வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

மது உனக்கு தேவையா ???????????????

‪#‎ஜோ‬


தமிழா தமிழா
உணர்வுகளையும்
நினைவுகளையும்
மரத்து போக செய்யும்
மது உனக்கு தேவையா
என்பதை இன்றே சிந்தி..............


தமிழினமே தமிழினமே
மது விலக்கிற்காய்
போராடும் அன்பர்கள்
அவர்களின் பதவிக்காகவும்
அவர்களின் புகழுக்காகவும்
அவர்களின் பொழுது போக்கவும்
போராட வில்லை.......................


நாளைக்கு உங்கள்
வீட்டின் பிள்ளைகள்
ஆண்கள் மட்டுமல்ல‌
பெண்களும் மதுவினால்
சீரழியக் கூடாது என்பதற்காகவே
இன்று வீதிகளிலும்
சாலைகளிலும் போராடுகின்றனர்...........



காக்கி சட்டை போட்ட‌
கனவான்களே
நாளைக்கு உங்களின்
பிள்ளைகள் மதுவால்
சீரழியக் கூடாது என்றும்
அவர்கள் போராடுகின்றார்கள்..............




வீதிக்கு வந்து
போராடும் பெண்கள்
எந்தவொரு தலைவரும்
சொல்லி போராடவில்லை
தங்கள் குடும்பம்
மதுவினால் சீரழிந்த‌
வேதனையிலும் மற்ற‌
குடும்பங்களை காக்க
மதுவினை ஒழிக்க‌
போராடுகின்றார்கள்.......................


சமூக பிரச்சனைக்காய்
போராடி போராடி
வீதியில் காவல் துறையின்
பூட்ஸ் கால்களால்
மிதிப்பட்டும் கொண்ட‌
கொள்கை மாறாது
போராடும் சகோதரிகளை
பார்த்தும் இன்னும்
உணர்வில்லையா தமிழர்களே 
பொறுத்தது போதும்





உணர்வுகளையும்
நினைவுகளையும்
மழுங்க செய்யும்
மது வேண்டாம்
மதுவில்லாத சந்ததியாக‌
நம் பிள்ளைகள் வளர‌
இன்று தான்
போராட வேண்டும்................................

கட்சி பாராது
ஜாதி பாராது
மதம் பாராது
தமிழர்களாய்
மனிதர்களாய்
இணையுங்கள் ஒன்றாக‌
நாம்
மரத்து போன
தமிழன் அல்ல‌
மறத் தமிழர்கள்
என்பதை ஆள்கின்ற அரசுக்கு
புரிய வைத்திடுவோம்..................








ஜோ வின் எண்ணங்கள்.................



‪#‎ஜோ‬

இல்லாததை இருப்பது போல்
பேசவும் தெரியவில்லை!
இருப்பதை பெரிதாக்கி
பேசவும் தெரியவில்லை!
பொய்களையும் அடித்துபேசி
உண்மையாக்கவும் தெரியவில்லை!
இன்னும் நான் உலகத்தில்
வாழ வளர வேண்டியுள்ளது போல!!!!!!!!

*****************************************************

‪#‎ஜோ‬

எதிர்பார்த்தவை எல்லாம்
பொய்யாகி போனாலும்
எதிர்பார்த்தவைகளை
மறக்கவு மியலாது
மறைக்கவு மியலாது
வாழ்கின்றேன் நான்..............
எதிர்பார்ப்புகள் இல்லாமல்
வாழ முயன்றாலும்
மனமோ விடவில்லை
ஏதோவொன்றை தேடிதேடி
எதிர்ப்பார்பதை விரும்புகின்றது.........
எதிர்பார்ப்பில்
ஏமாற்றங்கள் தொடர்ந்தாலும்
மாற்றங்கள் எதுவுமில்லை
ஆனாலும்
எதிர்பார்ப்புகள் மட்டும்
மாற்றங்களை நோக்கி
தொடர்ந்தப் படியே........................

****************************************************

‪#‎ஜோ‬

மனமெனும்
கண்ணாடி கூட்டினை
வெளியிலிருந்து
உடைத்திடும் உறவுகளின்
செயலை விட‌
உள்ளிருந்து கோடுகளாய் கீறிடும்
உறவுகளின் வலியே
மவுனமாக மரணத்தை
அனுபவிக்க செய்கின்றது.............................

