வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, April 30, 2012

வரங்கொடு இறைவா..............






என் இறைவா
நீ படைத்த உலகில்
எல்லாமே அன்பாக உள்ளது
காக்கை குருவியும்
அன்பாக உள்ளது
ஒற்றுமையாக உள்ளது
ஆனால்
நீ உந்தன் சாயலில்
படைத்த‌ மனிதரில் மட்டும்
அன்பு இல்லையே ஏன்????
ஈரைந்து மாதங்கள்
சுமந்து பெற்றெடுத்த‌
அன்னையை
அவள் முதிர்வயதில்
அவளைக் காப்பாற்ற‌
மனைவியிடம் அன்பு இல்லை

சகோதர சகோதரிகளின் அன்பு
திருமணத்திற்கு பின் இல்லை
நண்பர்களின் அன்பு
துயரத்திற்கு பின் இல்லை
பக்கத்துவீட்டு அன்பு
சண்டைக்கு பின் இல்லை..........
மனைவியின் அன்பு
சிறு ஊடலுக்கு பின் இல்லை 
சின்னச்சின்ன
மனக் கசப்புக்கெல்லாம்
அன்பு மாயமாகி விடுகின்றது......
சின்னசின்ன ஊடலுக்கெல்லாம்
உறவுகளின் பிரிவுகள்.....
இறைவா......
இன்றைய‌ நாட்களில்
பெற்றவரை முதிர்வயதில்
உணவு தந்து ஆதரவளித்திட‌
பெற்ற மகன்கள்
நாட் கணக்கு பார்க்கின்றனர்.........
என்னதோர் கொடுமை
கூடப் பிறந்த‌
சகோதரி முதிர்கன்னியாயிருந்தாலும்
அவள் அரசாங்க சம்பளம்
எதிர்ப்பார்த்து அவள்
திருமணத்தை தள்ளிப்போடும்
சகோதர அன்பு.........
கள்ளக் காதலனுக்காய்
பெற்ற குழந்தையையே
கொல்லத் துணியும்
தாய் அன்பு.......
கூட வாழவந்தவளை
வரதட்சனை பெயரில்
அடுப்புக் கரியாக்கும்
கணவன்மார்கள்.........
பணம் கொடுக்கும்
மிஷினாய் கணவனை
நினைத்து... ஏசும்
மனைவிமார்கள்...........
பெற்றவள் கீழே
விழுந்தாலும் சிறிதும்
பாசமில்லாத பெற்ற‌
குழந்தைகள்...........
தகப்பனின் சொத்தை
பிரிப்பதில் தகராறு
சொந்த சகோதரனையே
கொல்லும் சகோதரன்.......
தன் சொந்த இனம்
அழிக்கப்பட்ட போதும்
கவலை கூட படாமல்
வெற்று அரட்டையில்
அதே இனத்தின் அன்பு.......
கண்களில் தெரியும்
மனிதனை வெறுத்து
காணாத இறைவனை
நேசிக்கும் ஒரு கூட்டம்........
பிள்ளைகள் மீது
காட்ட வேண்டிய‌ 
அன்பு இன்றைக்கு
வீட்டு வளர்ப்பு பிராணிகளிடம்
காட்டும் மனிதர் ஒருபுறம்.....
எங்கு செல்லுதையா
இவ்வுலகம்......
இறைவா மனிதர்க்கு
உலகில் பொழியும்
மழையைப் போல்
எல்லா மனிதர் மீதும்
அன்பினை பொழிந்திடு
பிறர் துன்பங் கண்டு
உள்ளம் துடித்திடும் அன்பு கொடுத்திடு.......
தன் குடும்பத்தை மட்டுமல்ல‌
தன் இனத்தையும்
தன் நாட்டையும்
தன் உலகையும்
தன்னைப் போல்
உலகிலுள்ள எல்லா மனிதரையும்
நேசிக்கும் வரங்கொடு இறைவா.........
வரங் கொடு.......

No comments:

Post a Comment