வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 13, 2011

என் மனதை சிதைத்த சம்பவம்..... பாகம் 2.

நான் வாழ்ந்த வாழ்க்கை :
நான் சிவகாசியில் ஒரு தனியார் கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் ஆனாலும் முதலாளியின் நன்மதிப்பை பெற்று வாழ்ந்து வருகின்றேன்.... சம்பளம் குறைவு என்றாலும், என் குடும்பத்தில் எப்போதும் பண பற்றாக்குறை காணப்பட்டாலும் எங்களது குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம், சமாதானம், அன்பு எப்போதும் இருக்கும்.... அதேப் போல் எனது மனைவியும் மிகவும் அன்பாகவும், நட்பாகவும், உரிமையோடும் பழகினாள். என் சகோதரிகளிடமும் நான் எதிர்ப்பார்த்ததை விடவும் உரிமையாக தோழியைப் போல் அவர்களின் உடைகளைக் கூட உடுத்தும் அளவிற்கு மிகவும் அன்பாக பழகினாள் எனது சகோதரிகள் குழந்தைகளின் மீதும் அன்பு செலுத்தினாள்.... என் அண்டை வீட்டாரும், உறவினர்கள் கூட பொறாமைப் படும் அளவிற்கு நடந்தாள்...உண்மையில்... என் அம்மாவை.... மாமியார் போல் அல்ல தன் அம்மாவைப் போல் பார்த்துக் கொண்டாள்.....அவர்களுக்கு உடம்புக்கு முடியவில்லையென்றால் எங்களது படுக்கையறையைக் கூட மூட மாட்டாள....அவ்வாறு கவனித்துக் கொண்டாள்....

அன்றைய நாட்களில்.... நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷத்துடனும், அன்புடனும், காதலுடனும் பழகினோம்..... உண்மையில் என் நண்பர்களே " டேய் உண்மையைச் சொல், நீ இவளை லவ் பண்ணித்தானே திருமணம் செய்தாய்" என்று கேட்குமளவிற்கு வாழ்ந்தோம்.... நான் அவள் கணவன் என்பதில் பெருமைக் கொண்டேன்... என்னையும்... அன்னைப் போல் கவனித்தாள், நேசித்தாள், அன்பு கொண்டாள்....

என் மனைவியைப் பற்றி இத்தளத்தில் நான் எழுதிய கவிதை......
http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF
அல்லது
http://success-joshi.blogspot.com/2010/06/blog-post_2917.html

இவ்வாறு நன்றாகத் தான் எல்லோரும் பொறாமைக் கொள்ளும் படியாகத் தான் வாழ்ந்தோம்... ஒரே குறையைத் தவிர......
குழந்தைச் செல்வம் மட்டும் இல்லாததே அந்தக் குறை.... ஆனாலும்.... அது ஒரு குறையாக எண்ணாமல்... அவளை ஒரு குழந்தையாகவே பாவித்து அன்பு செலுத்தினேன்...... அவள் சொல்வாள் என்னிடம் " எனக்கு கணவன் பிரச்சனையில்ல, மாமியார் பிரச்சனையில்லை, நாத்தனார் பிரச்சனையில்லை, நான் கடவுளை மறந்திடுவேன் என்று தான் எனக்கு குழந்தை இல்லையென்ற பிரச்சனையை... இறைவன் வைத்துள்ளான்" என்று.......

28.05.2011 அன்றுக் கூட என் இரண்டாவது சகோதரியின் மகனுக்கு மொட்டைப் போடும் நிகழ்ச்சியில் கூட என் மனைவியைப் பார்த்து இவர்கள் குடும்பத்திற்கு இப்படி ஒருவளா என்று வந்தவர்கள் அணைவரும் வியந்தனர்.....31.05.2011 அன்று என் மனைவி.... என் ஆச்சியை அவர்கள் வீட்டில் (அம்மாவின் அம்மா) மதுரைக்கு விடச் சென்றாள்....

31.05.2011 அன்று வரை வசந்தம் வீசிய என் வாழ்வில் இதற்கு மேல் தான் புயல் வீசியது......
( அடுத்த பாகத்தில் முடியும்)

No comments:

Post a Comment