வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 23, 2010

என் மனதிற்கு நான் எழுதும் கிறுக்கல்

என் மனமே,

இலட்சியம் இல்லாத மனமே
தோல்விகளில் துவண்டது போதும்
ஏளனங்களினால் வருந்தியது போதும்....
எழுந்திரு........ விழித்திடு........

உன் எதிர்காலத்தை
அடுத்தவனிடம் கையைக் காட்டி
கேட்காதே...........
உன்னால் முடியும் என்று
உன்னை தட்டி எழுப்பு........

முயற்சிகளில் தோற்பவன்
தோல்வியாளன் அல்ல‌
முயற்சிகளை விடுபவனே
தோல்வியாளன்........

முன்னேறியவனைக் கண்டு
பொறாமைப் பட்டது போதும் ‍ அவன்
முன்னேறிய வழியை
அறிந்துக் கொள்......

எனக்கு வழிக்காட்ட‌
யாருமில்லை என்று வருந்தாதே
நான் முன்செல்ல‌
பாதையில்லை என்று தேம்பாதே

இன்றே
விழித்தெழு துணிவுடன்
எடுத்து வை உனது முதலடியை
அதுவே
நாளை எல்லோரும்
பின்பற்றும் சரித்திரமாகும்.......

எல்லோரிடமும் அன்பாயிரு
ஆனால் அடிமையாகாதே
அன்பைச் செலுத்து
அதற்கு விலைப் பேசாதே........

சிந்திக்க பழகிக் கொள்
சிந்தித்ததை செயலாக்க கற்றுக் கொள்
செயலினை பழக்கமாக்க மாற்று
பழக்கத்தை வழக்க மாக்கு

விழுந்தாலும் பரவாயில்லை
மீண்டும் ஓட‌
உயிர் உள்ளதென்று
உறுதியுடன் எழுந்திரு.........

விழும் போதெல்லாம்
எழுந்திருப்பவனே வீரன்......

போராடு போராடு
வெற்றி பெற வேண்டுமென்று அல்ல‌
தோல்வி அடையக் கூடாதென்று......

இன்றைய
உன் தரித்திரத்தை எண்ணாமல் போராடு
"அச்சமில்லை அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சமில்லை" என்ற
மீசைப் புலவனின் வரிகளை
மனதில் நினைத்து போராடு.....
உன் தரித்திரங்கள்
அதுவே
நாளைக்கு சரித்திரமாகும்......

நீ அடுத்தவர்
நிழலில் வளரும்
கொடியாயிராதே
அடுத்தவர்க்கு
நிழல் தரும்
விருட்சமாயிருக்க நினை......

விரைவில்
வெற்றி
உன்னைத் தேடி வரும்.......
வெற்றி உனதே..........

நீ
சாதாரணமானவன் அல்ல‌
நீ
சாதிக்கப் பிறந்தவன்.

No comments:

Post a Comment