வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, July 16, 2011

தாயுமான என் தலைவன்

சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது. அசைக்க முடியாத மனநிலையோடு, நாம் நமக்கான நாட்டை கட்டி அமைப்போம் என உறுதி எடுக்கும் காலத்தில், அந்த கட்டாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கான அரசு, நமக்கான ஆட்சி, நம்மை நாமே ஆள்வது என்கின்ற அடிப்படை மாந்த உரிமை தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இயன்றவரை முயற்சிப்போம் என்று சொல்லாமல், அது நடக்கும்வரை செயல்படுவோம் என்று நம்மை நாம் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்காகத்தான் நமது மேதகு தமிழ் தேசியத் தலைவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார். அவர் வாழ்க்கையில் யாரையும் இப்படி வாழுங்கள் என்று வலியுறுத்தியது கிடையாது. எப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பதை இவர் வாழ்ந்து காட்டினார்.



கிறித்துவ மறைநூலான விவிலியத்தில் இயேசு கிறிஸ்து தமது சீடர்களை அமர வைத்து, அவர்களின் பாதங்களை கழுவி துடைக்கிறார். அதற்கு முன்னர் அவர் தமது மேலங்கியை கழற்றி வைத்துவிட்டு, இடுப்பிலே ஒரு துண்டை கட்டிக் கொண்டு இந்தப் பணியை செய்கிறார். இது அக்கால யூத நடைமுறைக்கு மிகவும் ஏற்கத்தக்க செயலாகும். யூத இனம் தம்மை கடவுள் படைத்த இனமாக கொண்டாடிக் கொண்டதோடு, யூதர்களே இந்த உலகில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிந்த காலக்கட்டம். அப்படிப்பட்ட நிலையில் தான் யூதராகிய இயேசு கிறிஸ்து தமது இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு, சீடர்களின் பாதங்களை கழுவி துடைக்கிறார். தாம் எப்படி எளிமையோடு வாழ வேண்டும் என்பதை அவர் தமது செயலின் மூலமே கற்பித்தார்.

கட்டளையிடுவதற்குப் பதிலாக வாழ்ந்து காட்டுவது என்பதுதான் தலைமைத்துவத்தின் அடிப்படையாகும். இந்த நேர்மை, உண்மை, ஏற்றுக் கொள்ளுதல், அணைத்துக் கொள்ளுதல், தாங்கிக் கொள்ளுதல், தம்மையே அர்ப்பணித்தல் என்கின்ற அளப்பறியா பண்பு ஒரு தலைவனின் உடன் பிறந்த குணமாக இருக்கும். எமது தேசிய தலைவரின் வாழ்வியலும் இதைத்தான் நமக்கு போதிக்கின்றன. கிறித்துவ மதம் மிகக் குறைந்த காலக்கட்டத்தில் உலகெங்கும் இன்று அசைக்க முடியாத நிலைக்கு உயர்ந்தோங்கி இருக்க காரணம் என்ன? என்று இன்றுவரை மறைநூல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வுகளின் முடிவில் அவர்கள் கண்டறிந்த ஒரு உண்மை என்னதென்றால், கிறித்துவ மதத்தில் இழையோடிப் போயிருக்கும் அதன் எளிமை என்பதுதான்.





இன்று உலகெங்கும் கிறித்துவ மதம் பரந்து விரிந்திருக்கக் காரணம், அந்த மதத்தில் உள்ள எளிமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பும் இப்படி எளிமையோடு கட்டி அமைக்கப்பட்டதால், இன்று உலகெங்கும் அதன் அமைப்பின் அடிப்படைகள், கொள்கைகள், லட்சிய நிலைகள் மிக உயர்ந்தோங்கி நிற்கிறது. அமைப்பில் மட்டுமல்ல, அந்த அமைப்பை கட்டிய எமது தேசியத் தலைவர் எளிமையாக இருந்தார். அவர் எவ்வாறு எளிமையாக இருந்தாரோ அதேப் போன்றே அவர் இயக்கத்தையும் எளிமையாக வழிநடத்தினார். தாய்மைக்குரிய பண்பு அவருக்குள் அழுத்தமாக அமர்ந்திருந்தது. அவர் தமது போராளிகளை இழந்த போது, கண்ணீர் விட்டு அழுதார்.

அவர் என்ன உண்கிறாரோ அதுதான் தமது போராளிகளுக்கும் உண்ண வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தார். ஒரு தலைவன் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு தாய் போன்று தமது போராளிகளை தோள்மேல் சுமந்தார். ஒரு தாயின் இடுப்பிலிருக்கும் குழந்தை எப்போதும் சிரித்த முகத்தோடு, எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் இருக்குமே, அதற்குக் காரணம், அந்த தாய் எந்த நிலையிலும் தன்னை கைவிட மாட்டாள். அந்த தாய் கீழே கற்கள், முற்கள் இருந்தாலும்கூட, தமது பாதத்திலே தாங்கிக் கொண்டு தம்மை சுமந்து கொண்டு செல்வாள் என்கின்ற மனப்போக்குத்தான்.

இதே மனப்போக்குத்தான் நமது போராளிகளுக்கு இருந்தது. அந்த மாவீரர்கள் எமது தேசியத் தலைவரை, தலைவராக அல்ல, தாயாக ரசித்தார்கள், தாயாக உணர்ந்தார்கள், தாயாக போற்றினார்கள். அவரை தாயாக ஏற்றுக் கொண்டார்கள். எமது தலைவர் தலைவராக இல்லை. தாயாக இருந்தார். ஆகவே தான் அவர் அந்த மண்ணை, அந்த மண்ணின் மக்களை உளமாற நேசித்தார். தமது மண்ணுக்கும் தமது மக்களுக்கும் எந்த இடையுறும், எந்த அச்சுறுத்தலும் நிகழக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார். வானத்திலிருந்து கழுகு வட்டமிட்டு வந்து குஞ்சுகளை வேட்டையாட நினைக்கும்போது, பறந்து சென்று தாக்கும் கோழியைப் போன்று அவர் தமது மக்களை பழிவாங்க வரும் பகைவர்களை எதிர்த்து போராடினார்.

தாம் மட்டும் போராடினால் போதாது என, தமது குஞ்சுகளுக்கு அவர் போராட்டத்தை கற்றுக் கொடுத்தார். போராட்ட வடிவத்தை தாம் உள்வாங்கிக் கொண்டபோது, அதை வெளியரங்கமாய் தமது பிள்ளைகளுக்கும் சேர்த்து வளர்த்தெடுக்க பயிற்றுவித்தார். இந்த பயிற்சியிலே தேறிய பிள்ளைகள், மாவீரர்களாய், சொந்த மண்ணுக்காக குருதி சிந்த அல்ல, உயிர் கொடுக்கவும் உறுதியாக இருந்தார்கள். ஆகவேதான் கடந்த 30 ஆண்டு காலமாக எந்தவித ஆசைக்கும், எந்தவித அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் அசராமல் தாம் கொண்ட லட்சியத்திலே, உறுதியாக தமது செயல்பாட்டை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தார். தாம் இயங்கினார். தம்மோடு சேர்த்து தமது பிள்ளைகளையும் இயக்கச் செய்தார்.

