#ஜோ
பறையடி பெண்ணே
பறையடி
சுயநலங் கொண்ட எம்மினம்
விழித்தெழும் படி
பறையடி!!!!
பறையடி
சுயநலங் கொண்ட எம்மினம்
விழித்தெழும் படி
பறையடி!!!!
தூங்கிடும் எம்மினம்
விழித்தெழும் படிக்கு
பறையடி!!!
விழித்தெழும் படிக்கு
பறையடி!!!
தமிழினத்தின் துரோகிிகளின்
முகத்திரைகள் கிழியும் படிக்கு
பறையடி!!!!!
முகத்திரைகள் கிழியும் படிக்கு
பறையடி!!!!!
பழம்பெருமைகள் சொல்லாது
தமிழீழ அரசின் பெருமை சொல்லி
பறையடி!!!!
தமிழீழ அரசின் பெருமை சொல்லி
பறையடி!!!!
ஆதிக்க அரசியல் சக்திகள்
அதிரும் படிக்கு
பறையடி!!!!!
அதிரும் படிக்கு
பறையடி!!!!!
தமிழர்கள் அனைவரும்
தமிழர்களாய் உணர்ந்திடும் படிக்கு
பறையடி!!!!
தமிழர்களாய் உணர்ந்திடும் படிக்கு
பறையடி!!!!
தமிழர்களின் இன உணர்வினை
வீறுடன் எழுப்பும் படிக்கு
பறையடி!!!!!
வீறுடன் எழுப்பும் படிக்கு
பறையடி!!!!!
தமிழின நலனுக்காய்
தமிழர்கள் எழும்பும் படிக்கு
பறையடி!!!
தமிழர்கள் எழும்பும் படிக்கு
பறையடி!!!
தமிழர்களின் சிறைகள்
உடைத்தெறியும் படிக்கு
பறையடி!!!
உடைத்தெறியும் படிக்கு
பறையடி!!!
தமிழின எதிரிகளும்
துரோகிகளும் வீழ்ந்திடும் வரையிலும்
பறையடி!!!!
துரோகிகளும் வீழ்ந்திடும் வரையிலும்
பறையடி!!!!
பறையடி பெண்ணே
பறையடி ... தமிழினம்
மீண்டு எழும்வரை
பறையடி!!!!!!
பறையடி ... தமிழினம்
மீண்டு எழும்வரை
பறையடி!!!!!!
No comments:
Post a Comment