வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, June 14, 2011

என் வாழ்க்கைத் துணை

(எனது கல்லூரியின் இறுதி ஆண்டில் எழுதியவை)

நான் காணாத இறைவா,

என் இள வயதில்
காதலியாய்

என் நடு வயதில்
தோழியாய்

என் முதிர் வயதில்
அன்னையாய்
என் வாழ்க்கைப் பயணத்தில்
என்னுடன் பயணிக்க‌
எனக்காய் ‍
எனக்காக மட்டும்
பெண்ணொருத்தியை தந்திடு..........

நீங்கள் சிறந்த நண்பரா ?? இங்கே சோதிக்கவும்

தோழன்/தோழி... ஒவ்வொருவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாதவன்/முடியாதவள். வாழ்க்கை முழுமையடைய இன்றிமையாததே தோழமை.

ஒவ்வொரு உறவுக்கும் உரிய வரையறை வகுத்து, ‘எப்படியேனும் வாழலாம் என்றில்லாமல், இப்படித்தான் வாழவேண்டும்’ என வழிகாட்டியுள்ளனர், நம்முடைய சான்றோர்கள்.

அந்த வகையில், நீங்கள் சிறந்த நண்பராக இருக்கிறீர்களா? நல்ல நண்பராக இருக்க வேண்டிய வரையறைகளை அறிந்து, அவற்றைக் கடைப்பிடித்தது வருகிறீர்களா?

தன்னைத் தானே சோதித்து அறிந்துகொள்ள இதோ 10 கேள்விகள்... அவற்றுக்கு பதிலளித்த பின், உங்களது நட்பின் தரத்தை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம்.

முத‌லி‌ல் ஒரு கா‌‌கித‌ம் ம‌ற்று‌ம் பேனாவை எடு‌த்து‌க் கொ‌ண்டு உ‌ங்களது கே‌ள்‌வி எ‌ண்ணையு‌ம், ப‌திலு‌க்கான எழு‌த்தையு‌ம் வ‌ரிசையாக கு‌றி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌பி‌ன்ன‌ர் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

துவங்குவோமா..?

1) உங்கள் வாழ்நாட்களுக்கு போதுமான அளவில் பணம், ஓர் அறையில் உள்ளது. வாழ்நாள் முழுவதும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வல்லமையும் அக்கறையும் கொண்ட நண்பர் மற்றொரு அறையில் இருக்கிறார். உங்களது தெரிவு என்ன?

அ) நண்பர்
ஆ) பணம்
இ) பூவா, தலையா போட்டு தேர்வு செய்வேன்.

2) ஒருவரிடம் நட்பு கொண்ட பின், அது மென்மேலும் வளர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது எப்போது?

அ) தருணம் வரும்போது மட்டுமே முயற்சி செய்வேன்.
ஆ) எப்போதும் முயற்சி செய்வேன்
இ) நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடுவேன்.

3) நண்பர் தன்னையறியாமல் தவறிழைத்தபோது...?

அ) கண்டுகொள்ளவே மாட்டேன்
ஆ) என்னைப் பற்றி தவறாக எண்ணிவிடுவார் என்பதால், தவறை எடுத்துரைக்க மாட்டேன்
இ) நண்பர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை, தவறை உணர்த்துவேன்.

4) நண்பரை தேர்வு செய்யும்போது, எதை கவனத்தில் கொள்வது?

அ) கருத்து ஒற்றுமை
ஆ) தேக ஒற்றுமையும், பழக்கவழக்கமும்
இ) ஏதுமில்லை.

5) நண்பருக்காக எத்தகைய காரியங்களைச் செய்வது?

அ) நண்பரின் முகத்தில் புன்னகைப் பூக்கும்படியான செயல்கள்
ஆ) நண்பரின் மனம் மகிழும்படியான காரியங்கள்
இ) இந்தக் கேள்வி எனக்குப் பொருந்தாது.

6) நண்பருக்கு ஆபத்து நேரும்போது...

அ) எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவுவேன்
ஆ) நட்புக்கு தற்காலிக ஓய்வு தருவேன்
இ) நம்மால் ஆபத்தை நீக்க முடியுமா? என யோசிப்பேன்.