உலக வரலாற்றில் எமது தேசியத் தலைவரைப் போல தாய்மை கொண்ட தலைவரை நம்மால் பார்ப்பது கடினம்தான். கடுமையான போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எமது மண்ணை காக்க வேண்டும். எமது தலைமுறை பெற்றுத்தரும் விடுதலையை அடுத்த தலைமுறை உரிமையோடு கொண்டாடட்டும் என்ற உணர்வோடு கடும் சமரை எதிர்க்கொள்ள, அவர் தமது மக்களிடம் ஒவ்வொருவரும் ஒரு பிள்ளையை போர்க்களத்திற்கு அனுப்புங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். முகம் மாறாமல், அகம் குளிர்ந்து தமிழ் தாய்கள், தமது பிள்ளைகளை வேறொரு தாயோடு போராட அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தம்மைவிட, தமது தாய்மையைவிட, மேலான தாய்மை தமது தேசிய தலைவருக்கு உண்டென்று நம்பினார்கள். ஊருக்கு உபதேசம் செய்து தாம் மட்டும் காத்துக் கொள்ளும் கேடு நிலைக் கொண்ட தலைவனல்ல எமது தேசியத் தலைவன்.



தமது மக்களினம் எல்லாம் வீட்டிற்கு ஒரு பிள்ளையை அனுப்புங்கள் என்று கூறிவிட்டு, தமது வீட்டு பிள்ளையை எங்கோ வெளிநாட்டில் பதுக்கி வைத்து, பாரிய சமர் புரிய ஊரார் வீட்டுப் பிள்ளைகளை அனுப்பி வைக்கவில்லை. மாறாக, அந்த சமர் களத்திலே தமது பிள்ளையையும் உயிர் கொடையாக வார்த்துக் கொடுத்தார்.தமது மக்கள் விடுதலை ஒன்றே எமது தேசியத் தலைவனின் லட்சியமாக இருந்தது. தமது மக்களின் உரிமை வாழ்வு ஒன்றே எமது தேசிய தலைவனுக்கான கனவாக இருந்தது. அந்த கனவை மீட்டெடுக்கும் போராட்டத்திற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்ததோடு, தமது மக்களை அந்த அர்ப்பணிப்பிற்கு உந்தித் தள்ளினார். தமது நாட்டு விடுதலைக்காக, தமது மண்ணின் மீட்புக்காக, உயிர் கொடை தரும் உன்னத வாழ்வு அவரிடம் குடி கொண்டிருந்ததால், அந்த குறியீடாய் மாவீரர்கள் மாறிப்போனார்கள்.

அவர்களின் வாழ்வு தலைவனின் கட்டளை என்பதைவிட, ஒரு தாயின் கட்டளையாக அவர்களுக்கு தெரிந்தது. கருத்தரித்தது தாயாக இருந்தாலும், காத்து வழிநடத்தியது எமது தலைவன் தான். மாபெரும் அன்பு சுரங்கமாக ஊற்றெடுக்கும் தாய்மையின் குணத்தை கொண்டவனாய், களத்திலே எமது தலைவன் இருந்த காரணத்தினால்தான், அணி அணியாய் தம்மை அர்ப்பணிக்க தொடர்ந்து மாவீரர்கள் அணிவகுத்தார்கள். அவர்களின் வாழ்வு, தமது தாயின் கட்டளைக்காய் காத்திருந்தது. ஒவ்வொரு முறையும் மாவீரர்களின் சடலங்களை, அந்த வீரமறவர்களின் வித்துடல்களை கண்டபோது, கதறினார். ஒரு தாய்க்கே உரிய பாங்கை நம்மால் அங்கே காண முடிந்தது.

அழுது துடித்தாலும், அடுத்து வரும் தலைமுறைக்கான விடுதலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதிலே அவர் உறுதியாக இருந்தார். இந்த உறுதியின் காரணத்தினால்தான், நாற்பத்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரமறவர்கள் தமது மண்ணின் விடுதலைக்காய் தமது உடலை வித்துக்களாக்கினார்கள். கடந்த 30 ஆண்டுகால சமரில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், தமது இன்னுயிரை ஈந்தார்கள். உலகெங்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் ஏதிலிகளாய் புலம் பெயர்ந்து வாழும் அவலத்திற்கு தள்ளப்பட்டார்கள். ஆக, நாம் இந்த காரணங்களை சரியாக புரிந்து கொண்டு, நமது விடுதலைக்கான வேட்கை தணியாமல் காக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். தாயுமான எமது தலைவன், தமது தலைமையில் தமிழீழ அரசை அமைக்காமல் ஓய்வு பெறமாட்டான் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்கான அரசு என்பதிலே மாறுபட்ட எண்ணமோ, அவநம்பிக்கையோ ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது.

நமது விடுதலை ஒன்றே லட்சியமாகக் கொண்டு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற நமது தேசியத் தலைவரின் வழிக்காட்டுதல் இன்னும் சில காலங்களில் நமக்கு கிடைக்கத் தொடங்கிவிடும். நாம், நமது விடுதலைக்கான போராட்டத்தை இன்னும் இன்னுமாய் அழுத்தமாக நடத்திச் செல்வதற்கான மன உறுதியையும், செயல்பாட்டையும் வகுத்துக் கொள்ளும் காலத்திலே இருந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மனம் தளராமல் யார் என்ன தவறான பரப்புரைகளை மேற்கொண்டாலும், கலங்காமல், தயங்காமல், தாயுமான எமது தலைவன் எம்மோடு இருக்கிறான், எந்த நிலையிலும் நான் கலங்க மாட்டேன், எமக்கான இலட்சியத்தை அடையும்வரை எமது வழித்தடங்களிலிருந்து மாற்றுப் பாதையை தேட மாட்டேன் என்கின்ற உறுதியை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் உள்வாங்கிக் கொண்டு எமது களப்பணிக்காய் எமது வாழ்க்கையை அர்ப்பணிக்க எந்த நேரத்திலும் தயாராக இருப்பேன். தாயுமான எமது தலைவனுக்கு இதை உறுதியாகச் சொல்கிறேன் என்ற மனப்போக்கோடு வாழ உறுதியெடுப்போம். தமிழீழம் மலரும். இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

Wednesday, July 13, 2011

எங்கும் காதல்... எதிலும் காதல்.





நான் மலரை
விரும்புகிறேன்
மணமாய் காதல் இருப்பதால்......

நான் மழையை
விரும்புகிறேன்
குளிராய் காதல் இருப்பதால்.......

நான் தென்றலை
விரும்புகிறேன்
இதமாய் காதல் இருப்பதால்........

நான் ஒலியை
விரும்புகிறேன்
இசையாய் காதல் இருப்பதால்..........

நான் ஒளியை
விரும்புகிறேன்
உருவமாய் காதல் இருப்பதால்........

நான் அன்னையை
விரும்புகிறேன்
அன்பாய் காதல் இருப்பதால்.....

நான் நண்பனை
விரும்புகிறேன்
நட்பாய் காதல் இருப்பதால்.........

நான் சூரியனை
விரும்புகிறேன்
நிழலாய் காதல் இருப்பதால்.......

நான் கல்வியை
விரும்புகிறேன்
இலக்கியமாய் காதல் இருப்பதால்.......

நான் மனைவியை
விரும்புகிறேன்
இதயமாய் காதல் இருப்பதால்.........

என் மனதை சிதைத்த சம்பவம்..... பாகம் 3.

வணக்கம் நண்பர்களே.......

கடந்த இரு பாகத்திலும் எனது குடும்பத்தின் நிலை, எனது திருமணம், எனது வாழ்க்கை ஆகியவைப் பற்றி தெரிந்து இருப்பீர்கள்......
இந்த பாகத்தில் அடிக்கடி வரப் போகின்ற ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி சிறு குறிப்பு.......
அவர் தான் எனது திரு...மாமனார்..... ஓர் கிறிஸ்தவக் குடும்பம்.... புஸ்தகங்கள் எல்லாம் எழுதி, கிறிஸ்தவ மார்க்கத்திற்காய் உழைப்பவர்......குடும்பத்தில் உள்ள அணைவருமே ஏதோ ஒரு வகையில்..... மார்க்கத்திற்காய் உழைப்பவர்கள்... வீட்டைச் சுற்றிலும்,..... வசனங்கள் தான்....ஊருக்கெல்லாம் உபதேசம் தான்.....ஓய்வுப் பெற்ற
ஓரு அரசு ஊழியர்......சாரி, சொல்ல மறந்து விட்டேன் இவர்கள் குடும்ப பழக்கத்தைப் பற்றி....
1. இவரின் பிள்ளைகளுக்கு (திருமணமான பிள்ளைகளுக்கும்) எந்தவொரு பிரச்சனையென்றாலும்..... அதனை இவரிடம் தான் சொல்வர்.... உடனே இவர்.... பொறும்மா.. கடவுளிடம் கேட்டுச் சொல்கின்றேன் என்றுச் சொல்லி அடுத்த நாளில் அதற்கான பதில் சொல்லுவார் ( கடவுளின் சித்தமென்று)

2. திருமணம் முடித்த இரண்டு மூத்த மகள்களுக்கும் திருமணம் முடித்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் ஏதேனும் பொய்க் காரணங்களைக் கூறி மருமகனை அவர்கள் வீட்டாரிடமிருந்து பிரித்து, அவர்கள் வீட்டின் அருகிலேயே "தனிக் குடித்தனம்" வைத்து விடுவர்.... மேலும் பெண் பிள்ளைகளின் படுக்கையறையில் பேசிய விஷயங்களைக் கூட அவர்களின் தகப்பானார் தெரிந்துக் கொண்டுவிடுவார் (?)
இது தான் அவர்களின் குடும்ப பழக்கம் ( என்ன நண்பர்களே, ஓரளவிற்கு புரிந்துக் கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்...) ஆனால் அவர்களின் மகனை மட்டும் திருமணம் முடித்து, அவர்களின் வீட்டின் மாடியிலேயே வைத்து உள்ளனர்.....

மூன்றாவது நான் :
31.05.2011 அன்று..... எனது ஆச்சியை அவர்கள் வீட்டில் (மதுரையில் தான்) விட்டுவிட்டு அன்றே... அவர்கள் வீடடிற்குச் சென்று விட்டாள் எனது மனைவி......சென்ற (03.06.2011 அன்று )இரண்டு நாட்களில் அவளுக்கும், எனக்கும் போனில் சிறு வாய்த் தகராறு...... (எனது வீட்டில் இருக்கும் போது மாதம் இரு முறை சண்டை வரும்... சண்டை முற்றும் போது.. எனது அம்மா தலையிட்டு....என்னையும் திட்டி, அடிக்கக் கூடச் செய்து, தவறை உணர்த்தி, மன்னிப்பு கேட்கச் செய்து, சமாதானம் செய்து வைத்து, இருவரையும் வெளியில் சென்று வரச் செய்வார்.... சண்டை முடிந்து காதல் ஆரம்பித்து விடும்.....).... அங்கு நாங்கள் சண்டையிடும் போது பேச்சு முற்றி, அவர்கள் குடும்ப்பத்தாரும் சேர்ந்து பேசி எனது கோபத்தை ஏற்றி விட்டனர்..... அவ்வாறு பேசும் போது மாமனாரைப் பற்றி நான் கடுஞ்சொல் பேசிவிட்டேன்.... அவவாறு பேசிய நான் மறு நாட் காலையிலேயே அவரிடம் மன்னிப்பு கேட்கும் எண்ணத்தில்... அவர்க்கு போன் செய்தேன்.... எடுக்கவில்லை..... மறுபடியும் என் சகலையிடம் ( என் மனைவியின் மூத்த அக்கா கணவர்) சொல்லி நான் அவரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் சொல்லச் சொன்னேன்..... ஆனால் அவரோ அதனை ஏற்காது.... என மனைவிடம் மேலும் கோபத்தை ஏற்றிவிட்டார்.....

07.07.2011 அன்று என் மனைவி, என் மாமியார், என் மச்சான் மூவரும் வந்து என் அம்மாவையும் மீறி.... நானில்லாத போது.... அவளின் நகைகளை எடுத்துச் சென்று விட்டனர்.... எனது அம்மா அவளின் காலில் விழுந்துள்ளார்கள்... அவர்களையும் மிகவும் தரக் குறைவாக என் மனைவியும், அவளும் அண்ணனும் பேசி, மேலும் இதனை தடுக்க வந்த என் இளைய சகோதரியையும் மிகவும் தரங் குறைந்த வார்த்தைகளால அவள் அண்ணன் பேசி வீட்டின் முன் சண்டையிட்டு என் மனைவியை அழைத்துச் சென்று விட்டான்....செல்லும் போது அவன் சொன்ன வார்த்தை..... " எனது தங்கச்சியுடன் வாழ வேண்டுமென்றால் அவனை ( நான்) மதுரைக்கு வரச் சொல்லுங்கள்" என்றுச் சொல்லி அழைத்துச் சென்றுவிட்டான்..... இவ்வளவு விஷயமும் நடந்த போதும், என் மாமியார் சிரித்தப் படியே... அருகில் நின்றுக் கொண்டிருந்தார்....

