வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 17, 2010

என்றும் என் தோழியவள்.........

**** என்றும் என் தோழியவள் *****



பக்கத்து வீட்டில் குடியிருந்து
அறிமுகம் ஆனாய்
எதிரெதிர் பார்க்கையில் புன்னகையால்
பழக்கம் ஆனாய்
தண்ணீர்க் குழாயடியில் பேசிபேசி
தோழமை யானாய்!

                               
           
ஒருவடொருவர் மனம்விட்டுப் பேசி
தோழி யானாய்!

என் இன்பத்தை மட்டுமல்ல‌
துயரினையும் உரிமையோடு
கேட்டு பங்கிட்டாய்
பள்ளி நிகழ்வுகளோடு
வீட்டின் துயரையும்
பகிர்ந்துக் கொண்டாய்!

உன் பெற்றோர்
நம்மைப் பற்றி
விசாரித்த பொழுதும்
தெளிவாக உறுதியாக‌
சொன்னாய் நான்
"உன் தோழனென்று"

நிகழ்கால சோகத்தோடு
எதிர்கால லட்சியத்தையும்
சொல்லி வியப்படைந்தாய்

என் திறமையினை
கண்டும் ஆச்சரியமுற்றாய்
அதே சமயத்தில்
என் தவறினைக்
கண்டும் திருந்தச் செய்தாய்!

வயதின் கோளாறால்
தடுமாறிய போதும்
உறுதியாக
புரிந்து புரிய வைத்தாய்!

உடல்நிலை
சரியில்லாத பொழுதும்
அன்னையைப் போல்
தலைக் கோதிவிட்டு
அன்பின் வார்த்தைகளினால்
ஆறுதல் தந்தாய்!





நமக்குள் இவ்வாறு
நட்பு வளர்ந்தாலும்
அடுத்தவர் பார்வைக்கும்
கண்ணியமாய்
நடந்துக் கொள்ள வைத்தாய்!

உன் தோழிகள்
நம் நட்பினை பகிர‌
வந்தபோது சண்டைக் கோழியாய்
சீறி விலக வைத்தாய்!

அடுத்தவர் உன்னிடம்
என் குறையினைப் பற்றி
தவறாக சொல்லிய போதும்
"என் நண்பன்" என்று
பெருமையாக சொல்லி
வாய் மூட வைத்தாய்
அதே நேரத்தில்
தனிமையில் சந்திக்கும் போது
யாருமறியாது என்
குறையினை சுட்டிக்காட்டி
கண்டித்திடும் ஆசிரியை ஆனாய்.........
                                      

நட்பா காதலா
என்று அறிந்தோர் கேட்கையிலே
மாறிடும் காதல் அல்ல‌
மாறிடா நட்பு அவன்
எந்தன் நண்பன் என்றென்றும்
என்று சொல்லி
நட்பிற்கு மரியாதை செய்தாய்...........
சண்டைகள் என்னிடம் போட்டு
பேசாமல் நான் இருந்த போதும்
நீ கோயிலில் தவறாது
எனக்காக பிரார்த்தனை செய்தாய்!
வாலிபத்தில் வந்த‌
காதலில் நீ தோற்ற‌
போதும் கூட‌
நான் வாழ்வில்
ஜெயிக்க வேண்டுமென்று
எனக்கு உரமேற்றினாய்!
உன் இன்பங்களை
என்னிடம் சொல்லாவிட்டாலும்
நின் கண்ணீரினை
என் முன்பாகவே சொல்லி
நட்பினை வாழ வைத்தாய்!
திருமணத்தன்றும் எல்லோர்
முன்னிலையிலும்
உன் கணவரிடம் பெருமையாக‌
அறிமுகம் செய்தாய்
"நண்பனென்று"
இன்னுமெத்தனை ஜென்மம்
எடுத்தாலும்
என் தோழியாய்
நீ ஒருவள் போதுமடி எனக்கு!


No comments:

Post a Comment