வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, October 23, 2017

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே
என் ஈர நெஞ்சும் பொறுக்குதில்லையே
கந்துவட்டிக்கு எதிராக
பல சட்டங்களை தீட்டிய
அம்மையாரின் வழி ஆட்சியில் ...
வட்டியாளர்க்கு எதிராக
மாவட்ட ஆட்சியாளரிடம் இரண்டுமுறை
புகார் அளித்தும் கண்டுக்கவில்லையே
நீதி கிடைக்கவில்லையே!
ஆட்சியாளர் காவல் நிலையம்
அனுப்புகின்றார் நீதிக்காய்!
காவல் நிலையத்தில் நிதியில்லையென்பதால்
நீதி கிடைக்கவில்லையே
எழை ஜனங்களுக்கு!




அன்றைக்கு கிடைக்காத நீதிக்காய்
மதுரையை அழித்தாள் கண்ணகி,
இன்றைக்கு தங்களுக்கு நீதியில்லையென்று
குடும்பத்தோடு எரிகின்றார்கள்
மக்களை காக்க வேண்டிய
அரசு அலுவலகத்திலேயே
நெஞ்சு பொறுக்குதில்லையே
வட்டிக்காய வீடுகளையும்
உடைமைகளையும் அடகாய் வாங்கிய
கொடூரர்கள் எல்லாம் இனி
உயிரையும் அடகாய் வாங்குவாரோ
அரசு அதிகாரிகளின் துணையோடு!
                                                   
அரசே மாநில நிர்வாகமே
உங்கள் கண்களில் பார்வை இல்லையா
நீரில் குளித்து மகிழ வேண்டிய
இளம் பிஞ்சுகள் இன்றைக்கு
ஒன்றும் அறியாது
பெற்றோர் பட்ட கடனுக்காய்
அவர்களின் உடலும் எரிந்ததே
கடனுக்கு விலையாக!

Thursday, September 28, 2017

ஆறறிவு மானிடனே...............


அடிப்பட்ட விலங்கினத்தை
காப்பாற்றிட அவ்வினத்தின்
விலங்குகள் எல்லாம்
ஒன்றினைந்து போராடுகின்றன
இவ்வுலகில்!

Image may contain: bird
தன்னினத்திற்கு
பிரச்சனை யென்றவுடன்
வேறுபாடுகள் மறந்து
இணைந்து எதிர்க்கின்றன
ஐந்தறிவு உள்ள
விலங்கினங்களும்!

ஆனால் காயப்பட்ட
மனிதனை காப்பாற்றிட
மனித இனம் தயங்குவதும்
விலகி செல்வதும் அன்றி
அதை புகைப்படம் எடுப்பதும்
தகுமோ???

மனித இனத்தில் மட்டுமே
எங்கோ பிரச்சனையென்று
கண்டும் காணாது
கேட்டும் கேளாது
ஒதுங்கிசென்றிடும்
ஆறறிவு மானிடரே
நீர் எவ்விதத்தில்
விலங்கினத்தை விட சிறந்தவர்கள்???

Wednesday, September 6, 2017

எனக்குள் நானே................





****** எனக்குள் நான்   ********  


தேடுகின்றேன் நான்
என்னுள் என்னை 
தேடுகின்றேன்!

தொலைத்த இடம்
எதுவென்று தெரியவில்லை
தொலைந்த விதமும்
புரியவில்லை!
நான் இருக்கின்றேனா
எனவும் விளங்கவில்லை
என்னுள் நானே
செதுக்குகின்றேன்!
எனக்குள் நானே
உருகுகின்றேன்!
எனக்குள் நானே
தயங்குகின்றேன்!
எனக்குள் நானே
வினாவாய் பதிலாய்
ஆவலாய் வியப்பாய்
கண்டென்னை ரசிக்கின்றேன்!
சூழலின் பிடியில்
சிக்கி அவஸ்தையாய்
என் மனம் விரும்பாவிடினும்
செயலாகின்றேன்!
காற்றினில் அசைந்தாடும்
நாணலாய் வளைகின்றேன்
விருப்ப மில்லாவிடினும்
சூழலில்....
காற்றில் கலைந்திடும்
மேகங்களாய்
கலைக்கின்றேன்
என் ஆசைகளையும்
என் கனவுகளையும்!
நினைவுகள் மனதை
மூழ்கடித்திருந்தாலும்
செயல்கள் தாமரையாய்
என்னையும் மீறுகின்றன!