***********************************************

‪#‎ஜோ‬

வலிகளும் வேதனைகளும்
நிறைந்த வாழ்க்கையினில்
கானல் நீராய் மட்டுமே
இன்பங்கள் தெரிகின்றது.......................
அதையும் நாடியே
ஓடிஓடி செல்வதிலேயே
வாழ்வின் பொழுதுகள்
கழிகின்றது நிழலாய்
தொடர்ந்திடும் வேதனைகளோடு.....................

*************************************************

செய்தி ::::::: டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு நர்சிங் கல்லூரி மாணவிகள் போராட்டம்: போலீசார் தடியடி; 66 பேர் கைது

                          மாணவிகளின் விடுதிக்கு எதிரில் இருந்த‌ மதுக் கடைகளை இடமாற்றம் செய்ய சொல்லி, போராடிய மாணவிளை தடியடி நடத்தியும், கைது செய்தது கண்டனத்திற்குரியது. மக்களை ஆள்கின்ற அரசு, படிப்பதற்காகவும்,பிழைப்பிற்காகவும் குடும்பத்தையும், உறவுகளையும் விட்டு உழைக்கும் மாணவிகளின் திறமையினையும், நலனையும் நசுக்கப் பார்க்கின்றதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.... மாணவிகளின் போராட்டத்திற்காக "டாஸ்மார்க்" கடையினை மூடியிருந்தால், தமிழர்களின் நலன் மீதான அக்கறையினை பாராட்டியிருக்கலாம்.. ஆனால் மது வியாபாரத்திற்காக, எதிர்த்து போராடியவர்களை தடியடி நடத்தியும், சிறை வைத்தும் தனது அராஜக செயல்களை காட்டியுள்ளது.

                              அதுவும் ஒரு பெண் முதல்வராக இருக்கின்ற மாநிலத்தில் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது காவல் துறை மூலம் அடாவடி செய்த அரசின் செயலை தமிழர்களே வன்மையாக கண்டியுங்கள்.



ஹெல்மெட் ஸ்பெஷல்....................


எதிரில் வருபவர்
நண்பரா
எதிரியா
கடன் கொடுத்தவரா
கடன் வாங்கியவரா
சொந்தக்காரனா
பக்கத்து வீட்டுக்காரரா
என்று ஒன்றுமே
தெரியவில்லை
இந்த‌
தலை கவசத்தால்.....................



      

என் கையை வச்சு
என் தலைல‌
அவசரத்துக்கு கூட‌
சொறிய முடியலை
"தலைக் கவசம்" மாட்டியதால்
என்னடா பொழப்பு இது !

ஜோ வின் எண்ணங்கள்...............


ஒருவரிடம்
பெற்ற உதவி
சிறியதாயி ருந்தாலும்
அதனை திருப்பி
தரும்பொழுதும்
வாங்கிய பொழுது
காட்டிய அதே
பண்பினை காட்டிட வேண்டும்
அதுவே நல்ல செயல்
நல்ல மனிதனின் அழகு...................................

நம்பாதே நம்பாதே..................


நம்பாதே நம்பாதே
சிந்தனையில் ஒன்றும்
சிரிப்பினில் ஒன்றும்
வைத்து பேசும் எவரையும்
நம்பாதே நம்பாதே!!!!!

சீறும் பாம்பை கூட‌
நம்பிடலாம்
தோளில் கை போட்டு
பழகிடும் ஆட்களை
நம்பாதே..................

சிரித்திடும்
உதடுகளின் பின்னால்
நயவஞ்சக உள்ளமும்
ஒளிந்திருக்குமே!!!!

நம்பாதே நம்பாதே
சொல்லில்
வார்த்தைகளில்
அழகு கூட்டி
சுய புராணம் பாடிடும்
வீணர்களை நம்பாதே!!!!!

ரசிப்பதற்காக

 ஓவியங்கள் ரசிப்பதற்காக!!




































ஜோ' எண்ணச் சிதறல்கள்


தோல்விகள்
சிலருக்கு பயத்தையும்
சிலருக்கு தைரியத்தையும்
கொடுக்கின்றது.................

                ************************************************************

எதிலும் சேராதவரைக்கும்
ஒருவன் தனிமனிதன்
எதிலாவது சேர்ந்துவிட்டால்
அவனும் அடிமையே

                     ****************************************************************


நாமிருக்கும் போது
ஒன்றும் சொல்லாத உலகம்
நாமில்லாத போது
நம் குறைகளை பேசிடும்

                     ****************************************************************

ஒன்றுமே பேசாமல் இருப்பவர்களை கூட நம்பலாம்.....ஆனால் வெற்று வாயில் பந்தல் போடுபவர்களை நம்பவே கூடாது........ என்ன செய்ய..???? பட்டால் தானே தெரிகின்றது..........................
  ****************************************************************

வாய்ச்சொல்லில்
வீரராய்
சொல்லி சொல்லி
அடுத்தவரை நம்ப வைத்து
வலம் வந்தாலும்
செயல்களின்
முடிவு தெரிந்திடும் போதோ
உடலின் அங்கங்கள் எல்லாம்
நடுங்குமையா நடுங்கும்.......

