வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 18, 2014

/உண்மையான நட்பு (இணையத்திலிருந்து) :

இணையத்தில் படித்து, பதிவிடத் தூண்டியது:

 " ஈழப் போரின் போது இரண்டு தோழிகள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருத்தி மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தாள்.. நான் என் தோழியை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றாள் அவளின் தோழி,.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.
நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் தோழியினை காப்பாற்ற ஓடினாள் , அவளை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.
இவளுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவளை தூக்கி கொண்டு வந்தாள். களமுனை மருத்துவ போராளி அவளை பரிசோதித்து பார்த்தார் அவள் தோழி தாய் நாட்டிற்காக வீரமரணம் அடைந்து இருந்தாள். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவளை காப்பாற்றப்போவத ால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.
நான் போனது தான் சரி அக்கா என்றால் அவள் . என்ன சொல்கிறாய் உன் தோழி இறந்து கிடந்தாள் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.
நான் அங்கு போகும்போது என் தோழி உயிருடன் தான் இருந்தாள் அக்கா.”என்னைக் காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் அக்கா இறந்தாள் என் உயிர் தோழி .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் அக்கா இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை எனறாள் .! இதுதான் உண்மையான நட்பு...! இதுதான் விடுதலைப்புலிகள் ...! "
பதிந்தவர் :  @ஈழ மைந்தன்

 இணைய முகவரி :      http://www.tamilwaiting.com/2014/02/kaddu5444.html

No comments:

Post a Comment