வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, March 19, 2012

தளர்ந்த மனதிற்கு தங்க பஸ்பம்

 தளர்ந்த மனதிற்கு தங்க பஸ்பம்



நான் படித்த புஸ்தகத்திலிருந்து சில வரிகள்
1. ஒரு வேலையை ஆரம்பிக்கும் போதே எப்போது அதனை முடிக்க வேண்டும் என்று தீர்மானி.
2. பத்தில் ஒருவனாய் இருப்பதை விட, பத்தில் முதல்வனாய் இரு
3. முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன் எங்கோ செய்துக் கொண்டிருக்கின்றான்.
4. ஏழையாக பிறப்பது தவறல்ல, ஏழையாகவே இருப்பது தான் தவறு......
5. அலைகள் ஓயக் காத்திருப்பவன் முத்து எடுக்க முடியாது..
6. ஆரம்பிப்பதற்கு அருமையான நாள் எது? இன்று தான்
அருமையான நேரம் எது ? இப்போது தான்.
7. நமது முன்னோர்கள் மரம் நட்டார்கள். நாம் அனுபவிக்கின்றோம்.. நாம் யாருக்குமே முன்னோர் இல்லையா? நாம் எதையாவது சாதிக்க வேண்டாமா?
8. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஓராயிரம் தோல்விகள், துயரங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் இத்தனையும் இருக்கத்தான் செய்யும்..
9. எல்லோருக்கும் சுமைகள் இருக்கின்றன. அதனை தாங்குவதோ, தகர்ப்பதோ, அவரவர் சாமர்த்தியம்.....
10. ஒரு காரியம் கஷ்டமாகத் தோன்றுவதால் நாம் பயப்படுகின்றோம் என்பது முற்றிலும் சரியல்ல. .. நாம் பயப்படுகின்றோம் என்பதால் தான் அந்தக் காரியம் கஷ்டமாக்த் தோன்றுகின்றது...
11. சிறந்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை சிறப்பாக்கு
12. சில தியாகங்களைச் செய்யாமல் வெற்றிகளை அடைய முடியாது..
13. நம்பிக்கையும், போராட்டமும் கலந்தது தான் வாழ்க்கை... நம்பு போராடு
14. நீங்கள் தோல்வியாளர் அல்ல இன்னும் வெற்றியடையாதவர் அவ்வளவே..
14. உன்னால் என்ன முடியும் என்பதைக் கொண்டு நீ உன்னை மதிப்பிடுகின்றாய்.. நீ என்ன சாதித்திருக்கின்றாய் என்பதைக் கொண்டு தான் உலகம் உன்னை மதிப்பிடுகின்றது...
15. ஓய்வெடுப்பது தவறில்லை... ஓய்ந்தே கிடப்பது தான் தவறு....
16. முடியுமா என்பது ஐயம், முடியாது என்பது பயம் முடியும் என்பது பலம்.... மூன்றுக்கும் பிறப்பிடம் மனம்...
17. சிரமப்படாமல் சிகரம் தொட முடியாது.
18. பறந்து தேடும் பறவைக்கே உணவு.. கூட்டில் இருக்கும் குருவிக்கு அல்ல‌
19. கசப்பான அனுபவங்களிலும் ஓர் இனிப்பான வாய்ப்பு
ஒளிந்திருக்கும்.
20. இன்று என்ன செய்கிறாய் என்பதில் தான் நாளை வெற்றி உள்ளது......
நன்றி : "தளர்ந்த மனதுக்கு தங்க பஸ்பம்" புஸ்தகம்
ஆசிரியர் : திரு. தங்கவேலு மாரிமுத்து
விஜயா பதிப்பகம்.

No comments:

Post a Comment