நான் எனது வீட்டிற்கு செல்லும் முன்பாகவே....அவர்கள் மூவரும் சென்று விட்டனர்.... நான் அவர்கள் அப்பாவை திட்டியதை... தவறு என்றுச் சொல்லிய என் மச்சான் கடைசி வரை... என்னிடம் கேட்கவே இல்லை.....
அன்றே. திருப்பரங்குன்றத்தில் உள்ள‌ எனது உறவினர் (அம்மாவின் தங்கை) வீட்டில் வைத்து சமாதான பேச்சு வார்த்தைக்கு வந்த எனது மாமியார், எனது மாமனார்... இருவரும்... அவர்களிடம்... எனது சகோதரிகள் இருவரும்...எனது மனைவியை மிகவும் கொடுமைப் படுத்துவதாகவும் ( கொடுமைன்னா என்னவென்று தெரியவில்லை), மாமியார் இடைஞ்சல் பண்ணுவதாகவும்... சொல்லி தனிக்குடித்தனம் தான் இதற்கு ஒரே தீர்வு என்றும் சொல்லிச் சென்றுவிட்டார்..... எனது சித்தப்பா( அம்மாவின் தங்கை கணவர்) எல்லாவற்றையும் கேட்டு விட்டு, சரி நீங்கள் உங்கள் மகளை வரச் சொல்லுங்கள்... நானும் என் மகனை வரச் சொல்லுகின்றேன்... பேசி ஒரு முடிவெடுப்போம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.... அடுத்த நாட் பேச்சு வார்த்தைக்கு எனது மனைவியும், எனது மாமியாரும் வந்துள்ளனர்... எனது அம்மாவும் சென்றுள்ளனர்.... என் அம்மா அவள் முதல் நாள் மரியாதைக் குறைவாக பேசிய காரணத்தினால் மிகவும் மனமுடைந்து தான் சென்றார்கள்..... அங்கும் என் மனைவி பேச ஆரம்பிக்கும் போதே மிகவும் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார்... உடனே எனது சித்தி ( அம்மாவின் தங்கை) "ஏம்மா, என்னச் சொன்னாலும் மரியாதைக் கொடுத்துச் சொல்" எனக் கூறியுள்ளார்கள் அதற்கும் மேல் மிகவும் மரியாதைக் குறைவாகவே பேசி என் அம்மாவை குறைக் கூறியுள்ளார்... இதனால் கோபமடைந்த என் சித்தி இப்போ ஒழுங்கா பேசப் போறியா இல்லையா எனக் கூறி கோபமடைந்துள்ளார்... இதற்குள்.... என் மனைவி எழுந்து.....வீட்டின் வாசலருகே வந்து... செருப்பை ஒரு காலில் போட்டுக் கொண்டு... மற்றொரு செருப்பை.... கையில் தூக்கி "போடி" என்றுச் சொல்லி.... மிரட்டியுள்ளார்.....இவ்வளவும் நடந்தபோதும்... என் மாமியார் சிரித்தப் படியே நின்றுள்ளார்.... தன் மகளை ஒன்றுமே சொல்லவில்லை....... அவள் செருப்பை தூக்கியதைக் கணட் எனது சித்தி... அருகிலிருந்த அவர்கள் மகனிடம்... "டேய், இங்கப் பாருடா, என்னை செருப்பக் காட்றா என்றுச் சொன்னவுடன்.... எந்தம்பி கோபத்தில் சோபாவைத் தூக்கியுள்ளான்... அதற்குள் எனது சித்தப்பா "டேய் பொம்பள பிள்ளைடா, அவ என்று அவனைத் தடுத்துவிட்டார்..... (உண்மையில் அன்று அவனைத் தடுத்திராவிட்டால் அன்றே அவன் அடிக்கும் அடியில் என் மனைவி உயிர் பிழைப்பாள் என்று சொல்லமுடியாது... அவனது கை விரல் கூட அவளைத் தொடவில்லை....)
இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள்...... மதுரை போலிஸ் ஸ்டேஷனில் நால்வர் மீதும் (அம்மா, சித்தி, சித்தப்பா, எனது தம்பி)கொலை முயற்சி என்று பொய் வழக்கு என் மாமனார் கொடுத்து, அதனை விசாரிக்க மதுரையிலிருந்து இரு காவலர்களை ஆட்டோவில் அழைத்து திருப்பரங்குன்றம் வந்துவிட்டார் எனது மாமனார் (என்ன்வொரு ப்ளான்)... அப்புறம்.....
விசாரனை என்ற பெயரில் திருப்பரங்குன்றம் ஸ்டேஷன் சென்றுள்ளனர்..... நால்வரும் ஸ்டேஷன் செல்லும் முன்னரே..... அங்கு என் மாமனார் ... ஒரு கம்யுனிஸ்ட் கட்சி மகளிர் அணியைச் சார்ந்த ஒரு பெண்ணின் மூலம் இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தை சொல்லி விட்டனர்...... இது நடக்கும் இத்தருவாயில்... நானும் என் நண்பனுடன்..... திருப்பரங்குன்றம் சென்று விடுகின்றேன்.... ஸ்டேஷனுக்கும்....... அங்கு இன்ஸ்பெக்டர்.... எல்லா விஷயத்தையும் என்னிடமும், என் அம்மாவிடமும் கேட்டுவிட்டு, என் மனைவியிடம் "ஏன்மா, கணவர் இல்லாதவர்கள் வேறு யாரிடம் செல்ல முடியும்," என்று கேட்கும் போதே... அந்த கட்சிப் மகளிர் அணி..... " சார், அவா அங்கு வாழ முடியாததற்கு காரணமே மாமியாரும், நாத்தனார் என்றுச் சொல்கின்றார் என்றுச் சொல்லி, ஆர்ப்பாட்டம் செய்தவுடன்..... இன்ஸ்பெக்டர் இரவு 9 மணி அளவில்.... இத இங்கு பேச முடியாது... என்றுச் சொல்லி திருப்பரங்குன்றத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு சொல்லிவிட்டார்...

மகளிர் காவல் நிலைய விசாரணை :

எனது சார்பில்.... என்னையும், என் அம்மாவையும்... உள்ளே விட்ட கண்ணியமிக்க மகளிர் இன்ஸ்பெக்டர்..... என் மனைவி சார்பில்,.... என் மனைவி, என் மாமனார், என் மாமியார், என் மச்சான், அந்த கட்சி மகளிர் அணி... உள்ளே விட்டது மட்டுமல்லாமல.... பெயரளவில் கூட.... எங்களிடம் ஒன்றுங் கேட்காமல்.... அவர்களின் பேச்சைக் கேட்டு..... என் அம்மாவை என் முன்னாலேயே..... அதிகாரத்தில் உள்ள திமிரோடும்..மிகவும் மரியாதைக் குறைவாகவும், மனதைக் காயப்படுத்தும் வார்த்தைக்களோடும்.... பேசி ..... கேவலப்படுத்தினர்.......மகனுக்கு கல்யாணம் முடிச்சாச்சுன்னா உனக்கு என்ன வேலை என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணையைக் கேட்டு கேவலப்படுத்திய நிகழ்ச்சியையெல்லாம் அங்கு தான் நான் பார்த்தேன்.இதில் ஒன்று மட்டுமே எனது பேச்சு ஏற்றுக் கொள்ளப்பட்டது.... அதாவது... சிவகாசியிலேயே தனிக் குடித்தனம் பண்ண காவல்துறை அலுவலர்களால்.... பெரும் மனதோடு........ மேலும் அங்கு என் மாமனார் பேசிய வார்த்தைகளெல்லாம் தனிப் பதிவே போடலாம்......மதிப்புமிக்க என் மாமனார் "எனது மகள் ஒரு வருடமாகவே சந்தோஷமாகவே இல்லை, தினந்தோறும் என்னிடம் போனில் சொல்லி அழுகின்றாள்" என்றுப் பொய்களை அள்ளி விடுகின்றார்... மேலும் எனது மனைவியிடம் நான் தனிமையில் சொல்லிய விஷயங்களையெல்லாம் பொதுவில் சொல்லி ( நான் சொன்ன அர்த்தத்தை மாற்றி) புலம்புகிறார்...
இறுதியில் மதிப்புமிக்க பெண் இன்ஸ்பெக்டரின் தீர்ப்பு :
1. தனிக்குடித்தனத்திற்கு ஒரு வாரத்தில் வீடு பார்க்க வேண்டும்.....
2. உன் வீட்டார் (அம்மா & சகோதரிகள்) யாரும் வரக் கூடாது... நீ போய் பார்த்துக் கொள்ளலாம் (தாராள மனது) ஆனால் அவள் (என் மனைவி) வீட்டிலிருந்து எல்லோரும் வருவர்.... ( அவள் வாழ்வதைப் பார்க்கவாம்)
3. நீ உன் மாமனார் வீட்டிற்கு போவது, வருவது உன் விருப்பம்......ஆனால் அவள் போவதை தடைச் செய்யக் கூடாது என்று
இதை எழுதி சம்மதமென்று பேப்பரில் கையெழுத்திடு அல்லது " நால்வர்" மீதான கொலை முயற்சி வழக்கு விசாரிக்கப்படும்......முடிந்தது காவல் துறையின் நியாயாமான விசாரனை, வழக்கு....... அவர்களிடம்..... நான் எவ்வளவும் பேசியும், வாதாடியும் ஒரு பயனுமில்லாததால்... கட்டாயத்தின் பேரில் எழுதி கொடுத்தேன்......என் மனைவி வீட்டார்க்கு ஒரே மட்டற்ற மகிழ்ச்சி...... உள்ளேயே கைக் குலுக்கி சந்தோஷத்தைப் பகிர்ந்துக் கொண்டனர்........ நான் ஸ்டேஷனிலிருந்து வெளியில் வந்து பார்த்தப் போது..... இரு முகங்கள் மிகவும் ஏக்கத்துடனும், வெளியில் மகிழ்ச்சியுடனும்........ அவர்கள் தான் எனக்கு மூத்தவர்கள்...... புரியவில்லையா நண்பர்களே......எனக்கு முன் என் மாமனார் வீட்டில் (இதே முறையில்) வாக்கப்பட்ட எனது சகலைகள் ( எனது மனைவியில் அக்கா கணவன்மார்கள்)

மூன்றாவதாக இவனும் தனது வீட்டில் வாக்கப் படுவான் என்று எண்ணிய எனது மாமனார். ஆனால் பாவம்..... இனித் தான் எனது சுயரூபம் வெளிப்படப் போகின்றது..... என்று அவர்களின் குடும்பத்தாருக்கும் யாருக்கும் தெரியவில்லை..... மிரட்டி விட்டோம் ஒரே வாரத்தில் தனி வீடு பார்த்து விடுவான் கணவன்... என்ற பகல் கனவில் இருந்த என் மனைவியும் என்னைப் பற்றி சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்பதை..... அடுத்த நடந்த நாட்களில் புரிய வைத்தேன்......

( நண்பர்களே..... மிகவும் விரிவாக எழுதியதற்கு மன்னிக்கவும்.... எவ்வளவோ முடிந்தளவிற்கு சுருக்கித் தந்துள்ளேன்......என் வாழ்வில் எவ்வளவோ தோல்விகள், பிரச்சனைகளைச் சந்தித்து உள்ளேன்... ஆனால் எந்த நேரத்திலும் மனதை தளரவிட்டதேயில்லை.... ஆனால் இந்த விஷயம் என் மனதை மட்டுமல்ல.... என் தன்னம்பிக்கை, என் உற்சாகம் அத்தனையையும் சிதைத்து விட்டது. மேலும் காவல் நிலையத்தில் நடந்த விஷயம் உண்மைக்கு மதிப்பு இல்லையென்பதை எனக்கு உணர்த்தியது...)....

அவள் விழிகள்...








என்னவளே,

நின் பரதமாடும் விழிகள் கண்டு
என் வழி மறந்தேன்......

ஊசலாடும் கரு விழி கண்டு
ரசிகன் ஆனேன்........

நின் வில் புருவம் கண்டு
காதலன் ஆனேன்......

நின் இமைகள் கண்டு
(என்னிமை துடிப்பதை நிறுத்தி)
உன்னையே காணும் சிலையானேன்.......

உன் கரங்கள் வழி நடத்த‌
நான் குருடாகவும் தயாரானேன்....

நின் பார்வையில்
என்னுரு மட்டுங் காண‌
உன்னையே காதலித்தேன்.......
உனக்காக எல்லாம் உனக்காக‌

என் பிரச்சனையைப் பற்றிய எனது கருத்துக்கள்

வணக்கம் நண்பர்களே,,

நான் பதிந்துள்ள எனது கடந்த 3 பதிவின் மூலமும் எந்து பிரச்சனைகளை கண்டிப்பாக அறிந்து இருப்பீர்கள்... நான் இந்த பிரச்சனையில் அனுபவப் பட்டபின் தான்.... என்னைப் போல் ஏராளமானோர் அடிப்பட்டது தெரிந்தது..... சிலருக்கு இந்த பிரச்சனையால் ( கல்யாணத்திற்கு பின் ஆண் பிள்ளைகளை மிரட்டி, காவல் நிலையம் மூலம் மிரட்டி, அவன் குடும்பத்தை விட்டு....தனிக்குடித்தனம் என்ற பெயரில் குடும்பத்தை பிரித்து அழைத்துச் செல்வது)
சிலர் இந்த் பிரச்சனையால் .... தங்களின் ஈகோ காரணத்தால் விட்டுக் கொடுக்க மனமில்லாமல் தங்களின் பிள்ளைகளின் திருமண உறவையே பிரித்துச் சென்று விடுகின்றனர்..... ஆதலால் தான்....இப்பிரச்சனைக்கு நான் என்னால் முயன்ற சிறு முடிவைத் தெரிவிக்கின்றேன்...