 ****************************************************************


ஒருவரை முழுவதும் நம்பி செயல்படும் போது அவரின் சொல்கள் மீது சந்தேகம் வருவதில்லை.ஆனால் அவை காரியங்களில்லா "வெற்று சொற்களாக" மாறிடும் போது, அவரின் மீதான நம்பிக்கையே கேள்விக் குறியாகிவிடுகின்றது................

 ****************************************************************

ஏமாற்றியவர்கள் எல்லாம் தலை நிமிர்ந்து, புன்னகையுடன் வெளியில் சுற்றி பழகியவர்களை விட்டுவிட்டு, புதியவர்களோடு பழகிக் கொண்டு, அடுத்த செயல்களுக்கு ஆரம்பமாகிவிடுகின்றனர்.......
ஆனால் ஏமாறியவர்கள் மட்டுமே ஏமாறியதால் ஏற்பட்ட வடுவினை நெஞ்சுக்குள் வெளியிலும் சொல்ல முடியாது, தங்களுக்குள்ளே போட்டு, வேதனையுடன் வாழ்கின்றனர்............ எத்தனையெத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஏமாறிய வடு இதயத்தினுள் ரணமாகவே மாறாமல்


காந்தியின் சமாதி

அஹிம்சை வழியில்
போராடிய காந்தியை
ஆயுத வழியில்
உயிரை பறித்த தேசத்தில்
காந்தியின் சமாதிக்கு
ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு................

மழலையின் குறும்பு.............

#ஜோ


மழலைகளின் குறும்பினை
ரசிப்பதற்கு
மொழி அவசியமில்லை !!!!!!!!!!!!!
 —  

ஜோ வின் எண்ணச் சிதறல்கள் :::: அன்பு


ஒருவரை
மனம் நேசித்திடும் பொழுது
அவர் செய்யும்
தவறுகள் கூட‌
ரசிக்கும் படியாகவே
தெரிகின்றது நம் பார்வைக்கு
அவரையே
மனம் வெறுத்திடும் பொழுது
அவர் செய்யும்
சரியானவை கூட‌
தவறாகவே தெரிகின்றது...................

ஜோ வின் எண்ணச் சிதறல்கள்.............

#ஜோ

அழகிய 
மலராக யிருந்தாலும்
மலர்ந்திருந்தால் மட்டுமே
உயரத்தில் இருக்கும்
வாடி விட்டால்
தரைக்கு வந்துவிடும்





மனித வாழ்விலும்
இதே நிலை தான்
வளமிருக்கும் வரை மட்டுமே
மனிதர்களில் உயர்ந்திருக்கலாம்
தாழ்ந்து விட்டால் நாம்
இருக்குமிடம் யாருக்கும் தெரியாது..........

"விடை கொடு எங்கள் நாடே"

ஈழத் தமிழரின் வலியினை உணர்த்திடும் பாடல்.......

பாடலின் வரிகள்.................................


விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
(விடை கொடு..)

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா வருமா
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா வருமா
சொர்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா வருமா
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே

பிரிவோம் நதிகலே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்
(விடை கொடு..)

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இல்லம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைத்தோம்
முன் நிலவில் மலரில் கிடந்தோம்
பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்

கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம்
வானமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்
(விடை கொடு..)

இரத்தம் கேட்கும் புத்தம்...........

ஆசையை துறக்க
சொன்னார் புத்தர்
ஆனால் 
புத்தன் வழி மீதே
ஆசைக் கொண்டே
மனிதர்களை
அழிக்கின்றார்கள் அவர்வழி
வந்திட்ட சதை பிண்டங்கள்...........




இன்றைய புத்தன்
ஆடையை கிழித்து
உயிரை பலியாக கேட்கின்றான்
புத்தன பெயரை
சொல்லும் நாடுகளனைத்தும்
இன்றைக்கு உயிர்ப்பலிகளை
கொடுத்து வருகின்றது
புத்தனுக்கு
உலக நாடுகள் எல்லாம்
அமைதியாக தியானத்தில்!