வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 13, 2016

என் பார்வையில் ...................

தமிழகத்தில் தற்பொழுது கடந்த இரண்டு மாதத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்கள் மிக அதிக அளவில் நடந்துள்ளது. தமிழகத்தை ஆண்டிடும் முதல்வர் ஒரு பெண்ணாக இருந்தும், அவர் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. தலைநகர் சென்னையிலும் சரி, மற்ற நகரங்களிலும் சரி, பெண்களுக்கு எதிரான செயல்கள், இறுதியில் அவர்களின் உயிரைப் பறிக்கும் செயலாக நடந்துவருகின்றது. உடனடியாக, தமிழக முதல்வர் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை, உண்மை குற்றவாளிகளை கைது செய்திட காவல்துறைக்கு முழு அதிகாரமளித்து உத்தரவிட வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் வெளியில் வராதவாறு, சிறைக்கம்பிகள் பலமாக்கப்பட வேண்டும். கவுரக் கொலைகளுக்கும் கடுமையான தண்டனை வாங்கிதரப்பட வேண்டும்.
                  

கொலையாளிகள் எல்லாம் ஒரு மாதத்தில் சிறையில் இருந்து வெளிவந்தால், அவர்களுக்கு எப்படி தெரியும் குற்றத்தின் விளைவுகளும், தண்டனையின் வீரிய்மும். சென்னையில் சுவாதி கொல்லப்பட்டவுடன் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ரவுடிகளை கைது செய்திட்ட காவல் துறையினரால், ஏன் தொடர் குற்றங்கள் புரிவோர்களை அடையாளங் காண முடியாது?????
                                


                         #சட்டத்தின் ஓட்டையில் உள்புகுந்து, வழக்கறிஞரின் திறமையால் வெளிவரும் குற்றவாளிகளினால், இச்சமூகத்திற்கு என்ன நன்மை கிடைத்திட போகின்றது? அவர்களால் அவர்களின் குடும்பத்திற்கும் என்ன நன்மை?????#


                            குற்றத்தின் மீதான தண்டனையில் இல்லாத பயமும், கொலையாளிகளுக்கு இருக்கின்ற தைரியமும் தான், பொது மக்கள் அதிகமாக நடமாடுகின்ற இடங்களில் கூட, குற்றம்புரிவதற்கும் காரணம்.. தற்பொழுது, சம்பந்தமே இல்லாவிடினும், கூலிக்காக கொலை செய்திடும் கொலையாளிகளும் அதிகமாக வளர்ந்துவருகின்றார்கள். ஒரு குற்றத்தில் இருந்து தப்பிக்கும் போதே, அவர்களுக்கு அடுத்த குற்றத்தில் ஈடுபடுவதற்கான தைரியம், மன உறுதி பிறந்துவிடுகின்றது. இது தான் அவர்கள் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட காரணம். கூலிப் படைகளுக்கு காவல் துறை தரும் தண்டனை, உடனடியானதாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பொது மக்களின் கருத்தும் ஆகும்.

                      கொலை செய்யப்படுகின்றவர்கள், யாராக இருந்தாலும் சரி, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதியாக இருந்தாலும், அவர்களையும் ஒரு உயிராக மதி்க்க தெரியாதவர்களுக்கு, அவ்வுயிரின் அருமையை, உயிரின் மதிப்பினை புரிய வைத்திட வேண்டும்.




                  ***சட்டங்கள் குற்றத்திற்கேற்றதான தக்க தண்டனையினை, கால தாமதமில்லாது, நீதியின், நியாயத்தின் அடிப்படையில் தரப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுகின்ற தண்டனை, மீண்டும் அக்குற்றத்தை வேறு ஒருவர் செய்ய எண்ணாதபடிக்கு இருக்க வேண்டும். இல்லையேல் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது இருக்கும் பயம், இருக்காது. சிறை என்றால், தண்டனைக்கான இடம் என்று இருக்க வேண்டும். விருந்தினர் மாளிகையாக இருக்க கூடாது. ஒரு மாதத்தில் வெளிவந்து , நினைப்பதை எல்லாம் செய்தால், அது என்ன தண்டனை????****




                தண்டனை கடுமையானால் தான் குற்றங்கள் குறையும். "வளமான எதிர்காலம்" வேண்டுமென்றால், தயவுதாட்சண்யம் பாராது, சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் களை களை பிடுங்கித் தான் ஆக வேண்டும். காவல்துறையும், சட்டத் துறையும் இணைந்து செயலாற்றினால், எந்தவொரு கட்சிக்கு வளைந்து செயல்படாது, மக்களுக்காக பணியாற்றி, தமிழக மக்களை காத்திடலாம். ஒரு பாதுகாப்பான மாநிலமாக தமிழகத்தை மாற்றிடலாம்.

                    

No comments:

Post a Comment