என் வாழ்க்கையில் நடந்த தவறு :
என்னை முதலில் பார்க்க என்னவளின் அப்பா வந்தபோதே என்னைப் பற்றியும், என் குடும்ப நிலவரத்தைப் பற்றியும், தகப்பனில்லாத என் சகோதரிக்களுக்கு நான் தான் தகப்பனாய் இருந்து கவனிக்க வேண்டும் என்பதையும், குடும்பத்தின் பொருளாதார நிலையையும், என் அம்மாவின் நிலையையும்..... விவரமாக எதனையும் மறைக்காமல்... சொல்லிவிட்டோம்......என்னை விட அவரது மகளைப் பற்றியும், மகளின் விருப்பங்களைப் பற்றியும், மகளின் குணங்களைப் பற்றியும், அவர்க்கு நன்குத் தெரியும். இப்படியிருக்கும் பட்சத்தில் அவர்..... யோசித்திருக்க வேண்டும்.... நம் மகளுக்கு ஏற்ற குடும்பம் தானா, நம் மகளின் படிப்பிற்கு ஏற்ற மாப்பிள்ளையா (என்னை விட படிப்பில் அவள் அதிகம் தான்), நம் மகள் இந்த குடும்பத்தில் மாமியாருடன் சேர்ந்து வாழ்ந்து விடுவாளா, பொறுப்புக்க‌ளை ஏற்றுக் கொள்வாளா என்று ஒரு தகப்பன் என்ற முறையில்..... தவறில்லை.....

அடுத்தது...... பெண் பார்க்கச் சென்ற அன்றிலிருந்தே என்னுடன் என்னவள் செல் போனில் பேசத் தொடங்கிவிட்டாள்.... அவளிடமும்... நான் எல்லா விவரங்களையும் தெரிவித்தேன்.... என் குணங்கள், என் பொறுப்புக்கள், என் அம்மாவை குறித்த என் முடிவு என எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.... நிச்சயம்.... அவள் யோசித்திருக்கலாம்.... தன்னால் முடியாது என்றால் என்னிடம் சொல்லியிருக்கலாம் அப்போதே..... வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுவதற்கு பதில் அன்றே ஒரு தீர்வு கிடைத்திருக்கும்.இருவருக்கும் மகிழ்வாக...

திருமணம் ஆன பின்னும் கூட ஒன்றரை வருடத்தில் ஒரு நாளும் என்னிடம் சொல்லவில்லை.....இது ஏன்.....? இதனால் யாருக்கு லாபம்? எல்லா நிகழ்வுகளையும் அவள் அப்பாவிடம் சொல்லியுள்ளார்...இந்த பிரச்சனைகளின் போது அவள் தந்தையார் என்னைப் பற்றி பொய்களையும், எனது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி தவறான செய்திகளையும், மட்டமான காரணங்களையும் (மகளை தனிக்குடித்தனம் வைக்கவேண்டுமென்ற ஓரே எண்ணத்தோடு) சொல்லிய போதும்..... என் மனைவி அமைதியாய் இருந்தது அவளும் அவரின் குற்றச்சாட்டுக்கெல்லாம் ஒப்புதல் அளிப்பதாகவே நான் கருதுகிறேன்... (அவர் மீண்டும் நான் அவளுடன் வாழும் போது இவற்றையெல்லான் நான் நினைத்தால் மகளின் வாழ்க்கை என்னவாகும் என்றுக் கூட சிந்திக்கவில்லை. மேலும் இறுதியில் எனது உறவினர்களிடம் எல்லாம் இவன் இதற்கு சம்மதிக்கவில்லையென்றால் நால்வர் மீது ( நான், அம்மா & 2 சகோதரிகள்) வரதட்சனைப் புகார் கொடுப்பேன் என்றே வெளிப்படையாக மிரட்டினார்... )

உண்மையில் என் அம்மாவிடம் தனிக் குடித்தனத்திற்கு ஆசைப் படுகிறேன் என்று சொல்லியிருந்தால் அவர்களே... இவள் பெயர் கூடத் தெரியாத அளவு.. சந்தோஷத்தோடு, என் மனதையும் மாற்றி.... தனிக் குடித்தனம் வைத்து இருப்பார்கள்... எனில் அவர்களுக்கு என் தகப்பனாரின் அரசு ஓய்வுதியம் வருகின்றது, மேலும் மதுரையில் வீடு உள்ளது...அப்படிப்பட்ட குணம் உள்ளவர்கள் தான் எனது அம்மா...

என்னிடம் சொல்ல சங்கடப்பட்டால் கூட அவளது நடத்தையில் பிடிக்காதவாறு காட்டியிருக்கலாம்.. அல்லது எங்களது உறவினர் யாரிடத்திலாவது சொல்லியிருக்கல்லாம்.... எதுவுமே இல்லாது கடைசியில் போலிஸ் ஸ்டேஷ்னில் சென்றது எந்த வகையில் நியாயம்.....அதுவும் நகையை எடுத்துச் சென்றது என் மீது நம்பிக்கையின்மையைக் காட்டுகின்றது..... என்னுடன் வாழ்ந்த வாழ்க்கையை.... எல்லாவற்றையும் அவள் அப்பாவிடம் சொல்லியது.... "எனக்கு நம்பிக்கை துரோகம்". உண்மையில் திருமணத்திற்கு பின் தினந்தோறும்... அவளது பெயரையே அடிக்கடி சொல்லியுளளேன்..... கனவிலும் கூட அவளை நான் பிரிந்ததில்லை.....அவள் நிழலைக் கூட சிற்பமாய் என்னுள் செதுக்கியுள்ளேன்....

முதலில் பெண்களுக்கு :

தோழிகளே.... முதலில் தங்களுக்கு வரப் போகும் கண்வன்மார்களுக்கும் குடும்பம் உண்டு... உங்களைப் போன்றே அவர்களுக்கும் அம்மா, அப்பா உண்டு என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.ஒரு வேளை உங்கள் சுபாவம்.... யாரிடமும் சேர்ந்து இல்லாமல், தனியாகத் தான் வாழ முடியுமென்றால், அதனை மாற்ற முடியாதென்றால்.... உடனடியாக முடிவாக தங்கள் தகப்பனாரிடம் சொல்லி சொந்த, பந்தம், குடும்பமில்லாத மாப்பிள்ளைப் பார்க்க்ச் சொல்லுங்கள்..தவறில்லை...
திருமணம் என்பது... இரு மணங்கள் மட்டுமல்ல இரு குடும்பங்கள் இணைவது.... குடும்பத்தை பிரிக்காதீர்கள்.... ஏற்கெனவே தமிழகத்தில் கூட்டுக் குடும்ப முறை.... வேப்பங்காயாக கசந்து, காலப் போக்கில் மறைந்துவிட்டது.....இருக்கும் அம்மா/ அப்பவையும் பிரித்து அவர்களின் கண்ணிரில் இன்ப வாழ்வு வாழலாமென்று எண்ணாதீர்கள்... அவ்வாறு.... உங்கள் பெற்றோர் கேட்கவில்லையென்றாலும்.... இன்றைய நாட்களில்.... பெண் பார்த்துவிட்டுச் செல்லும் போதே செல் போனின் நம்பர் தெரிந்துவிடுகின்றோம்... அதன் பின்னராவது எப்போதும் போல் மிஸ்டு கால் கொடுத்து தங்களவரிடம் தங்களின் விருப்பம், தங்களின் எதிர்ப்பார்ப்பு ஆகியவற்றை மிகவும் தெளிவாகவும், மறைக்காமலும் சொல்லி விடுங்கள்..... ஒன்று... நீஙகள் விட்டுக கொடுக்கவேண்டும்... அல்லது..அவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.... முடியாத சூழ் நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வது சாத்தியாமா என்று யோசிப்பது புத்திச்சாலித்தனம்..........பொதுவாக பெண்களைவிட ஆண்களுக்கு சிந்திக்கும் திறன் குறைவு தான்..... ஆனால் அதனை சொல்லும் விதத்தில் ஒரு பெண் சொன்னால் எந்தவொரு ஆண்ணும் ஏற்றுக் கொள்வான்.... முரட்டுக் குதிரைத் தான்..... ஆனால நேரங் கடந்தால்.... அன்பிற்கு கட்டுப்படுபவர்கள் தான் ஆண்கள்....