7) நண்பரிடம் பகிர்ந்து கொள்வது...

அ) இன்பம் மட்டுமே
ஆ) இன்பமும் துன்பமும்
இ) களிப்பினை மட்டுமே.

Cool நண்பரிடம் ஏதேனும் திறமையைக் கண்டுணர்ந்தால்...

அ) உள்ளே பொறாமை இருக்கும், ஆயினும் புகழ்ந்து பேசுவேன்
ஆ) பொறாமையின்றி வாயாறப் புகழ்வேன்
இ) புகழ்வதோடு, அந்தத் திறமை மென்மேலும் வளர்வதற்கு உதவுவேன்; ஊக்கப்படுத்துவேன்.

9) உங்களுக்கு விருப்பமில்லாத செயலை உங்கள் நண்பர் செய்யும்போதோ அல்லது விரும்பாத பொருளை தரும்போதோ...

அ) தயங்காமல் ஏற்றுக்கொள்வேன்
ஆ) எனக்கு விருப்பமில்லை என்று நிதானமாக புரியவைப்பேன்
இ) உரிமையோடு பகிரங்கமாக மறுத்துவிடுவேன்.

10) உங்கள் நீண்டகால நண்பரே உங்களுக்கு தீமையிழத்தால்..?

அ) நட்பை முறித்துக் கொள்வேன்
ஆ) அன்பு மாறாமல் நட்பைத் தொடர்வேன்
இ) பழிவாங்குவேன்.

இனி தேர்வு முடிவுகள் :
உங்களது 10 விடைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா? இதோ முடிவுகள்...

நீங்கள் தேர்வு செய்தவை 1-அ, 2-ஆ, 3-இ, 4-அ, 5-ஆ, 6-அ, 7-ஆ, 8-இ, 9-அ, 10-ஆ எனில்...

உங்கள் பெயரை அகராதியில் தேடுங்கள். அங்கே உங்களது பெயரின் அர்த்தம் ‘நட்பு’ என்றிருக்கும். ஆம், நீங்கள் சிறந்த நண்பர் மட்டுமல்லர்; நட்பின் இலக்கணமும் கூட!

நீங்கள் தேர்வு செய்தவை 1-ஆ, 2-அ, 3-ஆ, 4-இ, 5-அ, 6-இ, 7-அ, 8-ஆ, 9-ஆ, 10-அ எனில்...

உங்களால் சிறந்த நண்பராக முடியும். ஆனால், சூழ்நிலையில் கைதியாகிவிடுகிறீர்கள். உங்களது நட்பால், எவருக்கும் பாதகம் இல்லை. எனினும் முயன்றால், நீங்கள் எளிதில் சிறந்த சிநேகிதராகலாம்.

நீங்கள் தேர்வு செய்தவை 1-இ, 2-இ, 3-அ, 4-ஆ, 5-இ, 6-ஆ, 7-இ, 8-அ, 9-இ, 10-இ எனில்...

மன்னிக்கவும். உங்களுக்கு நண்பராகும் தகுதி, அறவே இல்லை. தயவு செய்து உங்கள் எண்ணப் போக்கை மாற்றிக்கொண்டு, நண்பர்கள் பலரைப் பெற, ‘நட்பு தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.

நன்றி : திருவள்ளுவருக்கு! ஆம், தெய்வப் புலவரின் 79, 80, 81-வது அதிகாரங்கள் முறையே ‘நட்பு’, ‘நட்பாராய்தல்’ மற்றும் ‘பழைமை’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே மேற்கண்ட கேள்விகளும் பதில்களும் தயாரிக்கப்பட்டன.

என்றும் நினைவில் எந்தை

(கவிதை எழுதப்பட்ட தேதி : 20.09.2001)

என் அன்பு *எந்தையே,

வாழ்வெனும் போராட்டத்தில்
போராடி ‍ களைத்து விட்டாயென்று
எண்ணி ஓய்வெடுக்கச்
சென்று விட்டாயோ!!!!

வீடே உலகமென்று
என்னை வளர்த்தாய்
ஆனால் இன்று
உலகத்தில் என்னை
மட்டும் விட்டுச் சென்றாயோ?.......

