வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, February 23, 2012

என்னுடன் வாழ்ந்திட வா...... அன்பே


என் இனியவளே,
நான் உன்னை
திருமண மான நாட்முதல்
மனைவியாய் அல்ல‌
காதலியாய் எந்தன்
தோழியாய் எந்தன்
குழந்தையா யெண்ணித்
தானடி உன்னை
என் உயிருக்குள் உயிராக‌
நேசித்தேன்........
காதலித்து திருமணம்
முடித்தவர்களா என்று
நட்பும் உலகமும்
பொறாமைக் கண்கொண்டு
பார்க்குமளவு வாழ்ந்தோமடி......
என் அன்பிற்கு
வானமே எல்லையென்று
நம்பி உன்னை
நேசித்தேன் காதலித்தேன்
ரோஜா தோட்டமாய்
வளர்த்த வாழ்ந்த
நம் வாழ்வில்
சூறாவளியாய் புயலாய்
நின் தகப்பனின்
சுயநலம் வந்ததடி........
காலத்தின் கோலத்தால்
உனது குடும்பத்தால்
நான்பட்ட
நிந்தைகள் அவமானங்கள்
பலப் பல.....
ஊர்க் கூட்டி உன்னை
திருமணம் செய்தேன்...
அதற்கு பழியாக
ஊர் பழிக்க‌
என்னையும் குடும்பத்தையும்
காவல் நிலையம்
அழைத்துச் சென்றார்
உன் தகப்பன்........
காவல் நிலையத்திலும்
உன் தகப்பன்
தன் சுயநலத்தை மட்டுமே
வென்றெடுக்க‌
அடுகடுக்கான பொய்கள்
கட்சி ஆதரவுடன்.............
உனக்கு காலையில்
காப்பி போட்டு
மிஸ்டு கால் கொடுத்து
எழுப்பும் என் அன்னையை
வார்த்தைகளினால் காவலர்
சுட்டப் போதும்
புன்னகையுடன் நின்
குடும்பத்தாரும் நீயும்......
இதனால்
எனது குடும்பமும்
தலைக் குனிந்தது........
உற்றாரும் உறவினரும்
என் பின்னால்
நான் கேட்கும் படியே
ஏளனம் பேசி பேசி
என்னை
கேலிப் பொருளாக்கினர்.........
நாம்
நலமுடன் வளமுடன்
வாழ்கவென்று வாழ்த்திய உறவு
இந்த உறவே.....
வேண்டாமென்று சொல்லி
நம் உறவை
உடைக்கவும் சொல்லியது
ஆத்திரத்தில் அவசரத்தில்
அதையும் நான் செய்தேன்.....
ஆனாலும்...........
நான் உன் மீதுக் கொண்ட‌
காதலினால் அன்பினால்
அதையும் உடைத்து
என் தாயை
பேசிய சுடு
சொற்களையும் மறந்து
உன்னுடன் வாழ‌
உன்னுடன் மட்டும் வாழ‌
என் குடும்ப கூட்டை
உடைத்துக் கொண்டு
அன்னையை அனாதையாக்கி விட்டு
வெளியில் வந்தேன்.........
நீயோ நன்றாகத்
தான் வாழ்ந்தாய் என்னுடன்
ஆனாலும் உந்தன்
தகப்பனின் ஆலோசனைப்படி........
நான் உன்மீது
அளவற்ற அன்புக் கொண்டேன்
ஆனால் நீயோ....
காசு தான் உலகம் என்றாய்..........
பாசம் தான் உலகம் என்றேன்
ஆனால் நீயோ
வேஷமாய் தான் வாழ்ந்தாய்
என்னுடன் ‍ என்னை நம்பாமல்
உன்னிடம் தாயன்பை
எதிர் பார்த்தேன்.....
ஆனால் நீயோ
உந்தாயை நேசித்து
என்னை அவமானப் படுத்தினாய்........
அன்பின் மிகுதியில்
நானிருக்கும் போதும்
உன் சுயநலத்தோடு
உந்தாய் வீட்டிற்கு
போவதற்கு அனுமதி கேட்பாய்......
என்னதொரு கொடுமை..........
உன்னிடம் கிடைக்காத‌
பாசத்திற்காய் அன்பிற்காய்
நான் மதுவினை
நாடினேன்......
என் மனதையும்
மரக்கச் செய்து
மதுவின் போதையில்
உன்மீது கொண்ட
அன்பை விட‌
உன் தகப்பன் மீதான‌
கோபத்தையும் உன்னிடம் காட்டினேன்.......
அதனையும் நீ புரியாது
என்னை
மீண்டும் மீண்டும்
சுடு சொற்களால் என்னை
வதைத்தாய்........ நானோ
எந்தன் உயிரையே
எந்தன் அன்பையே
அடித்தேன் ... அடித்தேன்.....
அதனால் நானே
என் மீதே
வெறுப் படைந்தேன்................
உன்னை எவ்வளவு
நேசித்தேனோ
அதை விட அதிகமாய்
உன் குடும்பத்தை
வெறுத்தேன்..............
ஆனால் நீயோ
