வணக்கம் நண்பர்களே.......
கடந்த இரு பாகத்திலும் எனது குடும்பத்தின் நிலை, எனது திருமணம், எனது வாழ்க்கை ஆகியவைப் பற்றி தெரிந்து இருப்பீர்கள்......
இந்த பாகத்தில் அடிக்கடி வரப் போகின்ற ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி சிறு குறிப்பு.......
அவர் தான் எனது திரு...மாமனார்..... ஓர் கிறிஸ்தவக் குடும்பம்.... புஸ்தகங்கள் எல்லாம் எழுதி, கிறிஸ்தவ மார்க்கத்திற்காய் உழைப்பவர்......குடும்பத்தில் உள்ள அணைவருமே ஏதோ ஒரு வகையில்..... மார்க்கத்திற்காய் உழைப்பவர்கள்... வீட்டைச் சுற்றிலும்,..... வசனங்கள் தான்....ஊருக்கெல்லாம் உபதேசம் தான்.....ஓய்வுப் பெற்ற
ஓரு அரசு ஊழியர்......சாரி, சொல்ல மறந்து விட்டேன் இவர்கள் குடும்ப பழக்கத்தைப் பற்றி....
1. இவரின் பிள்ளைகளுக்கு (திருமணமான பிள்ளைகளுக்கும்) எந்தவொரு பிரச்சனையென்றாலும்..... அதனை இவரிடம் தான் சொல்வர்.... உடனே இவர்.... பொறும்மா.. கடவுளிடம் கேட்டுச் சொல்கின்றேன் என்றுச் சொல்லி அடுத்த நாளில் அதற்கான பதில் சொல்லுவார் ( கடவுளின் சித்தமென்று)
2. திருமணம் முடித்த இரண்டு மூத்த மகள்களுக்கும் திருமணம் முடித்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் ஏதேனும் பொய்க் காரணங்களைக் கூறி மருமகனை அவர்கள் வீட்டாரிடமிருந்து பிரித்து, அவர்கள் வீட்டின் அருகிலேயே "தனிக் குடித்தனம்" வைத்து விடுவர்.... மேலும் பெண் பிள்ளைகளின் படுக்கையறையில் பேசிய விஷயங்களைக் கூட அவர்களின் தகப்பானார் தெரிந்துக் கொண்டுவிடுவார் (?)
இது தான் அவர்களின் குடும்ப பழக்கம் ( என்ன நண்பர்களே, ஓரளவிற்கு புரிந்துக் கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்...) ஆனால் அவர்களின் மகனை மட்டும் திருமணம் முடித்து, அவர்களின் வீட்டின் மாடியிலேயே வைத்து உள்ளனர்.....
மூன்றாவது நான் :
31.05.2011 அன்று..... எனது ஆச்சியை அவர்கள் வீட்டில் (மதுரையில் தான்) விட்டுவிட்டு அன்றே... அவர்கள் வீடடிற்குச் சென்று விட்டாள் எனது மனைவி......சென்ற (03.06.2011 அன்று )இரண்டு நாட்களில் அவளுக்கும், எனக்கும் போனில் சிறு வாய்த் தகராறு...... (எனது வீட்டில் இருக்கும் போது மாதம் இரு முறை சண்டை வரும்... சண்டை முற்றும் போது.. எனது அம்மா தலையிட்டு....என்னையும் திட்டி, அடிக்கக் கூடச் செய்து, தவறை உணர்த்தி, மன்னிப்பு கேட்கச் செய்து, சமாதானம் செய்து வைத்து, இருவரையும் வெளியில் சென்று வரச் செய்வார்.... சண்டை முடிந்து காதல் ஆரம்பித்து விடும்.....).... அங்கு நாங்கள் சண்டையிடும் போது பேச்சு முற்றி, அவர்கள் குடும்ப்பத்தாரும் சேர்ந்து பேசி எனது கோபத்தை ஏற்றி விட்டனர்..... அவ்வாறு பேசும் போது மாமனாரைப் பற்றி நான் கடுஞ்சொல் பேசிவிட்டேன்.... அவவாறு பேசிய நான் மறு நாட் காலையிலேயே அவரிடம் மன்னிப்பு கேட்கும் எண்ணத்தில்... அவர்க்கு போன் செய்தேன்.... எடுக்கவில்லை..... மறுபடியும் என் சகலையிடம் ( என் மனைவியின் மூத்த அக்கா கணவர்) சொல்லி நான் அவரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் சொல்லச் சொன்னேன்..... ஆனால் அவரோ அதனை ஏற்காது.... என மனைவிடம் மேலும் கோபத்தை ஏற்றிவிட்டார்.....
