| மொட்டை மாடியில் |
| அன்னாந்து பார்த்து |
| ஒற்றையாய் வீற்றிருக்கும் |
| வெண்ணிலவை ரசித்து |
| கொண்டிருந்தேன்! |
| இருளில் மின்னல் |
| கீற்றாய் வெளிவருவது போல |
| இமைகளில் இருந்து |
| சீறி வந்திடும் |
| விழிகளை கண்டவும் |
| தன்னிலை மறந்தேன்!! |
| விழிகளா இல்லை |
| விீழ்த்திடும் வலையா |
| விழிகளில் தெரிவதை |
| அறிய நினைத்தேன் |
| ஆனால் இறுதியில் |
| எனக்கென்ன ஆனது |
| என்றே அறியாதவனாய் |
| மூழ்கிவிட்டேன் |
| விழியெனும் அலைகளுக்குள்!!! |
| கரும்விழிகளுக்குள் |
| தெரிந்திடும் |
| ஒளிக் கீற்று |
| காண்பவரை யெல்லாம் |
| மெய் மறக்க செய்கின்றதே |
| நின் விழி பேசிடும் |
| மொழிகளுக்கு |
| அர்த்தம் தெரியவில்லை |
| எனக்கு |
வணக்கம்
உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!
Friday, August 19, 2016
விழிகளின் அழகு
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment