வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, March 19, 2015

மனிதர்களில் எங்கே மனிதம்......?????


உறவுகளுக்குள் இல்லை
அன்பும் பாசமும்
சிறு பிரச்சனைக்கும்
ஒருவரையொருவர் கொன்று
பகைத் தீர்க்க‌
நேரம் பார்த்து
அலையும் மனிதர்கள்
எங்கே மனிதம் இவர்களில்......

திருமணம் முடிந்தபின்னும்
காதலுக்காய் தான் சுமந்த‌
பிள்ளைகளை கொல்லத் துணியும்
அன்னையர் ஒரு புறம்
எங்கே மனிதம் இவர்களில்.....!!
மகனில் வாழ்வில்
பங்குபெற வந்த
மருமகளை வரதட்சனை
பெயரினால் வாழவிடாது
கொடுமைச் செய்யும்
மாமியார்கள் ஒரு புறம்
எங்கே மனிதம் இவர்களில்......!!
ஈரைந்து மாதங்கள்
சுமந்து பெற்றெடுத்த‌
அன்னையினை அவள்
முதிர் வயதில்
வீட்டினில் சேர்க்காது
தள்ளி விடும்
மனிதர்கள் ஒரு புறம்
எங்கே மனிதம் இவர்களில்.......!!!
தகப்பன் சேர்த்த‌
சொத்துக்காய் தான்பிறந்த‌
வயிற்றில் பிறந்த சகோதரனையே
கொலை செய்யும்
மனிதரக்ள் ஒருபுறம்
எங்கே மனிதம் இவர்களில்......!!!
சாலையில் எல்லோரும்
கண் முன்பாகவே
மனித உயிர்களை
கொல்லும் கொடியவர்
ஒரு புறமிருக்க‌
ஆறறிவு உடையோர்
சுற்றி இருந்து பார்த்தும்
செல்களில் வீடியோ எடுக்கும்
மனிதர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்......!!!

வீட்டின் வெளியில்
கையேந்தும் பெண்களை
எட்டி உதைத்துவிட்டு
வீட்டினுள் சிலைக்கு
பாலாபிஷேகம் செய்யும்
மனிதர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்....!!!!
பிறக்கும் போதும்
இறக்கும் போதும்
நம்மோடு ஒன்றும்
வருவதில்லையென்று தெரிந்தும்
கோடிகோடியா சேர்த்து
பணத்தை அழகுப் பார்க்கும்
மனிதர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்.....!!!
காசு பணம் சேர்த்ததும்
உதவி தேடும் மனிதனை
மறந்து ..தான்
இறைவனைத் தேடி
ஊர் சுற்றும் பணக்கார‌
வர்க்க மனிதர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்......!!!!!
சாலையினில் விபத்தில்
அடிப்பட்டு கிடந்தாலும்
சட்டைப் பையினைத்
துழாவி கிடைத்ததை சுருட்டும்
மனிதர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்......!!
மது அருந்தி
விபத்து ஏற்படுத்தி
உயிர்களைக் கொன்றாலும்
பணம் இருந்தால்
"காக்காவலிப்பு வந்ததால்"
விபத்து என்றுரைக்கும்
காவலர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்....!!!
நட்பிற்குள்ளும் சுய‌
நலந்தோன்றி
உயிரையெடுக்கும் போலி
நண்பர்கள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம் .....!!!




தனது வியாபார‌
நோக்கத்திற்காக மனிதர்
உண்ணும் உணவிலும் கூட
தவறானதை கலந்து
லாபம் பார்க்கும்
முதலாளிகள் ஒரு புறம்
இவர்களில் எங்கே மனிதம்......!!
மதங்கள் காத்திடும்
மனிதர்களே நீங்கள்
கடவுளை காத்தது போதும்
இனியாவது கொஞ்சம்
மனிதத் தன்மையுடன்
மனிதர்களை காத்திட உதவுங்கள்....!!!!!!

No comments:

Post a Comment