வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, March 20, 2010

என் மனதிற்கு......




என் மனமே
உன்னால் முடியாது
என்றெண்ணி
நீ ஏன்
முடங்கி கிடக்கிறாய்..........
துவண்டது போதும்

ஓய்வெடுத்தது போதும்
ஓய்ந்து விடாதே..........
நீ ஓய்வெடுக்கும் நிமிடத்தில்
உன்னெதிரி முன்னேறுகிறான்........

விழித்தெழு ‍ எழுந்திரு
இன்றே புறப்படு
உன்
இலட்சியத்தை நோக்கி

வீழ்ந்து விட்டாயென்று
வருந்தாதே
நின் வீழ்ச்சி ஒன்றும்
நிரந்தரமல்ல........

தோற்று விட்டாயென்று
துவளாதே
நின் தோல்விகள் ஒன்றும்
முடிவல்ல.........

நீ
இன்று அடைந்த‌
தோல்விக ளெல்லாம்
நாளை அடைப் போகும்
வெற்றி சிங்காசனத்தின் உயரத்தைக்
காட்டும் படிக்கட்டுகள்.........

உன்னால் முடியாது
என்றுச் சொல்லாதே
உன்னால் முடியுமா
என்று எண்ணாதே
உன்னால் முடியும்
என்றே நம்பு

என் மனமே
நீ இன்று
தரித்திரங்களை சந்தித்தால் தான்
நாளை உலக‌
சரித்திரத்தில சாதிக்க முடியும்.........

உலக மென்பது
ஓர் போர்க்களம் தான்
இதயம் ஓய்வெடுக்கும் வரை
இங்கு போராட்டம் உண்டு.........

போராடுவோர் பலர்
வீழ்வார் பலர் ஆனால்
ஜெயிப்பவர் சிலரே........
நீ வீழ்வதற்கு அல்ல‌
ஜெயிக்கப் பிறந்தவன்..........

வாழ்க்கை என்பது
ஓட்டப் பந்தயம்........
ஓடு ஓடு ஓடு
முதலில் மட்டுமல்ல
தொடர்ந்து ஓடு
ஜெயிக்கும் வரை ஓடு
நீ ஒரம் நின்று
பந்தயத்தை ரசிப்பவன் அல்ல
பந்தயத்தில் ஓடுபவன்

போராடுபவனுக்குத் தான்
இடர் தோல்வி கஷ்டம்
உண்டு எல்லாம் உண்டு
தொடர்ந்து போராடினால்
முடிவில் ஜெயம் உண்டு......

இருப்பது உனக்கு
போதவில்லை யெனும் போது
இருப்பதைக் கொண்டு
திருப்தி யடையாதே.......
இன்னும் இன்னும் இன்னும்
அடைய நீ
இன்னும் அதிகமாக
முயற்சி செய்........... முயன்றிடு.......

உன்னால் முடியும்
பலமே வாழ்வு
பலவீனமே மரணம்.....

வலுவுள்ளது மட்டுமே
இவ்வுலகில் வாழும்
இதுதான் உலக நியதி........
நீ
வாழ வளர‌
வாழ வைக்க‌
போராடு போராடு

தோல்விக் கண்டு
மனம் வருந்தாமல்
தோல்விக்கான காரணங் கண்டு
பந்தயத்தில் இறங்கு

நீ
சாதாரணமானவன் அல்ல‌
நீ
அசாதாரணமானவன்!!!!!!

நீ
பிறந்ததிற்காய் வாழ்பவன் அல்ல‌
வாழ்வதிற்காய் பிறந்தவன்........

புறப்படு புறப்படு
நாளை அல்ல இன்றே
நின் இலட்சியத்தை நோக்கி
எல்லா பலமும்
உன்னிடம் உனக்குள்ளே
வெற்றி உனதே

நீ
சாதிக்கப் பிறந்தவன்......

1 comment:

  1. ஊக்கம் தரும் எழுத்துகள்!
    உங்கள் கவிதைக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete