வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, March 26, 2019

எங்கே எனது கவிதை

>>>>>>>>>>எங்கே எனது கவிதை
சரணத்தில் கலந்து
ராகத்தில் மெருகேறிய
என்னிசை இன்று
என்னை மட்டும்
ஒலியில்லா இசையாய்
மாற்றி சென்றதேனோ!
உணர்வில் மறைந்து
உயிரில் ஒன்றிய
என் காதலும் இன்று
உயிரை மறைத்தே
வேடிக்கை பார்ப்பதேனோ!
ஒவ்வொரு இதயத் துடிப்பிலும்
ஜனனமாகிய அவளின் காதல்
இப்பொழுது துடிப்பையே
பாரமாக்குகின்றதே!
ஆழ்கடலில் மூழ்கி
மகிழ்ந்திட்ட கடலுயிரியாய்
சிறந்தே விளங்கிய எங்காதல்
நீரின்றியே சுடுமணலில்
தத்தளித்து துடிக்கின்றதே!
வார்த்தைகளில் சொல்லிட இயலா
அன்பின் ஊற்றானவள் - இன்றைக்கு
என்னை தண்டித்தே தன்னுள்
தன்னை உருக்குவதுமேனோ!
என்னிரவு பொழுதுகளும்
வெண்ணிலா இல்லாத வானமாய்
இருளோடு கழிகின்றதே!
சில்லுசில்லாய் இதயக் குடுவை
உடைந்திட்டாலும் -துகள்கள்
ஒவ்வொன்றிலும் உந்தன்
காதல் நினைவுகள் தானடி!




நடக்கின்றேன் நடைப் பிணமாய்
நிழலை மறந்திட்ட நிசமாய்
உயிரை உணராத ஜடமாய்
சிறகொடிந்த பறவையாய்
வாழ்கின்றேன் நிமிடங்களையும்
யுகங்களாய் எண்ணியப்படியே!
தோல்விகளும் புதியதில்லை
இழப்புகளும் புதியதில்லை
தோல்விகளிலும் தொடர்ந்தட்ட
நம்பிக்கையாய் அவள்காதல்
இன்றைக்கு கானல் நீரானதே!

Wednesday, March 20, 2019

நான் ரசிக்கும் அழகே...........


பாவை உந்தன்
வில் புருவத்தில்
காதலெனும் அன்பேற்றி
பேதை எந்தன்
நெஞ்சில் வீசினாயே!

அழகிற்கு மேலும் அழகாய்
உந்தன் விழிகள்!
விழிகளின் பார்வை எந்தன்
உயிரையும் உறைய வைக்குதடி!

உன்னைக் கண்ட நொடிமுதலாய்
என்னை இழந்தே இருக்கின்றேன்
உந்தன் வெட்கமெனும் ஆடைவிலக்கி
மென்னுதடுகளால் மறுமொழி சொல்லடி!
         

உந்தன் பிறை நெற்றி ரசித்தே
எந்தன் பசியும் மறந்தேனடி!
முகமறைக்கும் விரல்கள்
மென்மையின் உருவகமடி!

Thursday, March 14, 2019

போகுதே......போகுதே....

விழிகளின் முன்னே
பிரிந்து செல்கின்றதே
என்னுயிரும்!
கவிதையாகும் முன்பே
சிதறியே சிதைகின்றதே
என் எழுத்துகளும்!
ஓவியமாகும் முன்பே
காற்றில் கரைகின்றதே
என் தூரிகைகளும்!
சிற்பமாகும் முன்பே
உடைந்து போகின்றதே
என்மன உளிகளும்!
உந்தன் தனிமையிலும்
தொடர்வேன் இனிமையான
நினைவாய்! -
விரைந்தே வந்திடு!

Friday, March 8, 2019

பெண்ணெனும் பேரழகு....

********* பெண்ணெனும் பேரழகு

பாரதி விரும்பிய புதுமைப் பெண்ணாய்
வாழ்ந்திட்டாலும் நடந்திட்டாலும்
பெண்மையின் குணங்களை
அணிந்து சென்றிடும் பெண்ணே பேரழகு!

அநீதி கண்டு ஒதுங்கி செல்லாமல்
எதிர்த்து நின்று போராடிடும்
இன்றைய நவீன கண்ணகிகளே பேரழகு!



மணமுடித்தவன் சிறு விரிசலென்றாலும்
பேசிடும் தொலைபேசியில் குடும்பத்தை பிரித்திடும்
இழிசெயலுக்கு அடங்கிடாது
எதிர்த்து நின்று போராடி ஒட்டுமொத்த
பெண்ணினத்திற்கும் விடுதலை வாங்கிய
பெண்களே பேரழகு!

கோபத்திலும் வார்த்தைகளை
அடுத்தவர் மனம் புண்படாது பேசிடும்,
துயரங்களை அடுத்தவர் தோளில் ஏற்றிடாது
அடுத்தவர்க்கு ஆதரவாய் வாழ்ந்திடும்
பெண்ணே பெண்களிலெல்லாம் பேரழகு!
 —

Thursday, March 7, 2019

சொல்லாதே யாரும் கேட்டால்

>>>>>>சொல்லாதே யாரும் கேட்டால்

இனியவளே
நம் காதலை
காற்றிடம் சொல்லிவிடாதே
காற்றின் ஈரப்பதம்
மறைந்துவிடுமே!
நம் காதலை
மலரிடம் சொல்லிவிடாதே
மலரும் மணத்தை
இழந்துவிடுமே!


