வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 13, 2011

என் மனதை சிதைத்த சம்பவம்..... பாகம் 1.

வணக்கம் நண்பர்களே,,

எனது வாழ்வில் நடந்த, என் மனதை சிதைத்த ஒரு அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்..... இதனைச் சொல்ல மிகவும் மனம் வெறுப்படைந்தவனாய், தயங்கி தயங்கித் தான் வெளியிடுகிறேன்...... எனக்கு நடந்த அனுபவம் ... இதனைப் படிக்கும் ஒருவரையாவது நிச்சயம் மாற்றும் என்ற எண்ணத்தோடு இதனை எழுதுகின்றேன்......

எனது திருமணம் 09.10.2009 அன்று மதுரையில் நடந்தது... திருமண நிச்சயம் செய்த அன்றே... நான் இந்த தளத்தின் மூலம் எனது நண்பர்களுக்கு எல்லாம் தெரியப்படுத்தினேன்........

எனது குடும்பம்.......
என் குடும்பத்தில் நான் தான் மூத்த பையன். இரண்டு இளைய சகோதரிகள். நான் கல்லூரிப் படிப்பை முடித்த இரண்டு மாதங்களில் ( 30.07.2001) அன்று எனது தந்தை கேன்சர் வியாதியால் இரண்டு வருடங்கள் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல் இறந்துவிட்டார்..எந்தவொரு சொத்துமில்லை, கொடுத்து உதவுமளவிற்கு எந்த சொந்தங்களும் இல்லை.... அப்பாவின் மறைவிற்குப் பின் நானும், எனது அம்மாவும் சேர்ந்து தான், மிகவும் கஷ்டப்பட்டு, எனது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் முடித்து வைத்தோம்... மேலும் அவர்களுக்கும் தலைப் பிரசவம், மூன்று கிறிஸ்மஸ் எல்லாம் செய்து வைத்தோம்....
இதற்கு இடையில் எனது அம்மாவிற்கு அடிக்கடி நெஞ்சு வலி மற்றும் மூளையில் இரத்தம் உரைந்து ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்தோம்...
இதற்கிடையில் எனக்கு ஒரு வாழ்க்கைத் துணையை அம்மாவின் முடிவோடு தேடினோம்......அம்மா பிறந்த மதுரையிலேயே.... அம்மாவையும் கவனித்து, சகோதரிகளையும் நேசிக்க ஒரு துணைவி வேண்டுமென்று....... சகோதர, கோதரிகளுடன் பிறந்த ஒருவளைத் தேடினோம்.... தேடி கண்டுப்பிடித்தோம்....

என்னவளின் குடும்பம் :
தாய், தகப்பன், ஒரு அண்ணன், இரண்டு மூத்த அக்கா, ஒரு இளைய சகோதரிகளுடன் சேர்ந்து பிறந்தவர் என்பதால் அவரை பெண் பார்க்க சம்மத்தித்தேன்.... அதற்கு முன் அவரது தகப்பன் ( எனது மாமனார்) என் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்து, விசாரித்தார்... அப்போதே எனது வீட்டின் எல்லா நிலைமைகளையும் ( கடன், எனது சம்பளம், அம்மாவின் நிலை) அணைத்தையும் மறைக்காமல் சொல்லி.... (எனென்றால் என் சகோதரிகளின் மாமியார் வீட்டார் எங்களுக்கு திருமணத்திற்கு முன் எல்லா விவரங்களையும் மறைத்துவிட்டனர்) திருமணத்திற்கு பின் அம்மாவையும் நான் தான் கவனிக்க வேண்டுமென்பதையும் சொல்லி, இது எல்லாம் சம்மதம் என்றால் ... நாங்கள் பெண் பார்க்க வ்ருகிறோம் என்று சொல்லி அனுப்பினோம்... அவரும் செல்லும் போது என் புகைப்படம் எல்லாம் வாங்கிச் சென்று, இரு நாட்களில் எங்களை பெண் பார்க்க வரச் சொன்னார்கள்.... நாங்களும் சென்று, ( நான் பார்த்த முதல் பெண்ணும், கடைசியும் ) இரு வீட்டாரின் சம்மத்தத்துடன்....திருமண தேதி நிச்சயித்து பேசி முடிததோம்.....

இதற்கு இடையில்,... திருமணம் முடியும் வரை.....என்னுடன் தினந்தோறும்... செல்போனில் பேசுவாள்...அப்போதெல்லாம் நான் போனில் என்னைப் பற்றியும், என் குணங்களைப் பற்றியும், என் அம்மா & சகோதரிகளின் குடும்பத்தைப் பற்றியும், அம்மாவை நான் தான் பார்ர்க்க வேண்டும் என்பதையும்... எனது குடும்ப கடன் விவரத்தையும் .. ஆனாலும் அதற்கு என் அம்மாவின் அம்மா சொத்து வரும் என்பதையும் வரும் ஆதலால் கடனுக்காக நாம் கவலைப்பட வேண்டாம் என்றும் சொன்னேன்.... எனக்கு மனைவியாய் வர வேண்டியவளைக் குறித்து என் கல்லூரி நாட்களிலேயே கவிதை எழுதியுள்ளேன்.....இணையத்தில் அதன் முகவரி http://success-joshi.blogspot.com/2011/06/blog-post_2093.html

இரு வீட்டாரின் சம்மதத்துடன், ஆசிர்வாதத்துடன் மதுரையில் தேவாலயத்தில் 09.10.2009 அன்று.... திருமணம் முடிந்தது.......

(நண்பர்ளே எனது வாழ்வில் 01.08.2009 நடந்த சம்பவங்களை முடிந்தளவிற்கு சுருக்கிச் சொல்கின்றேன்.... மீதம் அடுத்த பாகத்தில்... நான் வாழ்ந்த வாழ்க்கை)

No comments:

Post a Comment