07.07.2011 அன்று என் மனைவி, என் மாமியார், என் மச்சான் மூவரும் வந்து என் அம்மாவையும் மீறி.... நானில்லாத போது.... அவளின் நகைகளை எடுத்துச் சென்று விட்டனர்.... எனது அம்மா அவளின் காலில் விழுந்துள்ளார்கள்... அவர்களையும் மிகவும் தரக் குறைவாக என் மனைவியும், அவளும் அண்ணனும் பேசி, மேலும் இதனை தடுக்க வந்த என் இளைய சகோதரியையும் மிகவும் தரங் குறைந்த வார்த்தைகளால அவள் அண்ணன் பேசி வீட்டின் முன் சண்டையிட்டு என் மனைவியை அழைத்துச் சென்று விட்டான்....செல்லும் போது அவன் சொன்ன வார்த்தை..... " எனது தங்கச்சியுடன் வாழ வேண்டுமென்றால் அவனை ( நான்) மதுரைக்கு வரச் சொல்லுங்கள்" என்றுச் சொல்லி அழைத்துச் சென்றுவிட்டான்..... இவ்வளவு விஷயமும் நடந்த போதும், என் மாமியார் சிரித்தப் படியே... அருகில் நின்றுக் கொண்டிருந்தார்....
நான் எனது வீட்டிற்கு செல்லும் முன்பாகவே....அவர்கள் மூவரும் சென்று விட்டனர்.... நான் அவர்கள் அப்பாவை திட்டியதை... தவறு என்றுச் சொல்லிய என் மச்சான் கடைசி வரை... என்னிடம் கேட்கவே இல்லை.....
அன்றே. திருப்பரங்குன்றத்தில் உள்ள எனது உறவினர் (அம்மாவின் தங்கை) வீட்டில் வைத்து சமாதான பேச்சு வார்த்தைக்கு வந்த எனது மாமியார், எனது மாமனார்... இருவரும்... அவர்களிடம்... எனது சகோதரிகள் இருவரும்...எனது மனைவியை மிகவும் கொடுமைப் படுத்துவதாகவும் ( கொடுமைன்னா என்னவென்று தெரியவில்லை), மாமியார் இடைஞ்சல் பண்ணுவதாகவும்... சொல்லி தனிக்குடித்தனம் தான் இதற்கு ஒரே தீர்வு என்றும் சொல்லிச் சென்றுவிட்டார்..... எனது சித்தப்பா( அம்மாவின் தங்கை கணவர்) எல்லாவற்றையும் கேட்டு விட்டு, சரி நீங்கள் உங்கள் மகளை வரச் சொல்லுங்கள்... நானும் என் மகனை வரச் சொல்லுகின்றேன்... பேசி ஒரு முடிவெடுப்போம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.... அடுத்த நாட் பேச்சு வார்த்தைக்கு எனது மனைவியும், எனது மாமியாரும் வந்துள்ளனர்... எனது அம்மாவும் சென்றுள்ளனர்.... என் அம்மா அவள் முதல் நாள் மரியாதைக் குறைவாக பேசிய காரணத்தினால் மிகவும் மனமுடைந்து தான் சென்றார்கள்..... அங்கும் என் மனைவி பேச ஆரம்பிக்கும் போதே மிகவும் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார்... உடனே எனது சித்தி ( அம்மாவின் தங்கை) "ஏம்மா, என்னச் சொன்னாலும் மரியாதைக் கொடுத்துச் சொல்" எனக் கூறியுள்ளார்கள் அதற்கும் மேல் மிகவும் மரியாதைக் குறைவாகவே பேசி என் அம்மாவை குறைக் கூறியுள்ளார்... இதனால் கோபமடைந்த என் சித்தி இப்போ ஒழுங்கா பேசப் போறியா இல்லையா எனக் கூறி கோபமடைந்துள்ளார்... இதற்குள்.... என் மனைவி எழுந்து.....வீட்டின் வாசலருகே வந்து... செருப்பை ஒரு காலில் போட்டுக் கொண்டு... மற்றொரு செருப்பை.... கையில் தூக்கி "போடி" என்றுச் சொல்லி.... மிரட்டியுள்ளார்.....இவ்வளவும் நடந்தபோதும்... என் மாமியார் சிரித்தப் படியே நின்றுள்ளார்.... தன் மகளை ஒன்றுமே சொல்லவில்லை....... அவள் செருப்பை தூக்கியதைக் கணட் எனது சித்தி... அருகிலிருந்த அவர்கள் மகனிடம்... "டேய், இங்கப் பாருடா, என்னை செருப்பக் காட்றா என்றுச் சொன்னவுடன்.... எந்தம்பி கோபத்தில் சோபாவைத் தூக்கியுள்ளான்... அதற்குள் எனது சித்தப்பா "டேய் பொம்பள பிள்ளைடா, அவ என்று அவனைத் தடுத்துவிட்டார்..... (உண்மையில் அன்று அவனைத் தடுத்திராவிட்டால் அன்றே அவன் அடிக்கும் அடியில் என் மனைவி உயிர் பிழைப்பாள் என்று சொல்லமுடியாது... அவனது கை விரல் கூட அவளைத் தொடவில்லை....)
இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள்...... மதுரை போலிஸ் ஸ்டேஷனில் நால்வர் மீதும் (அம்மா, சித்தி, சித்தப்பா, எனது தம்பி)கொலை முயற்சி என்று பொய் வழக்கு என் மாமனார் கொடுத்து, அதனை விசாரிக்க மதுரையிலிருந்து இரு காவலர்களை ஆட்டோவில் அழைத்து திருப்பரங்குன்றம் வந்துவிட்டார் எனது மாமனார் (என்ன்வொரு ப்ளான்)... அப்புறம்.....
விசாரனை என்ற பெயரில் திருப்பரங்குன்றம் ஸ்டேஷன் சென்றுள்ளனர்..... நால்வரும் ஸ்டேஷன் செல்லும் முன்னரே..... அங்கு என் மாமனார் ... ஒரு கம்யுனிஸ்ட் கட்சி மகளிர் அணியைச் சார்ந்த ஒரு பெண்ணின் மூலம் இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தை சொல்லி விட்டனர்...... இது நடக்கும் இத்தருவாயில்... நானும் என் நண்பனுடன்..... திருப்பரங்குன்றம் சென்று விடுகின்றேன்.... ஸ்டேஷனுக்கும்....... அங்கு இன்ஸ்பெக்டர்.... எல்லா விஷயத்தையும் என்னிடமும், என் அம்மாவிடமும் கேட்டுவிட்டு, என் மனைவியிடம் "ஏன்மா, கணவர் இல்லாதவர்கள் வேறு யாரிடம் செல்ல முடியும்," என்று கேட்கும் போதே... அந்த கட்சிப் மகளிர் அணி..... " சார், அவா அங்கு வாழ முடியாததற்கு காரணமே மாமியாரும், நாத்தனார் என்றுச் சொல்கின்றார் என்றுச் சொல்லி, ஆர்ப்பாட்டம் செய்தவுடன்..... இன்ஸ்பெக்டர் இரவு 9 மணி அளவில்.... இத இங்கு பேச முடியாது... என்றுச் சொல்லி திருப்பரங்குன்றத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு சொல்லிவிட்டார்...
மகளிர் காவல் நிலைய விசாரணை :
எனது சார்பில்.... என்னையும், என் அம்மாவையும்... உள்ளே விட்ட கண்ணியமிக்க மகளிர் இன்ஸ்பெக்டர்..... என் மனைவி சார்பில்,.... என் மனைவி, என் மாமனார், என் மாமியார், என் மச்சான், அந்த கட்சி மகளிர் அணி... உள்ளே விட்டது மட்டுமல்லாமல.... பெயரளவில் கூட.... எங்களிடம் ஒன்றுங் கேட்காமல்.... அவர்களின் பேச்சைக் கேட்டு..... என் அம்மாவை என் முன்னாலேயே..... அதிகாரத்தில் உள்ள திமிரோடும்..மிகவும் மரியாதைக் குறைவாகவும், மனதைக் காயப்படுத்தும் வார்த்தைக்களோடும்.... பேசி ..... கேவலப்படுத்தினர்.......மகனுக்கு கல்யாணம் முடிச்சாச்சுன்னா உனக்கு என்ன வேலை என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணையைக் கேட்டு கேவலப்படுத்திய நிகழ்ச்சியையெல்லாம் அங்கு தான் நான் பார்த்தேன்.இதில் ஒன்று மட்டுமே எனது பேச்சு ஏற்றுக் கொள்ளப்பட்டது.... அதாவது... சிவகாசியிலேயே தனிக் குடித்தனம் பண்ண காவல்துறை அலுவலர்களால்.... பெரும் மனதோடு........ மேலும் அங்கு என் மாமனார் பேசிய வார்த்தைகளெல்லாம் தனிப் பதிவே போடலாம்......மதிப்புமிக்க என் மாமனார் "எனது மகள் ஒரு வருடமாகவே சந்தோஷமாகவே இல்லை, தினந்தோறும் என்னிடம் போனில் சொல்லி அழுகின்றாள்" என்றுப் பொய்களை அள்ளி விடுகின்றார்... மேலும் எனது மனைவியிடம் நான் தனிமையில் சொல்லிய விஷயங்களையெல்லாம் பொதுவில் சொல்லி ( நான் சொன்ன அர்த்தத்தை மாற்றி) புலம்புகிறார்...
