வணக்கம் நண்பர்களே,,
நான் பதிந்துள்ள எனது கடந்த 3 பதிவின் மூலமும் எந்து பிரச்சனைகளை கண்டிப்பாக அறிந்து இருப்பீர்கள்... நான் இந்த பிரச்சனையில் அனுபவப் பட்டபின் தான்.... என்னைப் போல் ஏராளமானோர் அடிப்பட்டது தெரிந்தது..... சிலருக்கு இந்த பிரச்சனையால் ( கல்யாணத்திற்கு பின் ஆண் பிள்ளைகளை மிரட்டி, காவல் நிலையம் மூலம் மிரட்டி, அவன் குடும்பத்தை விட்டு....தனிக்குடித்தனம் என்ற பெயரில் குடும்பத்தை பிரித்து அழைத்துச் செல்வது)
சிலர் இந்த் பிரச்சனையால் .... தங்களின் ஈகோ காரணத்தால் விட்டுக் கொடுக்க மனமில்லாமல் தங்களின் பிள்ளைகளின் திருமண உறவையே பிரித்துச் சென்று விடுகின்றனர்..... ஆதலால் தான்....இப்பிரச்சனைக்கு நான் என்னால் முயன்ற சிறு முடிவைத் தெரிவிக்கின்றேன்...
என் வாழ்க்கையில் நடந்த தவறு :
என்னை முதலில் பார்க்க என்னவளின் அப்பா வந்தபோதே என்னைப் பற்றியும், என் குடும்ப நிலவரத்தைப் பற்றியும், தகப்பனில்லாத என் சகோதரிக்களுக்கு நான் தான் தகப்பனாய் இருந்து கவனிக்க வேண்டும் என்பதையும், குடும்பத்தின் பொருளாதார நிலையையும், என் அம்மாவின் நிலையையும்..... விவரமாக எதனையும் மறைக்காமல்... சொல்லிவிட்டோம்......என்னை விட அவரது மகளைப் பற்றியும், மகளின் விருப்பங்களைப் பற்றியும், மகளின் குணங்களைப் பற்றியும், அவர்க்கு நன்குத் தெரியும். இப்படியிருக்கும் பட்சத்தில் அவர்..... யோசித்திருக்க வேண்டும்.... நம் மகளுக்கு ஏற்ற குடும்பம் தானா, நம் மகளின் படிப்பிற்கு ஏற்ற மாப்பிள்ளையா (என்னை விட படிப்பில் அவள் அதிகம் தான்), நம் மகள் இந்த குடும்பத்தில் மாமியாருடன் சேர்ந்து வாழ்ந்து விடுவாளா, பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வாளா என்று ஒரு தகப்பன் என்ற முறையில்..... தவறில்லை.....
அடுத்தது...... பெண் பார்க்கச் சென்ற அன்றிலிருந்தே என்னுடன் என்னவள் செல் போனில் பேசத் தொடங்கிவிட்டாள்.... அவளிடமும்... நான் எல்லா விவரங்களையும் தெரிவித்தேன்.... என் குணங்கள், என் பொறுப்புக்கள், என் அம்மாவை குறித்த என் முடிவு என எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.... நிச்சயம்.... அவள் யோசித்திருக்கலாம்.... தன்னால் முடியாது என்றால் என்னிடம் சொல்லியிருக்கலாம் அப்போதே..... வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுவதற்கு பதில் அன்றே ஒரு தீர்வு கிடைத்திருக்கும்.இருவருக்கும் மகிழ்வாக...
