வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 17, 2010

என்றும் என் தோழியவள்.........

**** என்றும் என் தோழியவள் *****



பக்கத்து வீட்டில் குடியிருந்து
அறிமுகம் ஆனாய்
எதிரெதிர் பார்க்கையில் புன்னகையால்
பழக்கம் ஆனாய்
தண்ணீர்க் குழாயடியில் பேசிபேசி
தோழமை யானாய்!

                               
           
ஒருவடொருவர் மனம்விட்டுப் பேசி
தோழி யானாய்!

என் இன்பத்தை மட்டுமல்ல‌
துயரினையும் உரிமையோடு
கேட்டு பங்கிட்டாய்
பள்ளி நிகழ்வுகளோடு
வீட்டின் துயரையும்
பகிர்ந்துக் கொண்டாய்!

உன் பெற்றோர்
நம்மைப் பற்றி
விசாரித்த பொழுதும்
தெளிவாக உறுதியாக‌
சொன்னாய் நான்
"உன் தோழனென்று"

நிகழ்கால சோகத்தோடு
எதிர்கால லட்சியத்தையும்
சொல்லி வியப்படைந்தாய்

என் திறமையினை
கண்டும் ஆச்சரியமுற்றாய்
அதே சமயத்தில்
என் தவறினைக்
கண்டும் திருந்தச் செய்தாய்!

வயதின் கோளாறால்
தடுமாறிய போதும்
உறுதியாக
புரிந்து புரிய வைத்தாய்!

உடல்நிலை
சரியில்லாத பொழுதும்
அன்னையைப் போல்
தலைக் கோதிவிட்டு
அன்பின் வார்த்தைகளினால்
ஆறுதல் தந்தாய்!





நமக்குள் இவ்வாறு
நட்பு வளர்ந்தாலும்
அடுத்தவர் பார்வைக்கும்
கண்ணியமாய்
நடந்துக் கொள்ள வைத்தாய்!

உன் தோழிகள்
நம் நட்பினை பகிர‌
வந்தபோது சண்டைக் கோழியாய்
சீறி விலக வைத்தாய்!

அடுத்தவர் உன்னிடம்
என் குறையினைப் பற்றி
தவறாக சொல்லிய போதும்
"என் நண்பன்" என்று
பெருமையாக சொல்லி
வாய் மூட வைத்தாய்
அதே நேரத்தில்
தனிமையில் சந்திக்கும் போது
யாருமறியாது என்
குறையினை சுட்டிக்காட்டி
கண்டித்திடும் ஆசிரியை ஆனாய்.........
                                      

நட்பா காதலா
என்று அறிந்தோர் கேட்கையிலே
மாறிடும் காதல் அல்ல‌
மாறிடா நட்பு அவன்
எந்தன் நண்பன் என்றென்றும்
என்று சொல்லி
நட்பிற்கு மரியாதை செய்தாய்...........
சண்டைகள் என்னிடம் போட்டு
பேசாமல் நான் இருந்த போதும்
நீ கோயிலில் தவறாது
எனக்காக பிரார்த்தனை செய்தாய்!
வாலிபத்தில் வந்த‌
காதலில் நீ தோற்ற‌
போதும் கூட‌
நான் வாழ்வில்
ஜெயிக்க வேண்டுமென்று
எனக்கு உரமேற்றினாய்!
உன் இன்பங்களை
என்னிடம் சொல்லாவிட்டாலும்
நின் கண்ணீரினை
என் முன்பாகவே சொல்லி
நட்பினை வாழ வைத்தாய்!
திருமணத்தன்றும் எல்லோர்
முன்னிலையிலும்
உன் கணவரிடம் பெருமையாக‌
அறிமுகம் செய்தாய்
"நண்பனென்று"
இன்னுமெத்தனை ஜென்மம்
எடுத்தாலும்
என் தோழியாய்
நீ ஒருவள் போதுமடி எனக்கு!


Thursday, June 24, 2010

உண்மைச் சம்பவம்...!!

எங்களது குடும்பத்தினர் அணைவரும் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். மேலும் சில நேரங்களில் சில சம்பவங்கள் எதிர்பாராமல் பெரிய "காமெடி" ஆகி விடுகின்றது. அவற்றில் ஒன்றுத் தான் இந்த‌ உண்மைச் சம்பவம்..........

என் தங்கையின் மகளுக்கு (ஒரு வயது குழந்தை) காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தோம். அப்போது எனது அம்மாவுக்கும், எனது சகோதரிக்கும் இடையே தொலைப் பேசியில் நடந்த ஒரு உரையாடல் :

அம்மா : என்ன பாப்பா, எல்லா விஷயத்திற்கும் ஏற்பாடு பண்ணியாச்சா?

சகோதரி : பண்ணிட்டேன் அம்மா, டேபிள் சேர்க்கு அவர் (கணவர்) இப்போ தான் சொல்லப் போறார் அம்மா.

அம்மா : காது குத்த ஆசாரிக்கு சொல்லியாச்சா?

சகோதரி : அதுக்கு வேற சொல்லனுமா..... இப்பத் தான் வந்துட்டுப் போறார்......

அம்மா : (புரியாமல்) இப்பத் தானா, எதற்கு ?????/

சகோதரி : வீட்டு ஜன்னல்ல ஓட்டைப் போட இப்பத்தான் ஆசாரி வந்து முடிச்சிட்டுப் போறார், ம் மறுபடியும் வரச் சொல்லனும்மா???????