நம் காதலை
நிலவிடம் சொல்லிவிடாதே
நிலவும் தன்னொளியை
அகற்றிவிடுமே!
நம் காதலை
யாரிடமும் சொல்லிவிடாதே!
பொறாமையில் மறைந்திடுமே!

வெறுமையாய் என் வானம்...

உந்தன் மன்னவனின் இதயத்தில்
அடித்திடும் முரசொலிகள்
நின் செவிகளில்
இன்னும் எட்டவில்லையோ அன்பே!
நின் பெயரையே இசைத்திடும்
மன்னவனின் இதயத்தாளம்
உன்றன் மனதை தான் மயக்கவில்லையோ!!
இன்னும் அன்பே!


நிலவில்லாத வானமாய் 
வெறுமையாய் காட்சியளித்திடும் 
என் வாழ்வின் வலிகள்
மங்கை உந்தனுக்கு புரியவில்லையோ அன்பே!

Wednesday, March 6, 2019

பறையடி பெண்ணே...... பறையடி

>>>>>பறையடி பெண்ணே.........

பறையடி பெண்ணே
பறையடி!
ஓட்டுரிமையை விலைப்பேசும்
மாக்கள் திருந்திட பறையடி!
ஓட்டுக்காய் காலில்விழும்
அரசியல் வியாதிகள் நீங்கிட
பறையடி பெண்ணே பறையடி!
ஏழை மக்களின்
வலி உணராது
பணக்கார வர்க்கத்திற்கு
சாமரம் வீசிடும் தலைமைகள்
தலை சாய்ந்திடும் மட்டும்
மதசாதி மோதல்களினால்
ஆதாயந் தேடிடும்
கயவர்களை சமூகத்தை விட்டு
அகற்றும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
உணர்வுகளை மழுங்கடித்து
சாக்கடையில் விழவைத்திடும்
மதுவை அகற்றும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
கவிஞர்களின் பேனா முனைகள்
நடுநிலையோடு சமூகத்தை
சீரமைக்கும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
தமிழகத்தின் வளங்களை
சூறையாடிடும் திருடர்களை
தமிழர்களே விரட்டி அடித்திடும்வரை
பறையடி பெண்ணே பறையடி!
கட்சிக்காரன் அல்ல
சாதிக்காரன் அல்ல
மதத்துக்காரனாய் அல்ல
தமிழர்களாய் மக்கள்
ஒன்றிணையும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!

இனியொரு மீனவன்
சிங்களவனாய் தாக்கப்படுமுன்
பறையடி பெண்ணே பறையடி!
தமிழர்கள்
இன உணர்வோடும்
மொழி உணர்வோடும்
வீறுகொண்டு எழும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
அநியாயமாய் கொடூரமாய்
கொன்றொழிக்கப்பட்ட
ஈழத்தமிழர்களுக்கு
நியாயம் கிடைக்கும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!



பறையடி பெண்ணே பறையடி!
தமிழகத்தில் தமிழர்கள்
உரிமையோடும் சுதந்திரத்தோடும்
வாழ்ந்திடும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!

Monday, March 4, 2019

>>>>>>>> என்னோடு வருவாயென.....

>>>>>>>> நீ வருவாயென......

ஆளில்லாத கொடும் எந்தன்
பாலைவன வாழ்விலும்
சிலகாலங்கள் - நிழல்தந்திடும்
மரங்களாய் உன் காதல்!
புரிய வைத்திடவும்
புரிந்துக் கொள்ளவுமே
முயன்றேன் அதிகமாய்
உள்வாங்கிய காதல் அழகே!


அன்றைக்கு தென்றலாய்
வீசிட்ட காதலும் - இன்றைக்கு
காதல் கோட்டையை அசைத்தே
சூறையாடிடும் புயலாய் வீசியதே!
நான் பாடிய குறும்பா
உன் செவிகளில்
எட்டவில்லையே!
நான் எழுதிய கிறுக்கல்கள்
உன் விழிகளில்
பட வில்லையே!
விசமென்று தெரிந்தும்
என்னைத்தேட வைக்கின்றது
உன் மறுதலிப்புகள்!
என்னிலை மறந்தே
உன்னை நெருங்கியே உந்தன்
அன்பினை நாடுகின்றேன்!
உயிரிலும் உணர்விலும்
நினைவிலும் அணுவிலும்
கலந்திட்ட என் காதலை
வார்த்தையில் கொன்றிட நினைப்பதுமேனோ?
பூந்தோட்டத்தில் மலரில்லாத
காம்பாய் நான்மட்டும் தனியே
விழுந்தாலும் - மீண்டும் நீ
வருவா யென்றெண்ணியே
காத்திருக்கின்றேன்!