Image may contain: fire and night

விழுகின்ற பொழுதும்
என்னை நானே
தாங்கி நிற்கின்றேன்!
வீழ்கின்ற பொழுதும்
என்னை நானே
தூக்கி விடுகின்றேன்!

என் நிழலும்
என்னை வெறுக்கின்றதே
என் சூழலும்
என்னை அனைக்கின்றதே!

விழிகளும் ஏங்குகின்றதே
மாற்றங்களை நாடி
மனமும் தான் கல்லானதே
ஏமாற்றங்களையே கண்டதினால்!

பிடிவாதம் பிடித்திடும்
குழந்தையை தேற்றுவது போல
இதுவும் கடந்திடும்னெறு
சொல்லி மனதினை தேற்றுகின்றேன்!
 

Thursday, August 24, 2017

பேதையாகிய நான்..................



ஆதவனை சுற்றிவரும்
உலகமாய் என்னவனையே
சுற்றினேன் அவனே
என் உலகமென்று!

Image may contain: one or more people and close-up

அவன் குரலையே
என் வேத வாக்காயெண்ணி
மகிழ்வுடன் ஏற்று நடந்தேன்!

அவன் கட்டுப்பாடுகளையே
என் வாழ்வில்
விதிகளாக்கி சிறையாக்கினேன்
மன மகிழ்ச்சியுடன்!

அவனுக்கு பிடித்தவற்றையே
எனக்கு பிடிக்காவிடினும்
விரும்ப கற்றுக்கொண்டேன்
என்னவனுக்காக!!

தூக்கத்தை வெறுத்து
இரவிலும் அவனோடு
பேசுவதையே விரும்பினேன்
பெற்றவர்களுக்கும் தெரியாமல்!


பொய் விரும்பாத நான்
அவனை சந்திக்க வேண்டுமென்று
பொய்களையே தேடினேன்!

நீயெழுதிடும் ஒவ்வொரு
வார்த்தைகளும் எனக்கென்று
நினைத்து மகிழ்ந்தேன்!

எனக்கான வாழ்க்கையை
உனக்கானதாக மாற்றி
உனக்காகவே வாழ்ந்தேன்!

வாழ்க்கையெனும் பந்தயத்தில்
உன்னோடு சேர்ந்து வாழ்ந்திட
கரம் நீட்டியப்பொழுது
"தகுதியில்லை எனக்கு" என்று
சொல்லி கை விட்டாயடா!

உருகிடும் மெழுகாய்
உன்மீதான காதலோடு
உருக்குகின்றேன் என்னையே!

Thursday, August 3, 2017

நீ வருவாயென ..................


**************** நீ வருவாயென.....


என்னைக் காணாது
மவுனமாக கடந்து செல்கின்றாய்
சாலையினில்……….. ஆனால்
என்னுள் ஆயிரமாயிரம்
நினைவு விதைகளை
தூவியே செல்கின்றாய்!

நொடிப்பொழுதினில் விழிகள்
கண்ட உன்னை
பலமணி நேரங்களாக
நினைத்து நினைத்து
அசைப் போடுகின்றதடி
என் மனது!
    
    Image may contain: 1 person
நீயோ ஒன்றும்
பேசவில்லை என்னிடம்………….
உன்னிடம் பேச வேண்டுமென்றே
பல்லாயிரம் முறை பேசுகின்றேன்
கண்ணாடியின் முன் நின்று!

உன்னிடம் பழகியதில்லை என்றும்
உன்னோடு வாழ்கின்றேன் என்னுள்!

தூக்கத்தில் மட்டுமல்ல என்
துக்கத்திலும் உன்னிலே
ஆறுதலடைகின்றேன் நினைவுகளில்!