திருமணம் ஆன பின்னும் கூட ஒன்றரை வருடத்தில் ஒரு நாளும் என்னிடம் சொல்லவில்லை.....இது ஏன்.....? இதனால் யாருக்கு லாபம்? எல்லா நிகழ்வுகளையும் அவள் அப்பாவிடம் சொல்லியுள்ளார்...இந்த பிரச்சனைகளின் போது அவள் தந்தையார் என்னைப் பற்றி பொய்களையும், எனது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி தவறான செய்திகளையும், மட்டமான காரணங்களையும் (மகளை தனிக்குடித்தனம் வைக்கவேண்டுமென்ற ஓரே எண்ணத்தோடு) சொல்லிய போதும்..... என் மனைவி அமைதியாய் இருந்தது அவளும் அவரின் குற்றச்சாட்டுக்கெல்லாம் ஒப்புதல் அளிப்பதாகவே நான் கருதுகிறேன்... (அவர் மீண்டும் நான் அவளுடன் வாழும் போது இவற்றையெல்லான் நான் நினைத்தால் மகளின் வாழ்க்கை என்னவாகும் என்றுக் கூட சிந்திக்கவில்லை. மேலும் இறுதியில் எனது உறவினர்களிடம் எல்லாம் இவன் இதற்கு சம்மதிக்கவில்லையென்றால் நால்வர் மீது ( நான், அம்மா & 2 சகோதரிகள்) வரதட்சனைப் புகார் கொடுப்பேன் என்றே வெளிப்படையாக மிரட்டினார்... )
உண்மையில் என் அம்மாவிடம் தனிக் குடித்தனத்திற்கு ஆசைப் படுகிறேன் என்று சொல்லியிருந்தால் அவர்களே... இவள் பெயர் கூடத் தெரியாத அளவு.. சந்தோஷத்தோடு, என் மனதையும் மாற்றி.... தனிக் குடித்தனம் வைத்து இருப்பார்கள்... எனில் அவர்களுக்கு என் தகப்பனாரின் அரசு ஓய்வுதியம் வருகின்றது, மேலும் மதுரையில் வீடு உள்ளது...அப்படிப்பட்ட குணம் உள்ளவர்கள் தான் எனது அம்மா...
என்னிடம் சொல்ல சங்கடப்பட்டால் கூட அவளது நடத்தையில் பிடிக்காதவாறு காட்டியிருக்கலாம்.. அல்லது எங்களது உறவினர் யாரிடத்திலாவது சொல்லியிருக்கல்லாம்.... எதுவுமே இல்லாது கடைசியில் போலிஸ் ஸ்டேஷ்னில் சென்றது எந்த வகையில் நியாயம்.....அதுவும் நகையை எடுத்துச் சென்றது என் மீது நம்பிக்கையின்மையைக் காட்டுகின்றது..... என்னுடன் வாழ்ந்த வாழ்க்கையை.... எல்லாவற்றையும் அவள் அப்பாவிடம் சொல்லியது.... "எனக்கு நம்பிக்கை துரோகம்". உண்மையில் திருமணத்திற்கு பின் தினந்தோறும்... அவளது பெயரையே அடிக்கடி சொல்லியுளளேன்..... கனவிலும் கூட அவளை நான் பிரிந்ததில்லை.....அவள் நிழலைக் கூட சிற்பமாய் என்னுள் செதுக்கியுள்ளேன்....
முதலில் பெண்களுக்கு :
தோழிகளே.... முதலில் தங்களுக்கு வரப் போகும் கண்வன்மார்களுக்கும் குடும்பம் உண்டு... உங்களைப் போன்றே அவர்களுக்கும் அம்மா, அப்பா உண்டு என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.ஒரு வேளை உங்கள் சுபாவம்.... யாரிடமும் சேர்ந்து இல்லாமல், தனியாகத் தான் வாழ முடியுமென்றால், அதனை மாற்ற முடியாதென்றால்.... உடனடியாக முடிவாக தங்கள் தகப்பனாரிடம் சொல்லி சொந்த, பந்தம், குடும்பமில்லாத மாப்பிள்ளைப் பார்க்க்ச் சொல்லுங்கள்..தவறில்லை...
