ஒரு ரயில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் ஒரு பெரியவர் ஏறினார். தலையில் ஒரு மூட்டையை வைத்திருந்தார்.
மூட்டையை சுமந்துகொண்டே உள்ளே வந்தார். மூட்டையை சுமந்துகொண்டே இருக்கையில் அமர்ந்தார்.
ரயில் புறப்பட்டது.
ரயில் புறப்பட்டது.
இவர் தன் தலையில் இருந்த மூட்டையை இறக்கி கீழே வைகனும்மல்ல? வைக்கவில்லை.
எதிரில் அமர்ந்திருந்தவர் கேட்டார், ஏங்க மூட்டைய தலை மேலேயே வெச்சிருகீங்க, கீழே இறக்கி வைக்கவேண்டியதுதானே ??
வேண்டாங்க பாவம்; தலையில் இருக்கிற மூட்டைய எறக்கி வெச்சா ரயிலுக்கு பாரம் அதிகமாயிடும், நான் தலைலயே வெச்சிருகிறேன் அப்படின்னு அந்த பெரியவர் சொன்னார்.
எதிரில் அமர்ந்திருந்தவர் கேட்டார், ஏங்க மூட்டைய தலை மேலேயே வெச்சிருகீங்க, கீழே இறக்கி வைக்கவேண்டியதுதானே ??
வேண்டாங்க பாவம்; தலையில் இருக்கிற மூட்டைய எறக்கி வெச்சா ரயிலுக்கு பாரம் அதிகமாயிடும், நான் தலைலயே வெச்சிருகிறேன் அப்படின்னு அந்த பெரியவர் சொன்னார்.
இந்த மாதிரி ஆட்கள பாத்தா நமக்கு சிரிப்பு தான் வரும்.
ஏன்னா, ரயில் இப்பவே அந்த மூட்டையையும் சேர்த்துதான் சுமந்துகிட்டு போகுது. அவர் அந்த மூட்டையை தலையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான் தரையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான். இதனால ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.
அதே மாதிரி தான் நம்மோட மனமும், இதுவும் ஒரு தேவை இல்லாத ஒரு சுமை. அனாவசியமா சுமந்த்துகிட்டு இருக்கிறோம். இதையும் கீழே இறக்கி வெச்சிட்டா வாழ்க்கை பிரயாணம் சுகமாக இருக்கும்.
ரயில் பிரயாணம் செய்யும் அந்த பெரியவர் மூட்டையை சுமக்கிறார். வாழ்க்கை பிரயாணம் செய்யும் நாம் மனதை சுமக்கிறோம். இவை இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மனதை கீழே இறக்கி வெச்சிட்டா பாரம் இல்லாமல் வாழலாம். பறவைகள் மாதிரி பறக்கலாம் குழந்தை மாதிரி கள்ளங்கபடம் இல்லாமல் வாழலாம். இந்த வெளி உலகத்தில் நாம் நிலைபெற்று வேரூன்றி இருக்கனும்
அதே சமயம் நம் உள்வெளியில் பாரமில்லாமல் இருக்கனும். அப்படின்னா பறக்கனும், நதியை போல ஓடனும், மிதக்கனும் பயனம் சுகமாக இருக்கும் களைப்பு தெரியாது; கவலை தெரியாது.
ஒரு சீடன் போதி தருமரை நாடி வந்தான். குருவே நீங்கள் என்னை வெறுமையாக இருக்க சொன்னீங்க நான் இப்பொழுது வெறுமையானவன் ஆகிவிட்டேன், இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
உடனே அந்த குரு பக்கத்தில் இருந்த ஒரு குச்சிய எடுத்து சீடன் தலையில் தட்டி , போய் அந்த வெற்று தன்மையையும் வீசிவிட்டு வா என்று கூறினார்.
ஒருத்தன், இப்பொ நான் காலியா இருக்கென்னு சொன்னான்னா அவன் காலியா இல்லைனு அர்த்தம், ஏன்னா அதில் இன்னும் “நான்” என்ற சொல்(எண்ணம்) இருக்கின்றது.
எந்த சிந்த்தனையும் இல்லாமல் இருப்பது கடினம் தான் ஆனாலும் மனிதன் அதனுள் இருக்கும் நுட்டபத்தை புரிஞ்சிகிட்டானா இவ்வளவு தூரம் தூக்கி சுமந்த மனதின் முட்டாள் தனத்தை எண்ணி அவனே சிரிப்பான்.
“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இறகை போன்ற மனம் வேண்டும்”
No comments:
Post a Comment