வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 13, 2016

ஜூலை 5 ----- கரும்புலிகள் நாள்

#ஜோ

பலமற்ற எம்மினத்தின்
பலமான ஆயுதமே
கரும்புலிகள்!!

மரணத்தை கண்டு
அஞ்சிடும் மனிதர்கள் மத்தியில்
இனத்தின் விடுதலைக்காக
மரணத்தை விரும்பி
தாங்களே ஏற்றுக் கொண்டு
புன்னகையுடன் மரண
குகைக்குள் சென்றவர்கள்
எம் கரும்புலிகள்!!!!

இருளாயிருந்தாலும்
காடாயிருந்தாலும்
வேலிக்குள்ளிருந்தாலும்
தாங்கள் எண்ணிய
இலக்கினை அடைந்தே
தீருவார்கள் எம்
தலைவர் வளர்த்த
கரும்புலிகள்!!!!!!

                       


தன்னுடல் கூட
கிடைக்காது என்ற நிலையிலும்
எதிரியின் பாசறை
சிதறிடும் என்ற நினைவில்
இலட்சியத்தை
தேடி சென்றிடு்வார்கள்
எம் கரும்புலிகள்!!!!!!!

தமிழீழ மக்களின்
விடுதலைக்காக
எம் தலைவர் வளர்த்தெடுத்த
மதிப்புமிகு உயிராயுதங்கள்
எம் கரும்புலிகள்!!!!!!

தமிழினத்தின் விடுதலைக்காக
தமிழீழத்தின் சுதந்திரத்திற்காக
உயிர்க் கொடையாகிய
ஒவ்வொரு கரும்புலிகளையும்
நினைத்திடுவோம் என்றும்!!!!!!!!


No comments:

Post a Comment