நானில்லாத போது
வீட்டைக் காலி செய்துவிட்டு
உன் தகப்பனாருடன்
சென்று விட்டாய்..........
உனக்கோ என் மீதுக்
கோபம்.... உன்
தகப்பனுக்கோ
தன் சுயநலம்
ஜெயிக்க மீண்டுமொரு
வாய்ப்பு என்றினைத்து
அழைத்து சென்று விட்டார்........
நான் மீண்டும்
உறவையும் நாட முடியாமல்
நட்பையும் நாட முடியாமல்
இப்பவும்
நானுன்னை நேசிக்கின்றேன்...
அதிகமதிகமாய் நேசிக்கின்றேன்.....
என் அன்பை
என் காதலை
என்றாவது ஒரு நாள்
புரிந்துக் கொள்வாயென
காதலுடன் காத்திருக்கின்றேன்.....
என் இல்லறமே,
நீ என்னருகில்
இருக்கும் போது
உந்த னருமை
எனக்குத் தெரியவில்லை........
நீ என்னை விட்டுச்
சென்றவுடன்
நீ என்னை விட்டு
விலகிடுவா யொயென்று
என்னுயிர் என்னை
வதைக்கின்றது............
இன்று நான்
உதடுகளில் சிரித்தப் படி
வாழ்ந்தாலும்
உள்ளத்தில் நின் பிரிவால்
மரண வேதனையில்..........
காதலுக்குள்
ஊடல் வரலாம் ‍ ஆனால்
பிரிவு கூடாது
அன்பே.........
நின் தகப்பன் மீதான
கோபத்தில் என்
சொற்களால்
உன்னை வதைத்தேன்.....
அடிகளால்
உன்னை சிதைத்தேன்.......
அப்போது நான்
எண்ண வில்லை.........
நான்
வதைப்பதும் சிதைப்பதும்
என்மீது நீ
கொண்ட நேசித்த‌
அன்பையென்று...........
உன் தகப்பனை
நேசிப்பது தவறல்ல‌
ஆனால் அவர் செய்யும்
தவறினை எண்ணத்தினை
நீ உணரா திருப்பது தவறு.......
ஒரு நிமிடம்
எனக்காக என்னை நினைத்து
நம் வாழ்வைக் குறித்து
நீ முடிவெடு..........
உன்னைப் பெற்றவரே யானாலும்
நம் வாழ்வின் முடிவை
அவர் கையில் தராதே..........
பிறந்த புத்தாண்டில்
நான் என் தவறினை
உணர்ந்து விட்டேன்..........
நின் குடும்பம்
செய்த தவறினை
மன்னித்து மறந்து விட்டேன்............
நாம் தொடர்வோம்
நம் இல்லற பயணத்தை
அன்பு காதல் துணைக் கொண்டு......
நீயில்லாமல் நான்
உயிரில்லாத வெற்றுடல் தான்.........
மழையில்லாத மேகம் தான்......
மணமில்லாத மலர் தான்........
என் மீதான
கோபம் குறைய‌
ஆண்டுகள் பல ஆனாலும்
உனக்காக
காத்திருக்க தயார்......
அதை நீ எனக்குச் சொல்.......
உன் தகப்பனல்ல.......
நம் இல்லறத்தை
பிரிக்கும் உரிமையை
யார் அவர்க்கு கொடுத்தது?????
இப்பவும்
நானுன்னை நேசிக்கின்றேன்...
அதிகமதிகமாய் நேசிக்கின்றேன்.....
என் அன்பை
என் காதலை
என்றாவது ஒரு நாள்
புரிந்துக் கொள்வாயென
காதலுடன்
பல ஆண்டுகள் ஆனாலும் காத்திருக்கின்றேன்.....
உன்னுடன் மீண்டுமொரு
வசந்த வாழ்க்கை வாழ்
உன்னை நேசிக்க‌
உன்னை காதலிக்க‌
உன்னை சேயாய் கவனிக்க‌
உன்னுடன் தோழனாய் நட்புகொள்ள‌
உன் கணவனாய்
உன்னை
அணைத்திடவும் அரவனைக்கவும்..............
உலகமே எதிர்த்தாலும்
உன்னுடன் காதலாய் வாழ‌
என்னை நானே
தயார் படுத்திக் கொண்டேன்...........
எந்தன் அன்பே
உன்னிடம்
நான் **நோக்குவது
என்மீது தூய அன்பும்
நல் நட்பும்
நல் இல்லறமும்
என்னை நம்பும்
என்னை நேசிக்கும்
பெண்ணொருத்தியாய்
புத்தாண்டில் புதியவளாய் வா......
என்னுடன் வாழ‌
விரைவில் வா...........
இல்லையேல்
நீயே புன்னகையுடன்
உந்தன் கரங்களால்
விஷம் தந்து செல்..........
என் வாழ்வினை
ஆரம்பிக்க வா
அல்லது
என் வாழ்வினை
முடிக்க வா............
(** நோக்குவது : எதிர்பார்ப்பது என்ற அர்த்ததில்.....)

No comments:

Post a Comment