வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 23, 2010

என் ஒரு தலைக் காதலிக்கு....

(என் கல்லூரி நாட்களில் நான் எழுதிய காதல் கிறுக்கல்)

என் உயிரின் உறவே,

வணக்கம்
உன்னையே நான்
நினைப்பதால் நான் நலம்!
நீ எப்படி உள்ளாய்?

இன்றளவும்
நான் உன்னுடன்
பேசியது மில்லை
பழகியது மில்லை
ஆனால்
நான் உன்னுடன் தான்
வாழ்கின்றேன் என்னுள்
நின் நினைவுகளோடு......

நான் கொண்ட
நினைவுகளை
ஓவியமாய் தீட்டிடத் தானாசை
ஆனால்
நான் ஓவியன் அல்ல‌

நான் தினந்தோறும்
என் நிழலுடன்
பேசுகின்றேன் ‍ ஆம்
எனக்கு என்னவென்று
எனக்கேத்
தெரிய வில்லை?

கையளவு
இதயத்தில்
அளவில்லா நிறையில்லாமல்
உனது நினைவு
வளர்ந்த தெப்படி?

இதுவரை
நீ என்னைக்
காண வேண்டுமென்று
உனது விழிகளை
திருப்பிய தில்லை
ஆனால்
எனது விழிகளோ
நீ வருந்திசை நோக்கியே எப்போதும்....

உன்
மௌனமெனும் மொழியால்
என்னிதயத்தில்
காதல் வளருகின்றதடி......

உன் ந‌டை எனக்கு
நடனமாய் தெரிகின்றது....
உனது பேச்சுக்கள்
எனக்கே உரியவையென்று
அல்லவா
என்னிதயம் எண்ணுகின்றது.......

நீ செல்லும்
சைக்கிளும் என்னை
ஏளனம் செய்கின்றது
"தான் பிறவிப் பயனை
அடைந்து விட்டதென்று"
பாவம்
அதற்கெப்படித் தெரியும்
உன் தாய் தன்
உடலில் சுமந்ததை விட‌
நான் அதிகமாக
என்னுள்
சுமக்கி றேனென்று.....

விண்ணிலவை
நேசித்த என்னை
உன்னை நேசிக்க வைத்தது
உனது
அமைதி தானடி..........

கல்லூரி யெனும்
வசந்த ராகம் பாடிய‌
என்னை
காதலெனும்
மௌன ராகம்
பாட வைத்தாயே

கும்பலாய் ஆடிப்பாடி
திரிந்த யெனக்கு
தனிமையை நேசிக்கவும்
தனிமையில் பேசவும்
கற்றுத் தந்தாயே

அழிந்துப் போகும்
அழகிற்காய் அல்ல‌
அழியா காதலுக்காய்
உன்னை விரும்புகின்றேன்.

நீ
என்னைக் காதலிப்பதும்
என்னை மறுப்பதும்
உனது உரிமை
ஆனால்
என்னை
மறக்கச் சொல்வது
"தீண்டாமை குற்றம்"
அக்குற்றம்
என்றும் என்னால்
மன்னிக்கப் படாதது.......

மௌனத்தால் வளர்த்த‌
என் காதலை
நின்
மௌனத்தாலேயே
கலைத்து விடாதே......

No comments:

Post a Comment