திருமணம் என்பது... இரு மணங்கள் மட்டுமல்ல இரு குடும்பங்கள் இணைவது.... குடும்பத்தை பிரிக்காதீர்கள்.... ஏற்கெனவே தமிழகத்தில் கூட்டுக் குடும்ப முறை.... வேப்பங்காயாக கசந்து, காலப் போக்கில் மறைந்துவிட்டது.....இருக்கும் அம்மா/ அப்பவையும் பிரித்து அவர்களின் கண்ணிரில் இன்ப வாழ்வு வாழலாமென்று எண்ணாதீர்கள்... அவ்வாறு.... உங்கள் பெற்றோர் கேட்கவில்லையென்றாலும்.... இன்றைய நாட்களில்.... பெண் பார்த்துவிட்டுச் செல்லும் போதே செல் போனின் நம்பர் தெரிந்துவிடுகின்றோம்... அதன் பின்னராவது எப்போதும் போல் மிஸ்டு கால் கொடுத்து தங்களவரிடம் தங்களின் விருப்பம், தங்களின் எதிர்ப்பார்ப்பு ஆகியவற்றை மிகவும் தெளிவாகவும், மறைக்காமலும் சொல்லி விடுங்கள்..... ஒன்று... நீஙகள் விட்டுக கொடுக்கவேண்டும்... அல்லது..அவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.... முடியாத சூழ் நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வது சாத்தியாமா என்று யோசிப்பது புத்திச்சாலித்தனம்..........பொதுவாக பெண்களைவிட ஆண்களுக்கு சிந்திக்கும் திறன் குறைவு தான்..... ஆனால் அதனை சொல்லும் விதத்தில் ஒரு பெண் சொன்னால் எந்தவொரு ஆண்ணும் ஏற்றுக் கொள்வான்.... முரட்டுக் குதிரைத் தான்..... ஆனால நேரங் கடந்தால்.... அன்பிற்கு கட்டுப்படுபவர்கள் தான் ஆண்கள்....
பெண் பார்க்கும் நண்பர்களுக்கு ::
பெண் பார்க்கும் போதே.... தங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும், என்று சொல்லிவிடுங்கள்.... அழகான பெண்ணை மட்டும் தேடாதீர்கள்... குணமுள்ள பெண்ணாகவும் தேடுங்கள்..... தங்கள் குடும்ப நிலவரத்தையும் சொல்லிவிடுங்கள் தவறில்லை..... அவர்கள் நம்மைப் பற்றி மட்டமாக எண்ணி விடுவர் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.. எனில் திருமண மூலம் வரும் உறவு...... நம் மரணம் பரியந்தம் என்பதை நினைவில் கொள்க......தங்களால் விட்டுக் கொடுக்க முடியுமா, மாற முடியுமா அல்லது மாற முடியாது என்பதையும் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்..... எனில் பொதுவாக பல குடும்பங்களில் பிரச்சனை புரிந்துக் கொள்ளாத, ஆண்களிடமிருந்தே ஆரம்பம் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்... பெண் பார்த்த வேகத்தில்.... ஆசையில் பொய்யான வாக்குகளையும், முடியாத காரியங்களைச் முடிப்பதாகவும் சொல்லக் கூடாது...... எனில் பெண்கள் இலகுவானவர்கள்..... நம் வார்த்தைகள் கூட காயப்படுத்திவிடக் கூடாது.....
முடிவு : : :
திருமணம் முடியும் நிமிடம் வரை நன்கு யோசிக்கலாம் முடிவை மாற்றலாம் தவறில்லை.....இணைந்தப் பின் வருந்துவது முட்டாள் தனம்....திருமணம் என்பது...... இரு மணங்கள் மட்டுமல்ல இரு குடும்பங்கள் இணைவதும் தான்...... ஆதலால் தான் திருமணத்திற்கு நம் சொந்தங்கள் அணைவரையும் அழைக்கின்றோம்......
வாழ்வில் மட்டுமல்ல தாழ்விலும்...
உயர்வில் மட்டுமல்ல தாழ்விலும்....
இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும்
சேர்ந்தே இணைந்தே வாழ்வது.....தான்
குடும்ப பந்தம்.......
விட்டுக் கொடுத்துச் செல்வது தான் வாழ்க்கை..... ஆனால் விட்டுக் கொடுத்துக் கொண்டே சென்றால் அதன் பெயர் அடிமைத் தனம்..... இன்று பலப் பேர் இப்படிப்பட்ட வாழ்க்கைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்....
சில நேரங்களில் பிரிவுகளும்... நம் அன்பை வளர்க்கும்.... அது தான் காதல்.... பிரச்சனைகளின் போது தான் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான அன்பை உணர முடியும்.......
இன்று நாம் நேசிக்கும் நபர் நாளை படுத்த படுக்கையானாலும்..... இப்போது இருப்பதை விட.... மிக அதிகமாக நேசிப்பது தான்.......... " காதல்.... காதல்".... திருமண பந்தத்தில் மாற்றிக் கொள்ளும் மாலை வாடினாலும்..... நாம் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பு, காதல் தினந்தோறும்.... உண்மையோடு வளர வேண்டுமேயன்றி கொஞ்ச கொஞ்சமாக தேயக் கூடாது..
No comments:
Post a Comment