(என்னத் தோழர்களே புரிந்ததா என் அம்மா சொன்னது " காது குத்தும் ஆசாரி" ஆனால் என் தங்கைச் சொன்னது " மர ஆசாரி"... )

வாங்க வாங்க சிரிக்கலாம்....

தேர்வு முடிந்ததும் :

மாணவன்1 : வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.

மாணவன்2 : இப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா?

****** **************

மாணவன்1 : ப‌ரி‌ட்சை முடி‌‌ஞ்‌சிடி‌ச்‌சி.. இ‌னிமே எ‌ன்ன செ‌ய்யலா‌ம்னு
முடிவெடு‌த்து இரு‌க்க?

மாணவன்2 : இ‌னிமே படி‌க்கவே‌க் கூடாது‌ன்னு முடிவெடு‌த்து இரு‌க்கே‌ன்டா..

****** **************

ஆசிரியர் : எ‌ங்கடா உ‌ன் ந‌ண்பன‌க் காணோ‌ம்?

மாணவன் : டெ‌ல்‌லி‌க்கு போ‌ய் இரு‌க்கா‌ன் சா‌ர்?

ஆசிரியர் : ஏ‌ன்..

மாணவன் : ‌நீ‌ங்க தானே சொ‌ன்‌னீ‌ங்க. வி‌ண்ண‌ப்ப‌த்த கேபிடல்ல" பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய சொல்லி.

****** **************
கு‌ளி‌க்கு‌ம் போது

நண்பர் 1 : டே‌ய் ம‌ச்சா‌ன் தல‌ை‌க்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா!
இ‌ல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!

நண்பர் 2 : மொ‌த‌ல்ல ‌நீ பாத்ரூமு‌க்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி.
அதுதா‌ன் எ‌ங்களு‌க்கு நல்லது!

****** **************

பெ‌த்த பாச‌ம்

வ‌ந்தவர் : இன்‌ஸ்பெக்டர் சார்.. எ‌ன் பையன‌க் காணோ‌ம்.. எ‌ப்படியவது
இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள க‌ண்டு‌பிடி‌ச்‌சிடு‌ங்க.

இன்‌ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?

வ‌ந்தவர் : இல்லேன்னா ‌வீ‌ட்ல இரு‌ந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும்
செலவழிச்சுடுவான்.
****** **************

வரவே‌ற்பாள‌ர்

நண்பர் 1 : அவனு‌க்கு ஆனாலு‌ம் ரொ‌ம்ப‌த்தா‌ன் அல‌ட்டல் ஜா‌ஸ்‌தி டா..

நண்பர் 2 : ஏ‌ன்டா அ‌ப்படி சொ‌ல்ற?

நண்பர் 1 : ‌பி‌ன்ன எ‌ன்னடா உங்க வீட்டுத் திண்ணையிலே எப்பவும் ஒரு பாட்டி
உட்கார்ந்து இருக்காங்களே! யார் அவங்க‌ன்னு கே‌ட்டது‌க்கு,
அவங்கதான் எங்க வீட்டு ரிசப்ஷனி‌ஸ்‌ட்டு‌ன்னு சொ‌ல்றா‌ன்.
****** **************

நண்பர்களின் நகைச்சுவைகள் :::

சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.

ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.

கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.

சோமு - ராமு : ?!?!?!?!?!?

***

ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு

ந‌ண்ப‌ன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.

***

டே‌ய் ந‌ம்ம கூ‌ட்ட‌த்‌தில ரௌடியோட பையன சேர்த்தது தப்பா போச்சுடா!

ஏன்டா? எ‌ன்னடா ப‌ண்ணா‌ன்?

ஒழு‌ங்க தலைய சீவிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.

***

ஏ‌ன்டா எ‌ப்படா உ‌ன் க‌ல்யாண‌ம்?

காத‌ல் க‌ல்யாண‌ம் ப‌ண்‌ணி‌‌க்‌கி‌ட்டா தற்கொலை பண்ணிக்குவேன்னு காத‌லியோடா அப்பா மிரட்டறாருடா

ந‌ண்ப‌ன் : க‌ல்யாண‌த்து‌க்கு தடையா இருந்தா கொலை பண்ணிடுவேன்னு ‌நீ ‌மிர‌ட்டு
******

ம‌ணி : என் லவர் சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும்.

சேகர‌் : இதென்ன பெரிசு என் லவர் சிரிச்சா பல்லே விழும்.

***

டே‌ய் என‌க்கு ஒரு ச‌ந்தேகமுடா...

சொ‌ல்லு ‌‌தீ‌ர்‌த்து வை‌க்‌கிறேன‌்.

முத‌ல் முதல்ல மின்சாரம் கண்டுபிடிச்சப்ப என்னடா நடந்து இரு‌க்கு‌ம்?

ஒருவருக்கு பயங்கரமா "ஷாக்" அடிச்சிருக்கு‌ம்

உ‌ன்‌ட்டா போ‌ய் கே‌ட்டே‌ன் பாரு

***


1 : உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்கப்பா கிட்ட 1 ரூபா கேக்கற.
மொத்தம் உ‌ன் ‌கி‌ட்ட எ‌வ்வளவு டா இரு‌க்கு‌ம்?
2: ஒரு ரூபா இருக்கும்.
1 : டே‌ய் உன‌க்கு கணக்கு தெரியாது‌ன்னு ‌நினை‌க்‌கிறே‌ன்.
2 : உ‌ன‌க்கு‌த்தா‌ன் எங்க அப்பாவை பத்தி தெரியாதுடா

***

ந‌ம்ம ரமே‌ஷ‌் ஒரு நூறு ரூபா இல்லாம கஷ்டப்படறாண்டா?
ஏ‌ன் உன்கிட்ட கேட்டானா?
ஊஹும் நான் கேட்டேன். இ‌ல்‌ல‌ன்னு சொ‌ல்‌லி‌ட்டா‌ன்.