இறுதியில் மதிப்புமிக்க பெண் இன்ஸ்பெக்டரின் தீர்ப்பு :
1. தனிக்குடித்தனத்திற்கு ஒரு வாரத்தில் வீடு பார்க்க வேண்டும்.....
2. உன் வீட்டார் (அம்மா & சகோதரிகள்) யாரும் வரக் கூடாது... நீ போய் பார்த்துக் கொள்ளலாம் (தாராள மனது) ஆனால் அவள் (என் மனைவி) வீட்டிலிருந்து எல்லோரும் வருவர்.... ( அவள் வாழ்வதைப் பார்க்கவாம்)
3. நீ உன் மாமனார் வீட்டிற்கு போவது, வருவது உன் விருப்பம்......ஆனால் அவள் போவதை தடைச் செய்யக் கூடாது என்று
இதை எழுதி சம்மதமென்று பேப்பரில் கையெழுத்திடு அல்லது " நால்வர்" மீதான கொலை முயற்சி வழக்கு விசாரிக்கப்படும்......முடிந்தது காவல் துறையின் நியாயாமான விசாரனை, வழக்கு....... அவர்களிடம்..... நான் எவ்வளவும் பேசியும், வாதாடியும் ஒரு பயனுமில்லாததால்... கட்டாயத்தின் பேரில் எழுதி கொடுத்தேன்......என் மனைவி வீட்டார்க்கு ஒரே மட்டற்ற மகிழ்ச்சி...... உள்ளேயே கைக் குலுக்கி சந்தோஷத்தைப் பகிர்ந்துக் கொண்டனர்........ நான் ஸ்டேஷனிலிருந்து வெளியில் வந்து பார்த்தப் போது..... இரு முகங்கள் மிகவும் ஏக்கத்துடனும், வெளியில் மகிழ்ச்சியுடனும்........ அவர்கள் தான் எனக்கு மூத்தவர்கள்...... புரியவில்லையா நண்பர்களே......எனக்கு முன் என் மாமனார் வீட்டில் (இதே முறையில்) வாக்கப்பட்ட எனது சகலைகள் ( எனது மனைவியில் அக்கா கணவன்மார்கள்)
மூன்றாவதாக இவனும் தனது வீட்டில் வாக்கப் படுவான் என்று எண்ணிய எனது மாமனார். ஆனால் பாவம்..... இனித் தான் எனது சுயரூபம் வெளிப்படப் போகின்றது..... என்று அவர்களின் குடும்பத்தாருக்கும் யாருக்கும் தெரியவில்லை..... மிரட்டி விட்டோம் ஒரே வாரத்தில் தனி வீடு பார்த்து விடுவான் கணவன்... என்ற பகல் கனவில் இருந்த என் மனைவியும் என்னைப் பற்றி சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்பதை..... அடுத்த நடந்த நாட்களில் புரிய வைத்தேன்......
( நண்பர்களே..... மிகவும் விரிவாக எழுதியதற்கு மன்னிக்கவும்.... எவ்வளவோ முடிந்தளவிற்கு சுருக்கித் தந்துள்ளேன்......என் வாழ்வில் எவ்வளவோ தோல்விகள், பிரச்சனைகளைச் சந்தித்து உள்ளேன்... ஆனால் எந்த நேரத்திலும் மனதை தளரவிட்டதேயில்லை.... ஆனால் இந்த விஷயம் என் மனதை மட்டுமல்ல.... என் தன்னம்பிக்கை, என் உற்சாகம் அத்தனையையும் சிதைத்து விட்டது. மேலும் காவல் நிலையத்தில் நடந்த விஷயம் உண்மைக்கு மதிப்பு இல்லையென்பதை எனக்கு உணர்த்தியது...)....
எல்லார் வீட்டிலும் இந்த மாதிரி பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய? விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாமல், தானும் சந்தோஷமாக இல்லாமல், மற்றவரையும் வேதனைப்படுத்துகிறமே என்று அறியாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் காலம் கடந்துதான் புத்தி வரும். வாழ்க்கையை வாழாமல் இருப்பதை வைத்து சந்தோஷப்படாமல் நரகமாக்கும் இவர்களுக்கு என்ன அறிவுரை கூறினாலும் ஏறாது. காலம் மாறும். காத்திருக்கத்தான் வேண்டும். கடவுள் துணையிருப்பார். நம்பிக்கையுடன் இருங்கள்.
ReplyDelete