வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 18, 2014

போதை போதை.........

தெருவில் தனியாக 
சென்றுக் கொண்டிருந்தேன்.
மனதில் சிந்தித்துக் கொண்டே.....
வாகனகங்கள் இருபுறமும்
ஒன்றையொன்று முந்துவதில்
போட்டி போட்டுக் கொண்டு
சென்றுக் கொண்டிருந்தன‌....
மனித தலைகளும் 
முண்டியடித்து சென்றன‌....
சாலை ஓரத்தில்
எதையுமே பொருட்படுத்தாது
எதையுமே காண முடியாது
போதையில் ஒரு ஜீவன்
உறங்கியதா அல்லது மயங்கியதா
என்றுத் தெரியாமல்
தன்னிலை மறந்து 
படுத்துக் கிடந்தது.....
போதை போதை 
அவன் உண்ட போதை
இப்போது அவனையே உண்டு
அவனையே மேற்கொண்டு விட்டது....
என் மனமோ சிந்தித்தது..
போதை போதை....
இவன் குடித்த போதை
வெளிப்படையாக எல்லோருக்கும்
தெரிந்தது... ஆனால் 
ஒவ்வொரு மனிதருமே
போதையை தேடித் தான்
வாழ்கின்றனர் 
தேடும் வரைக்கும் போதை
தேடியது கிடைத்த‌ போதோ
போதை நம்மை 
மேற்கொள்ளும் என்றது என்மனம்
ஆம் உண்மைத் தான்.........
படிக்கும் மாணவர்க்கு
தேர்வில் நல்நிலையில் 
ஜெயிக்க வேண்டுமென்ற போதை....
படித்து முடித்தோர்க்கு
உயர் ஊதியத்தில் வேலை
கிடைக்க வேண்டுமென்ற போதை..........
வேலையில் உள்ளோர்க்கு
அழகான மனைவி 
கிடைக்க வேண்டுமென்ற போதை........
பணமில்லாதவர்க்கு
வாழ்வில் அனுபவிக்க‌
பணம் வேண்டுமென்ற போதை......
பணமிருப்போர்க்கு
பணத்தை செலவழிக்க 
வேண்டுமென்ற போதை....................
எல்லாம் சலித்தோர்க்கு
இறை வழியில்
அமைதி வேண்டுமென்ற போதை...........
வியாதியில் இருப்போர்
வாழ்வினை முடிக்கவெண்ணி
மரணம் வேண்டுமென்ற போதை.....
எல்லாம் கிடைத்து விட்ட போதோ
உலக வாழ்வு முடிந்து
வாழ்ந்த அர்த்தமில்லாமல்
வெறும் போதையோடு
போதை நம்மை மேற்கொண்டு
இதயத்தை நிறுத்துகின்றது........
பணம் படிப்பு
பதவி ஆடம்பரம் 
இருந்தாலும்  உயிரெனும்
போதை இல்லாவிட்டால்
யாரும் பிணமே...............
உண்மைத் தான் 
ஒவ்வொருவருமே ஒரு 
நாள் நம்மையும்
போதை மேற்கொள்ளுமென்று
தெரியாமல் போதையினை
தேடிக் கொண்டுதானிருக்கின்றோம்.............

No comments:

Post a Comment