***

பூக்காரி பொண்ண கட்டினது பெ‌ரிய த‌ப்புடா
ஏன்டா அ‌ப்படி சொ‌‌ல்ற?
தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறாடா.

***

காதலர்களின் நகைச்சுவைகள்

காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.

காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.

காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.

******* ****** *******

காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .

காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . .

******* ****** *******

காதலி : ஏங்க நாளை முதல் உங்களைப் பார்க்க பீச்சுக்கு வர மாட்டேன்

காதலன் : ஏன் டியர்.....

காதலி : எங்கப்பா என்னை மிரட்டுறாருங்க....

காதலன்: என்ன டியர் மிரட்டுறார்.....?

காதலி : இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுருவேன்னு சொல்றார்.....

******* ****** *******

காதலன் : அன்பே, நான் உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன் டியர். வா ஓடிப் போகலாம்.....

காதலி : முதிலில் ஒரு "அப்பாச்சி" வண்டி வாங்கு, என்னால ஒடி வர முடியாது......

******* ****** *******

காதலன் : என் அன்பே, ஒரு வேளை சாப்பாடுன்னாலும் நான் உனக்கு உழைத்து போடுறேன், வா

காதலன் : அப்படின்னா, அடுத்த வேளை சோற்றுக்கு.....

Wednesday, June 23, 2010

திருமணமானவர்களின் நகைச்சுவைகள்

குடி குடியைக் கெடுக்கும்னு சொல்றது ரொம்ப சரி

எ‌ப்படிடா சொ‌ல்ற

கல்யாணம் ஆனதும் மனைவி குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாளே.

********** *******************

உங்களுக்கும் உங்க கணவருக்கும் பொதுவான அம்சம் என்ன்? ‌

ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் ஆச்சு.
********** *******************

கணவன் : நம்முடைய திருமண நாளை நீ எப்படி கொண்டாட விரும்புகிறாய்?

மனைவி : நான் இதுவரை போய் பார்க்காத இடத்திற்கு போக வேண்டும்
என்று விரும்புகிறேன்.

கணவன் : அப்படியா.... சரி அப்போ நம்ம வீட்டு கிட்சனுக்குப் போகலாம்.
********** *******************

மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்?

சினேகிதி : அ‌ப்படியா... ந‌ல்ல ‌விஷயமா‌ச்சே.. அதுக்கு முன்னாடி எ‌ப்படி இரு‌ந்தா‌ர்.

மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்
********** *******************

கணவர் :விவாகரத்திற்கு முழு காரணம் எ‌ன்னோட...

நண்பர் : யாருடா?

கணவர் : எ‌ன்னோட திருமணம்தா‌ன்.
********** *******************

நண்பர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

கணவர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய
கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்

********** *******************
நண்பர் : நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் மனைவியின் கைகளை
பிடித்தபடியே இருக்கின்றீர்கள்.

கணவன் : நான் கையை விட்டுவிட்டால் உடனே அவள் பொருட்கள்
வாங்க கடைக்குச் சென்றுவிடுவாள்.
********** *******************
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை
காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு
வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!
**************************

கணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை!

மனைவி : பின்ன இருக்காதா . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!

கணவன் : ?!?!?
**************************

கணவன் : எப்போதெல்லாம் நீ மனவருத்தத்துடன் இருக்கிறாயோ அப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் போய் நின்று கொண்டு, நீ எவ்வளவு
அழகாக இருக்கிறாய். என்னால் நம்பவே முடியவில்லை என்று சொல்.
உனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.

மனை‌வி : ‌நிஜமாகவா...

கணவன் : ஆனால் இதை அடிக்கடி செய்ய வேண்டாம்.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
**************************

மனைவி : ஏங்க டி.வில படத்தைப் பார்த்து ஏங்க அழுகிறீங்க?

கணவன் : அடியே, அது படமல்ல, நான் வாழ்க்கையில் கடைசியாய்
சந்தோஷமாய் இருந்த நாள், அதாண்டி நம்ம கல்யாண சிடி......

மனைவி : அதுக்கு என்ன இப்போ?

கணவன் : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே என்று நினைத்து அழுகின்றேன்.....

**************************

என் மனைவி....

இறைவனால்
எனக்காக
எனக்கு மட்டும்
அளிக்கப் பட்ட‌
உயிருள்ள பரிசு அவள்.......

தேடித் தேடி
அலைந்தேன் அவளைக் காண‌
ஆனால்
தேடி வந்தாள்
என் வாழ்வில் இணைய..

மனங்கள் இணைந்தன‌
ந‌ம்
குடும்பங்களும் இணைந்தன‌

தோல்விகளே
கண்டு வந்த‌
என் வாழ்வில்
நீ தான் எந்தன்
முதல் வெற்றி.....

எப்போதும் உந்தன்
புன்னகை முகம் கண்டால்
போதுமடி எனக்கு
உணவு ஒன்றும் வேண்டாம்.....

உன்னை மட்டுமல்லாது
என்னையும்
நின் சேயையைப் போல்
கவணிக்கும்
நீ போதுமடி எனக்கு.......

தோல்விகளால் துவண்ட‌
எனக்கு இறைவன் அளித்த‌
ஆறுதல் பரிசு.......