பெண் பார்க்கும் நண்பர்களுக்கு ::

பெண் பார்க்கும் போதே.... தங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும், என்று சொல்லிவிடுங்கள்.... அழகான பெண்ணை மட்டும் தேடாதீர்கள்... குணமுள்ள பெண்ணாகவும் தேடுங்கள்..... தங்கள் குடும்ப நிலவரத்தையும் சொல்லிவிடுங்கள் தவறில்லை..... அவர்கள் நம்மைப் பற்றி மட்டமாக எண்ணி விடுவர் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.. எனில் திருமண மூலம் வரும் உறவு...... நம் மரணம் பரியந்தம் என்பதை நினைவில் கொள்க......தங்களால் விட்டுக் கொடுக்க முடியுமா, மாற முடியுமா அல்லது மாற முடியாது என்பதையும் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்..... எனில் பொதுவாக பல குடும்பங்களில் பிரச்சனை புரிந்துக் கொள்ளாத, ஆண்களிடமிருந்தே ஆரம்பம் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்... பெண் பார்த்த வேகத்தில்.... ஆசையில் பொய்யான வாக்குகளையும், முடியாத காரியங்களைச் முடிப்பதாகவும் சொல்லக் கூடாது...... எனில் பெண்கள் இலகுவானவர்கள்..... நம் வார்த்தைகள் கூட காயப்படுத்திவிடக் கூடாது.....

முடிவு : : :
திருமணம் முடியும் நிமிடம் வரை நன்கு யோசிக்கலாம் முடிவை மாற்றலாம் தவறில்லை.....இணைந்தப் பின் வருந்துவது முட்டாள் தனம்....திருமணம் என்பது...... இரு மணங்கள் மட்டுமல்ல இரு குடும்பங்கள் இணைவதும் தான்...... ஆதலால் தான் திருமணத்திற்கு நம் சொந்தங்கள் அணைவரையும் அழைக்கின்றோம்......
வாழ்வில் மட்டுமல்ல தாழ்விலும்...
உயர்வில் மட்டுமல்ல தாழ்விலும்....
இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும்
சேர்ந்தே இணைந்தே வாழ்வது.....தான்
குடும்ப பந்தம்.......
விட்டுக் கொடுத்துச் செல்வது தான் வாழ்க்கை..... ஆனால் விட்டுக் கொடுத்துக் கொண்டே சென்றால் அதன் பெயர் அடிமைத் தனம்..... இன்று பலப் பேர் இப்படிப்பட்ட வாழ்க்கைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்....

சில நேரங்களில் பிரிவுகளும்... நம் அன்பை வளர்க்கும்.... அது தான் காதல்.... பிரச்சனைகளின் போது தான் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான அன்பை உணர முடியும்.......

இன்று நாம் நேசிக்கும் நபர் நாளை படுத்த படுக்கையானாலும்..... இப்போது இருப்பதை விட.... மிக அதிகமாக நேசிப்பது தான்.......... " காதல்.... காதல்".... திருமண பந்தத்தில் மாற்றிக் கொள்ளும் மாலை வாடினாலும்..... நாம் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பு, காதல் தினந்தோறும்.... உண்மையோடு வளர வேண்டுமேயன்றி கொஞ்ச கொஞ்சமாக தேயக் கூடாது..

என் மனதை சிதைத்த சம்பவம்..... பாகம் 2.

நான் வாழ்ந்த வாழ்க்கை :
நான் சிவகாசியில் ஒரு தனியார் கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் ஆனாலும் முதலாளியின் நன்மதிப்பை பெற்று வாழ்ந்து வருகின்றேன்.... சம்பளம் குறைவு என்றாலும், என் குடும்பத்தில் எப்போதும் பண பற்றாக்குறை காணப்பட்டாலும் எங்களது குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம், சமாதானம், அன்பு எப்போதும் இருக்கும்.... அதேப் போல் எனது மனைவியும் மிகவும் அன்பாகவும், நட்பாகவும், உரிமையோடும் பழகினாள். என் சகோதரிகளிடமும் நான் எதிர்ப்பார்த்ததை விடவும் உரிமையாக தோழியைப் போல் அவர்களின் உடைகளைக் கூட உடுத்தும் அளவிற்கு மிகவும் அன்பாக பழகினாள் எனது சகோதரிகள் குழந்தைகளின் மீதும் அன்பு செலுத்தினாள்.... என் அண்டை வீட்டாரும், உறவினர்கள் கூட பொறாமைப் படும் அளவிற்கு நடந்தாள்...உண்மையில்... என் அம்மாவை.... மாமியார் போல் அல்ல தன் அம்மாவைப் போல் பார்த்துக் கொண்டாள்.....அவர்களுக்கு உடம்புக்கு முடியவில்லையென்றால் எங்களது படுக்கையறையைக் கூட மூட மாட்டாள....அவ்வாறு கவனித்துக் கொண்டாள்....

அன்றைய நாட்களில்.... நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷத்துடனும், அன்புடனும், காதலுடனும் பழகினோம்..... உண்மையில் என் நண்பர்களே " டேய் உண்மையைச் சொல், நீ இவளை லவ் பண்ணித்தானே திருமணம் செய்தாய்" என்று கேட்குமளவிற்கு வாழ்ந்தோம்.... நான் அவள் கணவன் என்பதில் பெருமைக் கொண்டேன்... என்னையும்... அன்னைப் போல் கவனித்தாள், நேசித்தாள், அன்பு கொண்டாள்....

என் மனைவியைப் பற்றி இத்தளத்தில் நான் எழுதிய கவிதை......
http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF
அல்லது
http://success-joshi.blogspot.com/2010/06/blog-post_2917.html

இவ்வாறு நன்றாகத் தான் எல்லோரும் பொறாமைக் கொள்ளும் படியாகத் தான் வாழ்ந்தோம்... ஒரே குறையைத் தவிர......
குழந்தைச் செல்வம் மட்டும் இல்லாததே அந்தக் குறை.... ஆனாலும்.... அது ஒரு குறையாக எண்ணாமல்... அவளை ஒரு குழந்தையாகவே பாவித்து அன்பு செலுத்தினேன்...... அவள் சொல்வாள் என்னிடம் " எனக்கு கணவன் பிரச்சனையில்ல, மாமியார் பிரச்சனையில்லை, நாத்தனார் பிரச்சனையில்லை, நான் கடவுளை மறந்திடுவேன் என்று தான் எனக்கு குழந்தை இல்லையென்ற பிரச்சனையை... இறைவன் வைத்துள்ளான்" என்று.......

