வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, September 28, 2017

ஆறறிவு மானிடனே...............


அடிப்பட்ட விலங்கினத்தை
காப்பாற்றிட அவ்வினத்தின்
விலங்குகள் எல்லாம்
ஒன்றினைந்து போராடுகின்றன
இவ்வுலகில்!

Image may contain: bird
தன்னினத்திற்கு
பிரச்சனை யென்றவுடன்
வேறுபாடுகள் மறந்து
இணைந்து எதிர்க்கின்றன
ஐந்தறிவு உள்ள
விலங்கினங்களும்!

ஆனால் காயப்பட்ட
மனிதனை காப்பாற்றிட
மனித இனம் தயங்குவதும்
விலகி செல்வதும் அன்றி
அதை புகைப்படம் எடுப்பதும்
தகுமோ???

மனித இனத்தில் மட்டுமே
எங்கோ பிரச்சனையென்று
கண்டும் காணாது
கேட்டும் கேளாது
ஒதுங்கிசென்றிடும்
ஆறறிவு மானிடரே
நீர் எவ்விதத்தில்
விலங்கினத்தை விட சிறந்தவர்கள்???

Wednesday, September 6, 2017

எனக்குள் நானே................





****** எனக்குள் நான்   ********  


தேடுகின்றேன் நான்
என்னுள் என்னை 
தேடுகின்றேன்!

தொலைத்த இடம்
எதுவென்று தெரியவில்லை
தொலைந்த விதமும்
புரியவில்லை!
நான் இருக்கின்றேனா
எனவும் விளங்கவில்லை
என்னுள் நானே
செதுக்குகின்றேன்!
எனக்குள் நானே
உருகுகின்றேன்!
எனக்குள் நானே
தயங்குகின்றேன்!
எனக்குள் நானே
வினாவாய் பதிலாய்
ஆவலாய் வியப்பாய்
கண்டென்னை ரசிக்கின்றேன்!
சூழலின் பிடியில்
சிக்கி அவஸ்தையாய்
என் மனம் விரும்பாவிடினும்
செயலாகின்றேன்!
காற்றினில் அசைந்தாடும்
நாணலாய் வளைகின்றேன்
விருப்ப மில்லாவிடினும்
சூழலில்....
காற்றில் கலைந்திடும்
மேகங்களாய்
கலைக்கின்றேன்
என் ஆசைகளையும்
என் கனவுகளையும்!
நினைவுகள் மனதை
மூழ்கடித்திருந்தாலும்
செயல்கள் தாமரையாய்
என்னையும் மீறுகின்றன!

Image may contain: fire and night

விழுகின்ற பொழுதும்
என்னை நானே
தாங்கி நிற்கின்றேன்!
வீழ்கின்ற பொழுதும்
என்னை நானே
தூக்கி விடுகின்றேன்!

என் நிழலும்
என்னை வெறுக்கின்றதே
என் சூழலும்
என்னை அனைக்கின்றதே!

விழிகளும் ஏங்குகின்றதே
மாற்றங்களை நாடி
மனமும் தான் கல்லானதே
ஏமாற்றங்களையே கண்டதினால்!

பிடிவாதம் பிடித்திடும்
குழந்தையை தேற்றுவது போல
இதுவும் கடந்திடும்னெறு
சொல்லி மனதினை தேற்றுகின்றேன்!