என்மீது நான் கொண்ட‌
நம்பிக்கையை விட‌
உன்மீது நான் கொண்ட‌
நம்பிக்கை அதிக‌மடி

உன் ஆறுதல் வார்த்தைகள்
போதுமடி.... அதற்காகவே
எத்தனை முறை வேண்டுமானாலும்
இன்னும் தோற்க
தயாராக உள்ளேன்.......

நின் தூக்கத்திலும்
என்மீது கொண்ட
அன்பை
நான் உணர்கின்றேன்.....

உன்னைப் பற்றி
கவிதை எழுதத் தான்
நாட் கணக்கில்
வார கணக்கில்
மாத கணக்கில்
யோசிக்கி ன்றேன்.... ஆனால்
வார்த்தைகள் ஒன்றும்
தோன்ற வில்லை......

அப்போது தான்
என் மனச் சாட்சி சொல்லியது
" இதயத்திற்கு அப்பால்
உள்ளவர்களை நினைத்து
கவிப் பாவும் பாடலாம்
கட்டுரையும் எழுதலாம்....
ஆனால் உன்
இதயமாகவே வாழ்பவளைப் பற்றி
எழுத இன்னும்
உலக மொழிகளில்
வார்த்தைகள் இல்லை நணபரே"" என்று....

என்
வாழ்க்கைப் பயணத்தின்
நின் முகங்கண்டே
என்
இறுதி மூச்சை
நிறுத்த வேண்டும்......

என் மனைவிக்கு......

என் துணையே,

அன்பே நீ நெருப்பாயிரு
என் வாழ்வில் தீபமேற்ற.......

அன்பே நீ குளிராயிரு
என் மனதினை குளிரூட்ட.....

அன்பே நீ ஆசிரியராயிரு
நான் புதியதை கற்றிட.........

அன்பே நீ தோழியாயிரு
என் நட்பினை வளர்க்க.......

அன்பே நீயென் முயற்சியாயிரு
நம் வாழ்வில் உயர்ந்திட.......

அன்பே நீயென் காதலியாயிரு
என் காதலை அனுபவித்திட‌
(என் மரணம் வரை)

காதல்...... காதல்...... காதல்....

விரித்த வலையில்
தானே மாட்டும்
அதிசயம்
காதலில் மட்டும்...........

விழுந்தவர் வீழ்ந்தாலும்
விழ வைத்தது
என்றும் அழியாது.............

சில நேரங்களில்
குப்பை மேட்டையும்
கோயில் கோபுரமாக்கும்...
கோயில் கோபுரங்களையும்
குப்பை மேடாகும்.....

சாதாரண மானவனையும்
சாதிக்க வைக்கும்

காதல்
இருபுறமும்
பட்டை தீட்டிய‌
வாள்......

காதலுக்காய் மரித்தோர் பலர்
ஆனால்
காதலென்றும்
உயிர்ப்பலி கேட்டதில்லை.......


காதலர்கள் மரித்தாலும்
காதலென்றும் மரித்த தில்லை..!

என் ஒரு தலைக் காதலிக்கு....

(என் கல்லூரி நாட்களில் நான் எழுதிய காதல் கிறுக்கல்)

என் உயிரின் உறவே,

வணக்கம்
உன்னையே நான்
நினைப்பதால் நான் நலம்!
நீ எப்படி உள்ளாய்?

இன்றளவும்
நான் உன்னுடன்
பேசியது மில்லை
பழகியது மில்லை
ஆனால்
நான் உன்னுடன் தான்
வாழ்கின்றேன் என்னுள்
நின் நினைவுகளோடு......

நான் கொண்ட
நினைவுகளை
ஓவியமாய் தீட்டிடத் தானாசை
ஆனால்
நான் ஓவியன் அல்ல‌

நான் தினந்தோறும்
என் நிழலுடன்
பேசுகின்றேன் ‍ ஆம்
எனக்கு என்னவென்று
எனக்கேத்
தெரிய வில்லை?

கையளவு
இதயத்தில்
அளவில்லா நிறையில்லாமல்
உனது நினைவு
வளர்ந்த தெப்படி?

இதுவரை
நீ என்னைக்
காண வேண்டுமென்று
உனது விழிகளை
திருப்பிய தில்லை
ஆனால்
எனது விழிகளோ
நீ வருந்திசை நோக்கியே எப்போதும்....

உன்
மௌனமெனும் மொழியால்
என்னிதயத்தில்
காதல் வளருகின்றதடி......

உன் ந‌டை எனக்கு
நடனமாய் தெரிகின்றது....
உனது பேச்சுக்கள்
எனக்கே உரியவையென்று
அல்லவா
என்னிதயம் எண்ணுகின்றது.......

நீ செல்லும்
சைக்கிளும் என்னை
ஏளனம் செய்கின்றது
"தான் பிறவிப் பயனை
அடைந்து விட்டதென்று"
பாவம்
அதற்கெப்படித் தெரியும்
உன் தாய் தன்
உடலில் சுமந்ததை விட‌
நான் அதிகமாக
என்னுள்
சுமக்கி றேனென்று.....

விண்ணிலவை
நேசித்த என்னை
உன்னை நேசிக்க வைத்தது
உனது
அமைதி தானடி..........

