| காதல் வந்தாலே |
| கிறுக்கல்கள் எல்லாம் |
| கவிதையாகின்றது!! |
| காதல் வந்தாலே |
| சுவைகள் எல்லாம் |
| மாறிவிடுகின்றது!! |
| காதல் வந்தாலே |
| நட்பின் கூட்டத்திலும் |
| தனிமையை நாடுகின்றது!! |
| காதல் வந்தாலே |
| விண்ணை பார்த்து |
| பேச வைக்கின்றது!!! |
| காதல் வந்தாலே |
| எதிர்ப்புகளை எதிர்க்க |
| துணிவு கொள்கின்றது!!! |
| காதல் வந்தாலே |
| தீய பழக்கமெல்லாம் |
| மாறி நல்லவனாக்குகின்றது!! |
| காதல் வந்தாலே |
| கடிகார நொடி முள்ளும் |
| யுகங்களாய் தெரிகின்றது!! |
| காதல் வந்தாலே |
| சாலையோர பூக்களையும் |
| ரசிக்க வைக்கின்றது!! |
| காதல் வந்தாலே |
| பழைய திரைப்பட மெல்லடியையும் |
| கேட்க தூண்டுகின்றது! |
| காதல் வந்தாலே |
| கடினமான செயலெல்லாம் |
| எளிதாய் தோன்றுகின்றது!! |
| காதல் வந்தாலே |
| வெறுப்பு களெல்லாம் |
| விருப்பமாக தோன்றுகின்றது!!! |
| காதல் வந்தாலே |
| யோக நிலையில் மெய் |
| மறக்க செய்கின்றது!! |
| காதல் வந்தாலே |
| விழிகள் திறந்திருந்தாலும் |
| கனவு காண வைக்கின்றது!! |
| காதல் வந்தாலே |
| குழந்தைகளையும் |
| கொஞ்சிட தோன்றுகின்றது!!!! |
| காதல் வந்தாலே |
| பசி மறக்க செய்து |
| ருசி மறக்க செய்கின்றது!!! |
| காதல் வந்தாலே |
| துயரிலும் மறவாமல் |
| புன்னகைக்க செய்கின்றது!!! |
| காதல் வந்தாலே |
| மனதில் துணிவும் |
| முகத்தில் அழகும் வருகின்றது!!! |
வணக்கம்
உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!
Sunday, September 11, 2016
காதல் வந்தாலே (பாகம் 1)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment