****** கேலி கூடாது ***************
ஒரு காட்டில் மயில் ஒன்று வாழந்து வந்தது. தன் அழகைப் பற்றி மிகுந்த தற்பெருமை கொண்டிருந்தது.
அருகில் இருந்த பெரிய ஏரிக்கரைக்கு நாள்தோறும.; அது செல்லும். தெளிந்த நீரில் தன் உருவத்தை மேலும் கீழும் பார்த்து மகிழும் . ஆ இவ்வளவு அழகாக இருக்கிறேன். என் அழகு வேறு எந்தப் பறவைக்கு உள்ளது ? பல வண்ணங்களை அள்ளி வீசுவதில் வானவில்லை மிஞ்சும் என் தோகையின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறதே என்று தனக்குள் நினைக்கும்.
மற்றப் பறவைகளைப் பார்த்து விட்டால் போதும் என்ன அழகு உனக்கு இருக்கிறது ? ஆண்டவன் ஏன் உன்னை. இவ்வளவு அவலட.;சணமாய் படைத்து விட்டான் என்ற கேலி செய்யும்.
ஒரு நாள் ஏரிக்கரைக்கு கொக்கு ஒன்று வந்தது,
அதைப் பார்த்து மயில், என்ன உன் இறக்கைகள் பலவித வண்ணங்களில் ஒளி வீசுகின்றன. அவற்றின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது. உன்னைப் போன்ற அழகான பறவையை நான் பார்த்தே இல்லை என்ற கேலி செய்தது.
அதற்குக் கொக்கு, மயிலே உன்னைப் போன்ற அழகான இறக்கைகள் எனக்கு இல்லை, இறக்கைகள் அழகாக இருப்பதால் ஏதேனும் பயன் உண்டா ? என் இறக்கைகளைக் கொண்டு நான் எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்வேன். வானத்தில் உச்சியைக் கூட என்னால் பார்க்க முடியும். அதுபோல் உன்னால் முடியுமா ? உன் இறக்கைகள் உன்னைச் சுமந்து சிறிது தூரங்கூட பறக்காதே. நீயா என்னைக் கேலி செய்கிறாய் ? என்று பதில் கேள்வி கேட்டது.
மயிலால் அதற்கு பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. தலை கவிழ்ந்தபடி அங்கிருந்து சென்றது. அன்றிலிருந்து மற்ற பறவைகளை கேலி செய்வதை விட்டு விட்டது.
No comments:
Post a Comment