கல்லூரி யெனும்
வசந்த ராகம் பாடிய‌
என்னை
காதலெனும்
மௌன ராகம்
பாட வைத்தாயே

கும்பலாய் ஆடிப்பாடி
திரிந்த யெனக்கு
தனிமையை நேசிக்கவும்
தனிமையில் பேசவும்
கற்றுத் தந்தாயே

அழிந்துப் போகும்
அழகிற்காய் அல்ல‌
அழியா காதலுக்காய்
உன்னை விரும்புகின்றேன்.

நீ
என்னைக் காதலிப்பதும்
என்னை மறுப்பதும்
உனது உரிமை
ஆனால்
என்னை
மறக்கச் சொல்வது
"தீண்டாமை குற்றம்"
அக்குற்றம்
என்றும் என்னால்
மன்னிக்கப் படாதது.......

மௌனத்தால் வளர்த்த‌
என் காதலை
நின்
மௌனத்தாலேயே
கலைத்து விடாதே......

என் மனதிற்கு நான் எழுதும் கிறுக்கல்

என் மனமே,

இலட்சியம் இல்லாத மனமே
தோல்விகளில் துவண்டது போதும்
ஏளனங்களினால் வருந்தியது போதும்....
எழுந்திரு........ விழித்திடு........

உன் எதிர்காலத்தை
அடுத்தவனிடம் கையைக் காட்டி
கேட்காதே...........
உன்னால் முடியும் என்று
உன்னை தட்டி எழுப்பு........

முயற்சிகளில் தோற்பவன்
தோல்வியாளன் அல்ல‌
முயற்சிகளை விடுபவனே
தோல்வியாளன்........

முன்னேறியவனைக் கண்டு
பொறாமைப் பட்டது போதும் ‍ அவன்
முன்னேறிய வழியை
அறிந்துக் கொள்......

எனக்கு வழிக்காட்ட‌
யாருமில்லை என்று வருந்தாதே
நான் முன்செல்ல‌
பாதையில்லை என்று தேம்பாதே

இன்றே
விழித்தெழு துணிவுடன்
எடுத்து வை உனது முதலடியை
அதுவே
நாளை எல்லோரும்
பின்பற்றும் சரித்திரமாகும்.......

எல்லோரிடமும் அன்பாயிரு
ஆனால் அடிமையாகாதே
அன்பைச் செலுத்து
அதற்கு விலைப் பேசாதே........

சிந்திக்க பழகிக் கொள்
சிந்தித்ததை செயலாக்க கற்றுக் கொள்
செயலினை பழக்கமாக்க மாற்று
பழக்கத்தை வழக்க மாக்கு

விழுந்தாலும் பரவாயில்லை
மீண்டும் ஓட‌
உயிர் உள்ளதென்று
உறுதியுடன் எழுந்திரு.........

விழும் போதெல்லாம்
எழுந்திருப்பவனே வீரன்......

போராடு போராடு
வெற்றி பெற வேண்டுமென்று அல்ல‌
தோல்வி அடையக் கூடாதென்று......

இன்றைய
உன் தரித்திரத்தை எண்ணாமல் போராடு
"அச்சமில்லை அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சமில்லை" என்ற
மீசைப் புலவனின் வரிகளை
மனதில் நினைத்து போராடு.....
உன் தரித்திரங்கள்
அதுவே
நாளைக்கு சரித்திரமாகும்......

நீ அடுத்தவர்
நிழலில் வளரும்
கொடியாயிராதே
அடுத்தவர்க்கு
நிழல் தரும்
விருட்சமாயிருக்க நினை......

விரைவில்
வெற்றி
உன்னைத் தேடி வரும்.......
வெற்றி உனதே..........

நீ
சாதாரணமானவன் அல்ல‌
நீ
சாதிக்கப் பிறந்தவன்.

என் தோழி.......



என்னால் முடியாது
என்றி ருந்தேன்
ஏன் முடியாது என்று
என்னை சிந்திக்க வைத்தாள்!!!!!

என்னால் முடியுமா
என்றி ருந்தேன்
உன்னால் முடியும் என்று
என்னை முயற்சிக்க வைத்தாள்!!!!!

எல்லாம் இழந்தேன்
என்றி ருந்தேன்
இறக்க வில்லை என்று
என்னை உணர வைத்தாள்!!!!

எல்லம் தோற்றேன்
என்றி ருந்தேன்
" நீ சரியாக
முயல வில்லை என்று
எந்தவறுகளை திருத்த வைத்தாள்!!!!!

உதவுவார் யாருமில்லை
என்றி ருந்தேன்
" நீ உதவி வாங்கிட அல்ல‌
உதவியளித்திட பிறந்தவன் என்று
என்மதிப்பை உணர வைத்தாள்!!!!!

முன்னேற பாதையில்லை
என்றி ருந்தேன்
" நீ துணிந்து முதலடி
எடுத்து வை ‍அதுவே
பிறர் பின்பற்றும் பாதையாகும்" என்று
என்னை முன்னேற்றப்
பாதையில் நடக்க வைத்தாள்!!!!!!

அவள் தான்
என் தோழி........
என் இன்பத்தில் அல்ல‌
என் துன்பத்தில் மட்டும்
பங்கு கொண்டவள்
என்றென்றும் அவள்
என் தோழி...................

என் இணையத் தோழி ஜெப ராணிக்கு.........

என் பிரியமான தோழியே,,

இணையத் தளத்தில்
அறிமுக மானாய்
நண்பன் என்றழைத்து
நட்பை மட்டுமே பரிமாறினாய்....

நாம் நம்மை
பார்க்க வில்லை யென்றாலும்
பாசமாய் அழைத்தாய்

சட்டைப் பையின்
கனத்தைப் பார்த்து
பழகும் இவ்வுலகில்
என் மனதின் கனத்தையும்
பகிர்ந்துக் கொண்டாய்.......

என் துயரில்
ஆறுதல் சொல்லும்
ஓர் தோழியாய்
என் தவறில்
என்னை கண்டித்திடும்
எந்தையாய் இருந்தாய்.....

தன் தேவைகளுக்கே
இறைவனை நாடுவோர் மத்தியில்
எனக்காய் ‍ என் தேவைக்காய்
உபவாஷீத்து
வேண்டுதல் செய்தாயே.....

நீ என்னுடன்
பழகியது
சில நாளென்றாலும்
நீ என்றும்
நான் மறவா
எந்தன் பிரியமானத் தோழி தானடி.........

நான் என்
வாழ்வின்
சாதனையில் உயரத்தில் இருந்தாலும்
நான் ஏறிய‌
படிக்கட்டுகளாய் என்றும்
உன் நட்பை பெருமையாய்
உலகிற்கு எடுத்துக் கூறுவேன்........
.

Saturday, March 20, 2010

என் மனதிற்கு......




என் மனமே
உன்னால் முடியாது
என்றெண்ணி
நீ ஏன்
முடங்கி கிடக்கிறாய்..........
துவண்டது போதும்

ஓய்வெடுத்தது போதும்
ஓய்ந்து விடாதே..........
நீ ஓய்வெடுக்கும் நிமிடத்தில்
உன்னெதிரி முன்னேறுகிறான்........

விழித்தெழு ‍ எழுந்திரு
இன்றே புறப்படு
உன்
இலட்சியத்தை நோக்கி

வீழ்ந்து விட்டாயென்று
வருந்தாதே
நின் வீழ்ச்சி ஒன்றும்
நிரந்தரமல்ல........

தோற்று விட்டாயென்று
துவளாதே
நின் தோல்விகள் ஒன்றும்
முடிவல்ல.........

நீ
இன்று அடைந்த‌
தோல்விக ளெல்லாம்
நாளை அடைப் போகும்
வெற்றி சிங்காசனத்தின் உயரத்தைக்
காட்டும் படிக்கட்டுகள்.........

உன்னால் முடியாது
என்றுச் சொல்லாதே
உன்னால் முடியுமா
என்று எண்ணாதே
உன்னால் முடியும்
என்றே நம்பு

என் மனமே
நீ இன்று
தரித்திரங்களை சந்தித்தால் தான்
நாளை உலக‌
சரித்திரத்தில சாதிக்க முடியும்.........

உலக மென்பது
ஓர் போர்க்களம் தான்
இதயம் ஓய்வெடுக்கும் வரை
இங்கு போராட்டம் உண்டு.........

போராடுவோர் பலர்
வீழ்வார் பலர் ஆனால்
ஜெயிப்பவர் சிலரே........
நீ வீழ்வதற்கு அல்ல‌
ஜெயிக்கப் பிறந்தவன்..........

வாழ்க்கை என்பது
ஓட்டப் பந்தயம்........
ஓடு ஓடு ஓடு
முதலில் மட்டுமல்ல
தொடர்ந்து ஓடு
ஜெயிக்கும் வரை ஓடு
நீ ஒரம் நின்று
பந்தயத்தை ரசிப்பவன் அல்ல
பந்தயத்தில் ஓடுபவன்

போராடுபவனுக்குத் தான்
இடர் தோல்வி கஷ்டம்
உண்டு எல்லாம் உண்டு
தொடர்ந்து போராடினால்
முடிவில் ஜெயம் உண்டு......

இருப்பது உனக்கு
போதவில்லை யெனும் போது
இருப்பதைக் கொண்டு
திருப்தி யடையாதே.......
இன்னும் இன்னும் இன்னும்
அடைய நீ
இன்னும் அதிகமாக
முயற்சி செய்........... முயன்றிடு.......

உன்னால் முடியும்
பலமே வாழ்வு
பலவீனமே மரணம்.....

வலுவுள்ளது மட்டுமே
இவ்வுலகில் வாழும்
இதுதான் உலக நியதி........
நீ
வாழ வளர‌
வாழ வைக்க‌
போராடு போராடு

தோல்விக் கண்டு
மனம் வருந்தாமல்
தோல்விக்கான காரணங் கண்டு
பந்தயத்தில் இறங்கு

நீ
சாதாரணமானவன் அல்ல‌
நீ
அசாதாரணமானவன்!!!!!!

நீ
பிறந்ததிற்காய் வாழ்பவன் அல்ல‌
வாழ்வதிற்காய் பிறந்தவன்........

புறப்படு புறப்படு
நாளை அல்ல இன்றே
நின் இலட்சியத்தை நோக்கி
எல்லா பலமும்
உன்னிடம் உனக்குள்ளே
வெற்றி உனதே

நீ
சாதிக்கப் பிறந்தவன்......

காதலை விரும்புகிறேன்.....





நான் மலரை
விரும்புகிறேன்
மணமாய் காதல் இருப்பதால்......

நான் மழையை
விரும்புகிறேன்
குளிராய் காதல் இருப்பதால்.......

நான் தென்றலை
விரும்புகிறேன்
இதமாய் காதல் இருப்பதால்........

நான் ஒலியை
விரும்புகிறேன்
இசையாய் காதல் இருப்பதால்..........

நான் ஒளியை
விரும்புகிறேன்
உருவமாய் காதல் இருப்பதால்........

நான் அன்னையை
விரும்புகிறேன்
அன்பாய் காதல் இருப்பதால்.....

நான் நண்பனை
விரும்புகிறேன்
நட்பாய் காதல் இருப்பதால்.........

நான் சூரியனை
விரும்புகிறேன்
நிழலாய் காதல் இருப்பதால்.......

நான் கல்வியை
விரும்புகிறேன்
இலக்கியமாய் காதல் இருப்பதால்.......

நான் மனைவியை
விரும்புகிறேன்
இதயமாய் காதல் இருப்பதால்.........

எனது கல்லூரி வாழ்க்கை



எங்கிருந்தோ வந்தோம்
கல்லூரியெனும் விருட்சத்திற்கு
வாழ்க்கைப் பயணத்தில்
மூன்றாண்டுகள் இளைப்பாற!!

நண்பா என்றழைத்து
நட்பை பரிமாறினோம்
ஒன்றாய் வேறுபாடில்லாது
பார்த்து ரசித்தோம்!!

ஆசிரியர் நடத்திய‌
பாடத்தை விட‌
நாம் பேசிய‌
வார்த்தைகளே அதிகம்!!

நம்பெற்றோர் ஒன்றாய்
சம்பாதிக்கவில்லை யென்றாலும்
நாம் ஒன்றாய்
சேர்ந்து செலவழித்தோம்!!!

ஆசிரியருக்கு நம்பெயர்
தெரியுமோ இல்லையோ
நாமே பெயரிட்டு
அழைத்தோம் நாமின்பமடைய!!!!

நாம் இன்பத்தை
மட்டுமல்ல ஆசிரியரின்
தண்டனையையும் சேர்ந்தே
நாம்அணு பவித்தோம்!!!


காதலில்நாம் வெற்றி
பெற்றோமோ இல்லையோ
காதலர்தினத் தையும்சேர்ந்தே
கொண்டாடினோம் கட்டடித்து!!!!

ஆசிரியருக்கு நாம்
எப்படியோ ஆனால்
நம் பார்வையில்
"சுதந்திரப் பறவைகள்" நாம்........


இன்று :::

கல்லூரியெனும் விருட்சத்தில்
இளைப்பாறியது
மூன்றாண்டுக ளென்றாலும்
இன்றும்
நம் கல்லூரி வாழ்வை
நினைத்தால்
மனதில் ஓர்
சுகமான இளைப்பாறுதல் தானடா....



Tuesday, February 23, 2010

என் காதல்

என் இனியவளே,

நீ சைக்கிளில்
செல்லும் போது
நானுன்னை முந்தி செல்வது
நீ என்னை
காண் வேண்டுமென்றல்ல‌
"அந்த ஒரு நொடியில்"
நம் நிழல்கள் ஒன்றாக
இணைய வேண்டுமென்று தான்........

நின் பெயரை
எழுதினேன்
கவிதை என்றனர் நண்பர்கள்
நின் பெயரை
எழுதி எழுதி
என் கையெழுத்தும் அழகானது

நான் நண்பர்களுடன்
கூட்டமாக பேசினாலும்
நீ கடந்து செல்லும் போது
என் மனம்
என்னையும் மீறி
உன்னிடம் பேசுகின்றது
உனக்கும் தெரியாமல்.......

உன்னிடம்
ஒரு முறை
என் காதலைச் சொல்ல
பல முறை வீட்டுக்
கண்ணாடி முன்
சொல்லி சொல்லி
என் வீட்டு நிலைக் கண்ணாடியும்
வெட்கப்படக் கற்றுக் கொண்டது.........

நான் கொண்ட
காதலை
மழையாய் பொழிய‌
காத்திருந்தேன்
நாட்களாய் அல்ல‌
மாதங்களாய் அல்ல‌
வருடக் கணக்கில்........

உனக்காக எல்லாம்
செய்வேன் உனக்காக‌
கடைசியில் என்
ஒரு தலைக் காதலை
மறைத்துக் கொன்றதும்
உனக்காகத் தான்
எனில்
உன் காதல்
வாழ வேண்டுமென்று தான்
.......

அவள் விழிகள்

என்னவளே,

நின் பரதமாடும் விழிகள் கண்டு
என் வழி மறந்தேன்......

ஊசலாடும் கரு விழி கண்டு
ரசிகன் ஆனேன்........

நின் வில் புருவம் கண்டு
காதலன் ஆனேன்......

நின் இமைகள் கண்டு
(என்னிமை துடிப்பதை நிறுத்தி)
உன்னையே காணும் சிலையானேன்.......

உன் கரங்கள் வழி நடத்த‌
நான் குருடாகவும் தயாரானேன்....

நின் பார்வையில்
என்னுரு மட்டுங் காண‌
உன்னையே காதலித்தேன்.......
உனக்காக எல்லாம் உனக்காக‌

அன்னையின் அன்பு..........

பள்ளித் தோழரின் அன்பு
முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை.......

கல்லூரி நட்பின் அன்பு
மூன்றாண்டு முடியும் வரை.......

பெண் தோழியின் அன்பு
அவள் தகப்பன் சொல்லும் வரை.........

நேசித்த காதலியின் அன்பு
அவள் திருமணம் முடியும் வரை.......

பயணத் தோழரின் அன்பு
பயணம் முடியும் வரை........

சகோதர கோதரியின் அன்பு
திருமணம் முடியும் வரை.......

வியாபார பார்ட்னரின் அன்பு
இலாபம் வரும் வரை..........

ஆனால்

பெற்ற அன்னையின் அன்பு
அவள் நினைவிருக்கும் வரை..........

