதே
அவள் பின்னாடி!!
நின் வெண்
பற்களை கண்ட
வெண்ணிலவும்
மறைகின்றானடி
வெட்கத்தில்!!!!
உன் ஒளிர்ந்திடும்
விழிகளை காண
ஆதவனும் கிழக்கில்
ஒளிந்து பார்க்கின்றானடி!!!
இறைவனை தரிசிக்க
நீயோ செல்கின்றாய்
உன்னை தரிசித்திட
இளங்காளைகளின் மனங்கள்
உன்னை நாடியே
தவங் கிடக்கின்றது பெண்ணே!!!!!

Tuesday, August 6, 2019

இவனே என் கண்ணன்


மனதின் எண்ணங்களை
கருவாக்கி
தமிழ் மொழியால்
உறுப்புகள் வளர்த்து
கவியெனும் குழந்தையை பிரசவித்து
மென்மேலும் சிந்தனையால்
எழுத்துருக் கொண்டு செதுக்கி
செதுக்கியதை மீண்டுமொரு
முறை மேற்பார்வையிட்டு
குறைகளை நீக்கி
பிறர் பார்வையில் பெருமையடைய
மேடையேற்றுகின்றேன்!!!

என் கோபத்தையும்
என் உணர்ச்சிகளையும்
உணர்வுகளின் தீண்டலையும்
சமூக சாடலையும்
காதலின் பண்பையும்
நட்பின் அன்பையும்
மனைவியின் காதலையும்
ஒருங்கே உருவமாக்குகின்றேன்
இவனே என் கண்ணன்!!!

அழகின் ரசனையையும்
இயற்கையின் அழகினையும்
செயல்களின் வெளிப்பாட்டையும்
எழுத்துக்களால் வடிக்கின்றேன்
கவியெனும் சேயாய்!!
விண்ணின் மழைத்துளி
கண்ட பூமியினைப் போல்
மலர்கின்றேன் நானும்
என் கவிக்குழந்தையினை
மேடையேற்றியவுடன்!!!
தான் பெற்றெடுத்த
குழந்தையினை பிறர்
சான்றோன் எனச்
சொல்லிடும் பொழுது
பெருமிதம் அடைந்திடும்
அன்னையைப் போல்
பெருமைக் கொள்கின்றேன்
என் கவிதைக்கு கிடைத்திடும்
விமர்சனங்கள் கண்டு!!
நான் எழுதிடும்
சொற்களின் கூட்டணி
கவிதையா யென்பதை
நானறியேன் ஆனால்
என் மனதின் வெளித்திரையே
இவன்…. இவனே
என் கண்ணன்