வீட்டில் மற்றுமோர்
குழந்தையாக என்
அன்னையை வளர்த்தாய்
ஆனால் இன்று
விவரந் தெரியாத அவரை
தனியே விட்டு விட்டாய்......

பாசத்துடன் நட்பையும்
கண்டிப்புடன் அன்பையும்
ஊட்டி வளர்த்தாய்
இன்று நாங்கள்
யாரிடம் பெறுவோம்
உமது அன்பை.......

எங்களை
தனியே வெளியூர்
அனுப்பக் கூட அனுமதிக்கவில்லை
ஆனால் இன்று
நாங்களில்லாது நீர் மட்டும்
வேற்றுலகம் சென்று விட்டாய்.....

மரணத்தின் பயம்
சிறிது மில்லாமல்
புன்னகையுடன் சென்றுவிட்டாய்
ஆனால் நாங்கள் இன்றும்
உமது நினைவுகளை சுவாஷித்தப்படி
தினந்தோறும் மன வலியோடு
வாழ்ந்து வருகின்றோம்........

எந்தையே
நாங்கள் வாழும் வரை
உமது நினைவும் என்றும்
வளரும் எம்மோடு.....

(* எந்தை : என் தந்தை)

என் மனதிற்கு நான் எழுதும் கிறுக்கல்

என் மனமே,

இலட்சியம் இல்லாத மனமே
தோல்விகளில் துவண்டது போதும்
ஏளனங்களினால் வருந்தியது போதும்....
எழுந்திரு........ விழித்திடு........

உன் எதிர்காலத்தை
அடுத்தவனிடம் கையைக் காட்டி
கேட்காதே...........
உன்னால் முடியும் என்று
உன்னை தட்டி எழுப்பு........

முயற்சிகளில் தோற்பவன்
தோல்வியாளன் அல்ல‌
முயற்சிகளை விடுபவனே
தோல்வியாளன்........

முன்னேறியவனைக் கண்டு
பொறாமைப் பட்டது போதும் ‍ அவன்
முன்னேறிய வழியை
அறிந்துக் கொள்......

எனக்கு வழிக்காட்ட‌
யாருமில்லை என்று வருந்தாதே
நான் முன்செல்ல‌
பாதையில்லை என்று தேம்பாதே

இன்றே
விழித்தெழு துணிவுடன்
எடுத்து வை உனது முதலடியை
அதுவே
நாளை எல்லோரும்
பின்பற்றும் சரித்திரமாகும்.......

எல்லோரிடமும் அன்பாயிரு
ஆனால் அடிமையாகாதே
அன்பைச் செலுத்து
அதற்கு விலைப் பேசாதே........

சிந்திக்க பழகிக் கொள்
சிந்தித்ததை செயலாக்க கற்றுக் கொள்
செயலினை பழக்கமாக்க மாற்று
பழக்கத்தை வழக்க மாக்கு

விழுந்தாலும் பரவாயில்லை
மீண்டும் ஓட‌
உயிர் உள்ளதென்று
உறுதியுடன் எழுந்திரு.........

விழும் போதெல்லாம்
எழுந்திருப்பவனே வீரன்......

போராடு போராடு
வெற்றி பெற வேண்டுமென்று அல்ல‌
தோல்வி அடையக் கூடாதென்று......

இன்றைய
உன் தரித்திரத்தை எண்ணாமல் போராடு
"அச்சமில்லை அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சமில்லை" என்ற
மீசைப் புலவனின் வரிகளை
மனதில் நினைத்து போராடு.....
உன் தரித்திரங்கள்
அதுவே
நாளைக்கு சரித்திரமாகும்......

நீ அடுத்தவர்
நிழலில் வளரும்
கொடியாயிராதே
அடுத்தவர்க்கு
நிழல் தரும்
விருட்சமாயிருக்க நினை......

விரைவில்
வெற்றி
உன்னைத் தேடி வரும்.......
வெற்றி உனதே..........

நீ
சாதாரணமானவன் அல்ல‌
நீ
சாதிக்கப் பிறந்தவன்
.