Saturday, February 20, 2010

காதலின் தாகம்

என் தென்றலே,

ரோஸ் கலர் சேலைக் கட்டி
அக்னி நட்சத்திரத்திலும்
மனதில் தென்றலாய்
ஐஸ் வைத்தவளே........

சிகப்பு கலர் நைட்டியுடுத்தி
என்னுள் தோன்றிய
கேடான காமத்திற்கு
ஆப்பு வைத்தவளே.........

எனக்குள்
மின்மினியாய் வந்தாய்
என்னை
எரிமலையாய் மாற்றி விட்டாய்.....

எனக்குள்
தென்றலாய் வந்தாய்
என்னை
புயலாய் மாற்றி விட்டாய்.....

இது தான்
காதலின் தாகமோ

Friday, February 19, 2010

என் காதலி


என்னவளை
மலருக்கு ஒப்பிட மாட்டேன்
எனில் மலர்
மாலையில் வாடி விடும்

என்னவளை
நிலவுக்கு ஒப்பிட மாட்டேன்
எனில் நிலவு
அமாவாசையில் தேய்ந்து விடும்

என்னவளை
விண்ணுக்கு ஒப்பிட மாட்டேன்
எனில் விண்
மேகத்தில் மறைந்து விடும்

ஆம் எனில்
என்னவளின் அழகை
ஒப்பிடும் அளவிற்கு
இறைவன் இன்னும்
அழகுப் பொருளை
படைக்க வில்லை

என் நண்பன்::::::::::



என்னிடம் பிடித்த‌தை
பிறரிடம் சொல்
நானி ல்லாத போது!!!
என்னிடம் பிடிக்காத்தை
என்னிடம் சொல்
யாரு மில்லாத போது!!!

நான் தவறு செய்தால்
உன் கரங்களுக்குத் தான் முதலில்
அடிக்கவும் உரிமை யுண்டு
நான் சாதித்தால்
உன் கரங்களுக்கு தான் முதலில்
அணைக்கவும் உரிமை யுண்டு

எனில்
நீ எந்தன்
நண்பன்

நான் .........

என்னவளே,
நீ தலை தாழ்ந்த போது
உன்னை நோக்கி என்
தலை உயருகின்றது
நீ என்னை
நோக்கும் போதோ
என் பார்வை
தடுமாறுகின்றது.....

உன்னை
பின்பற்றி வருகின்றேன்
நீ பின்னோக்கும் போதோ
என் கால்கள்
தடம் மாறுகின்றது.........
உன்னை முந்திச் செல்ல‌
என் மனம் மறுக்கின்றது..........

உன்னிடம்
பேசும் படி
என்னுள்ளும்
என் வீட்டு
நிலைக் கண்ணாடி முன்பும்
பேசியவை அதிகமதிகம் ......

உன்னிடம்
இதுவரை
பேசிய துமில்லை
பழகியது மில்லை
ஆனால்
நான் உன்னுடன் தான்
வாழ்கின்றேன்
வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன்

நீ என்னருகில்
இல்லா விட்டாலும்
நீ வெளியிடும்
காற்றைத் தான் நான்
சுவாஷிக்கின்றேன்

நான்
உன்
உன்னையே நினைக்கும்
உனக்காகவே வாழும்
உன்னையே சுவாஷிக்கும்
"ஒரு தலைக் காதலன்"

என் காதல்::::



என் இனியவளே,
நானு ன்னைக்
காதலிக் கின்றேன்

நீ என் காதலி
என்று ஊர் சுற்ற அல்ல!

உன்னுடன்
பார்க் சினிமா
என்றுப் போகவும் அல்ல!!

காதலனென்பதை பிறரிய‌
கவிதையென்ற பெயரில்
காகிதங்களை வீணாக்க அல்ல‌

உன்னுடன்
வெளியூர் சென்று
உன்னுடலை தழுவவும் அல்ல!!!

காதலர்கள் என்ற பெயரில்
பொது இடங்களில்
உன்னுடலை உரசிடவும் அல்ல!!!!

நானு ன்னைக்
காதலிக் கின்றேன்
நம் திருமணம் வரை
மட்டுமல்ல‌

என்னிதயம் ஒய்வெடுக்கும் வரை
காதல் புவியில் வாழும் வரை
அழியாக் காதல் வாழ வளர‌

நானுன்னை நேற்றும்
காதலித்தேன்
நானுன்னை இன்றும்
காதலிப்பேன்
நானுன்னை என்றும்
காதலித்துக் கொண்டே யிருப்பேன்
என்றென்றும்

Thursday, February 18, 2010

காதல்

நம் இதயம்
அன்பு நட்பு
பாசம் நேசம்
கோபம் பரிவு
வெறுப்பு
காமம்
என அணைத்தையுமே
ஏற்கும் ஆனானால்
காதல் மட்டுமே
இதயத்தை ஏற்கும்......

அவள் விழிகள்

என்னவளே,

நின் பரதமாடும் விழிகள் கண்டு
என் வழி மறந்தேன்......

ஊசலாடும் கரு விழி கண்டு
ரசிகன் ஆனேன்........

நின் வில் புருவம் கண்டு
காதலன் ஆனேன்......

நின் இமைகள் கண்டு
(என்னிமை துடிப்பதை நிறுத்தி)
உன்னையே காணும் சிலையானேன்.......

உன் கரங்கள் வழி நடத்த‌
நான் குருடாகவும் தயாரானேன்....

நின் பார்வையில்
என்னுரு மட்டுங் காண‌
உன்னையே காதலித்தேன்.......
உனக்காக எல்லாம் உனக்காக‌