வீட்டு வாசலில் கோலமிடும்
அழகை காண
அதிகாலை நேரத்திலேயே
உன் வீட்டுக்கருகில் உள்ள
தேனீர் கடையினில்
தவமிருக்கின்றேன் உந்தன் பக்தனாய்!

உன் விழிகளில்
நான் விழுந்திட வேண்டுமென்றே
உந்தன் நிழலாய் தொடருகின்றேன்!
பின்னால் வருகின்றேன்
உன்னைத் தொடர்ந்து
தொட்டுவிட அல்ல!
என்றாவது என் வாழ்வில்
என்னை தொடர்ந்து
நீ வருவாயென!

Monday, July 31, 2017

உன்னை அறிந்தால் ...................

 ****** உன்னை அறிந்தால் *****

உன்னையறிந்தால்
நீ உன்னையறிந்தால்

உந்தன் உயரமும் புரியும்
சென்றிடும் பாதையும் அறியும்
பிறரின் வளர்ச்சிக் கண்டு
பொறாமையும் தேவையில்லை!!

உன் பலத்தை மட்டுமல்ல
பலவீனத்தையும் அறிந்திடலாம்
பலவீனத்தை ஒத்துக் கொண்டாலே
வென்றிடலாமே எளிதில்!!!

குறைகளில்லா மனிதர்களில்லை
குறைகளுக்காக மனிதர்களை
ஒதுக்கினால் நீ நேசித்திடும்
மனிதர் எவருமில்லை இவ்வுலகில்!!!

உன்னையறிந்தால்
நீ உன்னையறிந்தால்

எச்சூழலிலும் உன்னை
அடக்கி ஆண்டிடலாம்
விமர்சன அம்புகளையும்
புன்னகை மாலைகளால்
ஏற்றிடலாம்!!!

செய்திடும் செயல்களுக்கு
அடுத்தவரின் மதிப்பும் தேவையில்லை
ஜெயித்திட வேண்டுமென்றல்ல
தோற்றிட கூடாதென்று முயன்றிடு


Thursday, July 27, 2017

மனங்கவர் கள்வனடா..................

நெருங்குவது
தெரியாமலே
நெருங்குகின்றான்!!

விலகுவது
தெரியாமலே
விலகிடுகின்றான்!!!

பதுக்குவது
தெரியாமலே
பதுக்குகின்றான்
நினைவுகளை!!!

நிஜத்தில்
இல்லாமலே
நிழலில்
வாழ்கின்றான்!!!

நினைக்காதே
என ஆணையிட்டாலும்
என்னையும் மீறி
போனையே பார்க்கின்ற
விழிகள் அவனின்
அழைப்பிற்காக
தவமாய் தவமிருந்து!!!

வினையையும்
எதிர் வினையையும்
ஆராய்ந்து பேசிடும்
நான்
எதிர் வினை
நினையாமலே
அவன் பெயரை
பேசிக் கொண்டிருக்கின்றேன்
மற்றவர்களிடமும்.........

என்னுள்ளே
இருந்தாலும்
என்னையும்
இன்பத்தில் ஆழ்த்துகின்றான்
என்னையறியாமலே



என்னை அறியாமலே
என்னை
தவிக்கவிட்டு
இன்பங் கொள்கின்றான்
மனங்கவர் கள்வனடா!!!!

Wednesday, June 7, 2017

என்னவள் என்றும் இனியவள்.....

                   Image may contain: one or more people and close-up

ஒற்றை வரியினில்
இலக்கணமில்லாது
அன்போடும் 
காதலோடும்
நான் அழைத்திடும்
கவிதை
அவள் பெயர்!


விழிகளில் உட்வாங்கிய
நாள்முதல்
வருடங்கள் பலகடந்தாலும்
அன்பெனும் உயிரூற்றி
காதலெனும் விருட்சமாய்
என்னுள் இதயமாய்
துடிப்பவளே!