28.05.2011 அன்றுக் கூட என் இரண்டாவது சகோதரியின் மகனுக்கு மொட்டைப் போடும் நிகழ்ச்சியில் கூட என் மனைவியைப் பார்த்து இவர்கள் குடும்பத்திற்கு இப்படி ஒருவளா என்று வந்தவர்கள் அணைவரும் வியந்தனர்.....31.05.2011 அன்று என் மனைவி.... என் ஆச்சியை அவர்கள் வீட்டில் (அம்மாவின் அம்மா) மதுரைக்கு விடச் சென்றாள்....

31.05.2011 அன்று வரை வசந்தம் வீசிய என் வாழ்வில் இதற்கு மேல் தான் புயல் வீசியது......
( அடுத்த பாகத்தில் முடியும்)

என் மனதை சிதைத்த சம்பவம்..... பாகம் 1.

வணக்கம் நண்பர்களே,,

எனது வாழ்வில் நடந்த, என் மனதை சிதைத்த ஒரு அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்..... இதனைச் சொல்ல மிகவும் மனம் வெறுப்படைந்தவனாய், தயங்கி தயங்கித் தான் வெளியிடுகிறேன்...... எனக்கு நடந்த அனுபவம் ... இதனைப் படிக்கும் ஒருவரையாவது நிச்சயம் மாற்றும் என்ற எண்ணத்தோடு இதனை எழுதுகின்றேன்......

எனது திருமணம் 09.10.2009 அன்று மதுரையில் நடந்தது... திருமண நிச்சயம் செய்த அன்றே... நான் இந்த தளத்தின் மூலம் எனது நண்பர்களுக்கு எல்லாம் தெரியப்படுத்தினேன்........

எனது குடும்பம்.......
என் குடும்பத்தில் நான் தான் மூத்த பையன். இரண்டு இளைய சகோதரிகள். நான் கல்லூரிப் படிப்பை முடித்த இரண்டு மாதங்களில் ( 30.07.2001) அன்று எனது தந்தை கேன்சர் வியாதியால் இரண்டு வருடங்கள் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல் இறந்துவிட்டார்..எந்தவொரு சொத்துமில்லை, கொடுத்து உதவுமளவிற்கு எந்த சொந்தங்களும் இல்லை.... அப்பாவின் மறைவிற்குப் பின் நானும், எனது அம்மாவும் சேர்ந்து தான், மிகவும் கஷ்டப்பட்டு, எனது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் முடித்து வைத்தோம்... மேலும் அவர்களுக்கும் தலைப் பிரசவம், மூன்று கிறிஸ்மஸ் எல்லாம் செய்து வைத்தோம்....
இதற்கு இடையில் எனது அம்மாவிற்கு அடிக்கடி நெஞ்சு வலி மற்றும் மூளையில் இரத்தம் உரைந்து ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்தோம்...
இதற்கிடையில் எனக்கு ஒரு வாழ்க்கைத் துணையை அம்மாவின் முடிவோடு தேடினோம்......அம்மா பிறந்த மதுரையிலேயே.... அம்மாவையும் கவனித்து, சகோதரிகளையும் நேசிக்க ஒரு துணைவி வேண்டுமென்று....... சகோதர, கோதரிகளுடன் பிறந்த ஒருவளைத் தேடினோம்.... தேடி கண்டுப்பிடித்தோம்....

என்னவளின் குடும்பம் :
தாய், தகப்பன், ஒரு அண்ணன், இரண்டு மூத்த அக்கா, ஒரு இளைய சகோதரிகளுடன் சேர்ந்து பிறந்தவர் என்பதால் அவரை பெண் பார்க்க சம்மத்தித்தேன்.... அதற்கு முன் அவரது தகப்பன் ( எனது மாமனார்) என் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்து, விசாரித்தார்... அப்போதே எனது வீட்டின் எல்லா நிலைமைகளையும் ( கடன், எனது சம்பளம், அம்மாவின் நிலை) அணைத்தையும் மறைக்காமல் சொல்லி.... (எனென்றால் என் சகோதரிகளின் மாமியார் வீட்டார் எங்களுக்கு திருமணத்திற்கு முன் எல்லா விவரங்களையும் மறைத்துவிட்டனர்) திருமணத்திற்கு பின் அம்மாவையும் நான் தான் கவனிக்க வேண்டுமென்பதையும் சொல்லி, இது எல்லாம் சம்மதம் என்றால் ... நாங்கள் பெண் பார்க்க வ்ருகிறோம் என்று சொல்லி அனுப்பினோம்... அவரும் செல்லும் போது என் புகைப்படம் எல்லாம் வாங்கிச் சென்று, இரு நாட்களில் எங்களை பெண் பார்க்க வரச் சொன்னார்கள்.... நாங்களும் சென்று, ( நான் பார்த்த முதல் பெண்ணும், கடைசியும் ) இரு வீட்டாரின் சம்மத்தத்துடன்....திருமண தேதி நிச்சயித்து பேசி முடிததோம்.....

இதற்கு இடையில்,... திருமணம் முடியும் வரை.....என்னுடன் தினந்தோறும்... செல்போனில் பேசுவாள்...அப்போதெல்லாம் நான் போனில் என்னைப் பற்றியும், என் குணங்களைப் பற்றியும், என் அம்மா & சகோதரிகளின் குடும்பத்தைப் பற்றியும், அம்மாவை நான் தான் பார்ர்க்க வேண்டும் என்பதையும்... எனது குடும்ப கடன் விவரத்தையும் .. ஆனாலும் அதற்கு என் அம்மாவின் அம்மா சொத்து வரும் என்பதையும் வரும் ஆதலால் கடனுக்காக நாம் கவலைப்பட வேண்டாம் என்றும் சொன்னேன்.... எனக்கு மனைவியாய் வர வேண்டியவளைக் குறித்து என் கல்லூரி நாட்களிலேயே கவிதை எழுதியுள்ளேன்.....இணையத்தில் அதன் முகவரி http://success-joshi.blogspot.com/2011/06/blog-post_2093.html

இரு வீட்டாரின் சம்மதத்துடன், ஆசிர்வாதத்துடன் மதுரையில் தேவாலயத்தில் 09.10.2009 அன்று.... திருமணம் முடிந்தது.......

(நண்பர்ளே எனது வாழ்வில் 01.08.2009 நடந்த சம்பவங்களை முடிந்தளவிற்கு சுருக்கிச் சொல்கின்றேன்.... மீதம் அடுத்த பாகத்தில்... நான் வாழ்ந்த வாழ்க்கை)