மனிதர்களின்
சுய நலத்தினால்
இயற்கை வளங்கள்
சுருங்கியது அழிந்தது
காட்டினை அழித்து
நிலத்தை பெருக்கினான்
நீர்நிலைகளை அழித்து
வசிப்பிடாங் களாக்கினான்
மனிதர்களின்
சுய நலத்தினால்
இயற்கையை அழித்தவர்களால்
மீண்டும் அந்த
இயற்கையினை
உருவாக்கிட இயலவில்லை!!
பதவியாசையுள்ள
மனிதர்களுக்கு கிரீடமளித்து
மகிழ்ந்தனர் பாமரர்கள்
ஆனால் அப்பெருமக்கள்
செய்த தவறுகளால்
இன்று அல்லல்படுவது
பாமரர்களே!!
வனங்கள் அழிந்தன
ஆறுகள் மறைந்தன
நதிகள் ஒழிந்தன
பதவிக்காக
போராடும் பெருமக்களுக்கு
நதியும் ஒரு அரசியலே
எட்டு மாதங்களுக்கு
முன் வெள்ளத்தில்
மிதந்த நாம்
இன்று தண்ணீர்க்காக
வெளி மாநிலத்தில்
கையேறு நிலையில்
இருக்கின்றோம் என்றால்
தவறு அரசியலிலா????
தொலை நோக்குப்
பார்வையில்லாத
ஆட்களுக்கு கிரீடம்
சூட்டிய மக்களிலா????????
நதிக்கரையோரங்களில்
அன்று வளர்ந்தது
நாகரீக சமுதாயம்
ஆனால் இன்று
நதி அரசியலினால்
அழிகின்றது
பாமர மக்களின்
வாழ்க்கை!!
ஓடும் தண்ணீரில்
எழுதும் வாக்குறுதிகள்
போன்றே உள்ளது
இன்றைய அரசியல்
நதியில் அரசியல்
செய்கின்றது பாமர
மக்களை அடித்து!!!!
****************************************************
முன்பெல்லாம்
அரசியல் ஒரு
சாக்கடை என்று
சொல்லி ஒரு
குறுகிய வட்டத்துள்
அடைத்தார்கள்
இன்று அந்த
சாக்கடை
பெருகி பெருகி
நதியாகி உள்ளது
காலத்தின் மாற்றத்தால்
No comments:
Post a Comment