துடிக்கின்ற என்னிதயம்
ஏனடி மறுக்கின்றது
எனக்காய் துடித்திட!
விடைக்கொடு கோபத்திற்கு
நீரில் மிதந்திடும்
பூகோளமாய் உன்னுள்
நான் மிதக்கின்றேன்
நின் நினைவுகளில்
என்றுமே!
வழிகள் இல்லா
வாழ்க்கையில்
என்றும் வலிகளோடு
பயணிக்கின்றேன் நான்!
என் வாழ்வில்
எனக்காக வந்திட்ட
முதல் வெற்றியடி!
நட்புகள்
உறவுகள் பலயிருந்தாலும்
என்னுள் இதயமாய்
உன் நினைவுகளே
என்றும்!
விழிகளில்
காட்சிகள் பலயிருந்தாலும்
விழும் பிம்பமாய்
உன்னுருத் தானடி
என்றும்!
காதலை
சுவாசிப்பவன் நானடி
காதலின் உருவமாய்
நீயிருப்பதால்!
என் வலிகளையெல்லாம்
மறந்தேன்
உந்தன் புன்னகைக் கண்டு!
தோல்விகளையும்
இழப்புகளையும்
கண்டே வளர்ந்திட்ட நான்
ஆறுதலடைவது
உந்தன் அன்பில் தானடி!
மரணம் என்னை
நெருங்கி வந்தப்பொழுதும்
தவிர்த்து சென்றதடி
உன்மீதான
என் காதலினால்!!

Monday, June 5, 2017

காதல் கோட்டை

                     
வெட்கமெனும்
சொல்லின் 
உருவம் கண்டேன்
அவளை பார்த்தப் பின்பு!

அவள் விழிகளை
ரசித்திடுகையில்
என் வழியினை
நினைக்க மறக்கின்றேன்!

அவளின் பேச்சில் அல்ல
மவுனப் புன்னகையில்
அறிகின்றேன் ஆயிமாயிரம்
காதல் கவிதைகள்!

           
                       Image may contain: 2 people


அவளின் வில் புருவத்தில்
புறப்பட்ட பார்வை அம்பு
என்னிதயத்தில்
காதல் கோட்டையாக!!

என்னிலை மறந்து
நேசிக்கின்றேன் அவளை....
தன்னிலை உணர வைத்திடுமோ
அவளின் காதல்!

அவளின் செவ்விதழ்கள்
சொல்லிடத் தான்
துடிக்கின்றன
என் மீதான காதலை
ஆனால் அதனை
அடைத்திடுகின்றதே
பெண்ணின் நாணம்!!

செலவில்லாமல்
நேரங் கழிக்கின்றேன்
அவளை ரசித்துக் கொண்டே
காதலுடன்!





                                    

Wednesday, May 17, 2017


                       ************** மே 17 -2009 **************


சர்வ உலகமே
தமிழீழத்தில்
தமிழர்களாய் பிறந்திட்ட
காரணத்தினால் கைவிட்ட நாள்!

                                   Image may contain: outdoor
உலகினில் வாழும்
எல்லா கடவுள்களும்
நாங்கள் தமிழர்கள்
என்பதினால்
செவிகளையும் விழிகளையும்
மூடிக்கொண்ட நாள்!
விழிகளுக்கு முன்னால்
உறவுகளின் மரணங்கள்
சடிதியில்…… வருவது அறியாது
வீழ்ந்தனர் சடலங்களாக
வாழ்ந்த மண்ணில்!

                          Image may contain: sky and outdoor

உலகைக் காண
கர்ப்பத்திலிருக்கும்
குழந்தையும் தாயின்
வயிற்றினை கிழித்து
சடலமாக தூக்கியெறிந்தது!!
விண்ணில் இருந்து
கொத்து கொத்தாக
வீசப்பட்ட
கொத்தணி குண்டுகள்
ஈவு இரக்கம் பாராது
தமிழர்களின் உடம்பினை
சல்லடையாக்கி துளைத்தது!

தோளின் மேல்
குழந்தையை தூக்கி
ஓடி ஒளிந்திட்ட தந்தையின்
கரத்தில் இருந்தது
தலையில்லாத குழந்தையின் உடலே!!

செழிப்பான தமிழீழ
மண்ணில் எங்கும்
மனிதர்களின் உறுப்புகள்
தனித்தனியே சிதறல்களாய்!!

பச்சிளங் குழந்தைகளும்
கர்ப்பினிப் பெண்களும்
உறுப்புகளையிழந்து
மருத்துவதிற்கு வசதியின்றி
அழுகுரல்களின் ஓசை
விண்ணைத் தொட்ட தினமிது!

Image may contain: one or more people, people standing, beach, ocean and outdoor

சடலங்களைக் கண்டு
அப்பா என்றும்
அம்மா என்றும்
சொல்லி அழுவதற்கு கூட
நேரமில்லை….. புதைத்திடாமல்
மண்ணிலே விட்டுவந்தோம்!

வாய்க்காலிலே எங்கள்
உறவுகளின் சடலங்களை
ஒதுக்கிவிட்டு எங்களின்
தாகந் தீர்த்தோம்!!

எங்கும் மரணம்
எங்கும் ஊனம்
கண்டு கண்டு அழுதழுது
எங்களின் கண்ணீரும்
வற்றியது!!

தமிழீழ மக்களின்
விடுதலைக்காகவும்
தமிழீழ மக்களின்
சுதந்திர வாழ்விற்காகவும்
ஆயுதமேந்தி போராடியவர்களின்
சடலங்கள் வீதியெங்கும்
வீரவணக்கம் செலுத்திடவும்
இயலாத நிலையில்!

எங்கு போகின்றோம்
எங்கு ஓடுகின்றோம்
என்றறியாமலே
ஓடினோம் உயிர்த் தப்பிட!!

காயங்களோடு உயிர்ப் பிழைத்திட
போராடிய எங்கட பிள்ளைகளின் மேல்
கனரக வாகனங் கொண்டு
மண்ணோடு மண்ணாக்கினான் எதிரி!

விழிகளுக்கெதிரே
எங்களுக்காக போரிட்ட
எங்குல நாயகர்களை
அப்பொழுதும்
நேர்க்கு நேரல்லாது
பின்னால் நின்று
சுட்டுக் கொன்று
கூச்சலிட்டான் சிங்களவன்!

முள்ளிவாய்க்காலும்
நந்திக்கடலும்
தமிழர்களின் செங்குருதியினால்
குளித்திட்ட தினமிது!

Saturday, April 15, 2017

இழிப்பிறவி நீயடா????????



மானிடனே மானிடனே
என்னதோர் இழிப்பிறவி
நீயடா
ஆறறிவு இருந்தும்
மருத்துவர் மாணவர்
வியாபாரி ஆசிரியர்
எனப்பல பெயர்களை
சூட்டிக் கொண்டு
நீ உலகை வலம்வந்தாலும்
எல்லாம் மிருகங்களின்
குணத்தையும் தானடா
உள்ளே வைத்து
சுற்றிக் கொண்டிருக்கின்றாய்
மிருகங்களுக்கும்
இல்லாத குணங்களையும்
அல்லவா நீ
மனிதனெனும் போர்வைக்குள்
மறைத்து வலம்வருகின்றாய்!!


பொறாமையும் வஞ்சனையும்
பொய்யும் இகழ்ச்சியும்
நினைச்சது நடக்கவில்லையென்றால்
ஊரெல்லாம் தூற்றித் திரிவதும்!
முன்னே சிரித்துப் பேசுவதும்
பின்னே துரோகம் செய்வதும்

                               
நண்பனென்று சொல்லி கைக்கொடுப்பதும்
காலுக்குள் குழி தோண்டுவதும்
என்ன இழி குணமடா
உன் குணம்
மிருகங்களே மிருகங்களே
காட்டிற்குள்ளேயே இருந்திடுங்கள்
வெளியில் வந்திட வேண்டாம்
இந்த மானிடர்களின்
குணங்கள் உங்களையும்
அண்டிடுமே

Monday, April 3, 2017

நீ எங்கே என் அன்பே

** நீ எங்கே என் அன்பே ******
விழிகளின் சங்கமத்தில்
விதையாக்கிய என் காதல்
உணர்வுகளின் மீட்டலில்
வளர்த்திட்ட என் காதல்

தனிமையிலும் நிழலிலும்
பேசிபேசி உருவாக்கிய காதல்
கரங்களின் வளையோசையில்
இசைத்து மகிழ்ந்த காதல்!
பூமிப்பந்து அவளை
சுமந்திட்டாலும் அவளின்
நிழலையும் சேர்த்து சுமந்தேன் நான்
என்னிதயத்தில் மகிழ்வாக!!

                               
இதயத்தில்
சிறைப்பிடித்தேன்
காதலியாக அவளை!
மீட்டு கொண்டார்கள்
அவளை மட்டுமல்ல
என் காதலையும்
களவாடி சென்றே
நீ எங்கே
என் அன்பே!
நீயிலாவிட்டாலும்
என் காதலை
திருப்பிக் கொடுத்திடு
நின் நினைவுகளோடு
நான் வாழ்ந்திட

Saturday, April 1, 2017

சிறு கிறுக்கல்...............

*** சிறு கிறுக்கல் *****
கேட்கத் தான் நினைக்கின்றேன்
கேட்கத் தான் முடியலையே
சொல்லத் தான் நினைக்கின்றேன்
சொல்லத்தான் முடியலையே


சொற்கள் வெளிவராது
வாய்க்குள் போராடுகின்றதே
உன்னருகில் வந்துவிட்டேன்
கேட்கவும் முடியலையே
கேட்காமலும் விலகிசென்றிடவும்
வழி யில்லையே பெண்ணே
உன்முன்னால் நின்றிடும் பொழுது
காற்று கலைத்திட்ட மேகமாய்
கலைகின்றது என் எண்ணங்கள்
ஆனாலும் ஆனாலும்
சொல்லிடவே எண்ணுகின்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.

உன் கூந்தலில்
விழுந்த மலர்களை
குப்பையில் எடுத்துப் போட
நீ செய்வாயா அல்லது
நானே செய்யவா என்று
கேட்டிடவும் சொல்லிடவுமே எண்ணுகின்றேன்

Wednesday, March 15, 2017

சிரிப்பு தத்துவம்

சிரிப்பு தத்தூவம்...........

**) டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டி தான் சாம்பாதிக்கிறாங்க. அதனால அவங்களை வெட்டி வேலை செய்யறாங்கன்னு சொல்ல முடியுமோ...
**) தையல் போடுறாங்க என்பதற்காக டாக்டரை எல்லாம் டெய்லர் என்று சொல்லக்கூடாது.
**) கழுதை தேஞ்சி கட்டெரும்பானால், அது பேப்பர் சாப்பிடுமா? சர்க்கரை சாப்பிடுமா?
**) ரயில் எவ்வளவு தான் வேகமாகப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத் தான் போகும்.


**) குக்கர் விசிலடிச்சு பஸ்சு போகாது.கண்டக்டர் விசிலடிச்சு சோறு வேகாது?
**) என்ன தான் வாழை தார் போட்டாலும் அதை வைத்துக்கொண்டு ரோடு போட முடியுமா?
**) காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!
**) என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்குத் தலையில கொம்பு முளைக்காது.
**) வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!
**) பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்…அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!

Friday, March 10, 2017

கொஞ்சம் சிரிங்க பாஸ்

                               

கொஞ்சம் சிரிங்க பாஸ்
சிவா: என்னப்பா எழுதிக்கிட்டு இருக்கே?
தமிழன் :லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்
சிவா : "யாருக்கு?
தமிழன் :எனக்கு..
சிவா : (தேவைதான் எனக்கு!!) அது சரி... அப்படி என்னதான் லெட்டர்ல எழுதுறே?
தமிழன் :"அது எப்படி எனக்குத் தெரியும்? இத நான் போஸ்ட் பண்ணி அது எனக்கு வந்தாத் தானே தெரியும்"
சிவா : நான் உன்னையை ஒண்ணும் கேட்கலை... சரியா...!
******************************
ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்
அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்
அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MI CROW SOFT.
*********************************
மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது
*****************************
                                        

கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
*********************************
நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்
*****************************************
பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …
**************************
லவ் incoming call மாதிரி உடனே அட்டன்ட் பண்ணலேனா misscall ஆகிடும்
ஆனா friendship என்பது sms மாதிரி உடனே அட்டென்ட் பண்ணலனாலும்
இன்பாக்ஸ் இல் நமக்காக wait பண்ணும்.....
****************************************
படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் `மசாலா` படமாச்சே...





Friday, February 17, 2017

மனமே மனமே ??????????



மனமே மனமே
சிரிக்கின்றாய்
சிரித்த வேலையிலேயே
சிந்திக்கின்றாய்
சிந்திக்கும் வேலையிலேயே
பேசுகின்றாய்
பேசுகின்ற வேலையிலேயே
வருந்துகின்றாய்
வருந்தும் வேலையிலேயே
அன்பாகின்றாய்
அன்பான வேலையிலேயே
கோபமாகின்றாய்
.
.
                                   

.
உன்னை என்னுள்
அடக்குவதா
நான் உன்னுள்
அடங்குவதா
என்று புரியாமலே
செல்கின்றேன்
பல நேரங்களில்
குழப்பத்துடனும்!!!
குழப்பத்திற்கான
முடிவு தெரியு முன்பே
மீண்டும் கிளறுகின்றாய்
நினைவுகளை!!!
நடப்பதை யெண்ணி
வருந்திடும் போதே
எதிர்காலத்தை யெண்ணி
சிந்தித்து என்னை
மேலும் குழப்புகின்றாய்!!!
கலங்கிய குட்டையில்
மீன் பிடிக்கலாம்
ஆனால்
குழப்பமான உன்னில்
நான் முடிவெடுப்பது!!!

Tuesday, February 14, 2017

காதலர் தின சிறப்பு கவிதை.....


மொழிகளால் அல்ல
விழிகளால் பேசி
என்னை தடுமாற
செய்கின்றாயடி பெண்ணே!!!!

Image may contain: one or more people and close-up


மகிழ்ச்சியையும்
காட்டுகின்றாய்
சிரிப்பாக விழிகளில்!!

கோபத்தையும்
காட்டுகின்றாய்
அனலாக விழிகளில்!!

ஏக்கத்தையும்
காட்டுகின்றாய்
ஏங்கும் விழிகளாக!!

காதலையும்
காட்டுகின்றாய்
அன்(ம்)பு விழிகளாக!!

காமத்தையும்
காட்டுகின்றாய்
காமனின் தூதுகளாக!!!

ஒட்டுமொத்த
என் காதலையும்
உள் வாங்குகின்றாய்
விழி யெனும்
கடலினில்@

என்னவளின் அழகு

****************** என்னவளின் அழகு
ஓவியனும் வியந்திடும்
ஓவியம் அவள்!
சிற்பியும் வியந்திடும்
சிலை அவள்!




                     Image may contain: 2 people
கவிஞனே வியந்திடும்
கவிதை அவள்!
எழுத்தாளனே வியந்திடும்
தொடர்கதை அவள்!

                  Image may contain: 1 person, selfie


படைத்தவனே தன்னிலை மறந்திட்ட
தேவதை அவள்!
ருசிக்கருசிக்க திகட்டாத
சுவை அவள்!

Thursday, February 9, 2017

சிந்தித்திட அறிஞர்களின் பொன்மொழிகள்

பொன்மொழிகள் ::
***********************
**) அன்னை தெரசா:
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

**) ஆலன் ஸ்டிரைக்:
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

**) லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

**) அப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

**) ஐன்ஸ்டைன்:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

**) அரிஸ்டாட்டில்.
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.

**) மாத்யூஸ்.
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

**) முகம்மது நபி.
சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.

**) ஸ்டீலி.
மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.

**) வள்ளலார்.
இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.

**) மகாகவி பாரதியார்.
அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.

**) சார்லி சாப்ளின் :
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்த கூடாது.

**) அன்னை தெரேசா :
தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.

**) கவியரசு கண்ணதாசன் :
யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.
**) அலெக்சாண்டர் :
உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லையென்றால், நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்.