வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, November 8, 2016

தோழியே எந்தோழியே................


தோழியே தோழியே
எந்தோழியே

கவலையெனும்
மூட்டையினை
ஏன் சுமக்கின்றாய்
தலையினில் உயர்த்தி

கவலைகள் இல்லாத
பிரச்சனைகள் இல்லாத
மனிதர் யாருமேயில்லை

பிறந்திட்ட குழந்தை முதல்
பல்விழுந்தவர் வரைக்கும்
பிரச்சனைகளும்
துயரங்களும் உண்டு தோழி!!


எனக்கு தான் சுமை
எனக்கு மட்டுமே சுமையென்று
சொல்லி சொல்லி ஏன்
உன் மகிழ்வான வாழ்வை
துன்பமாக்குகின்றாய்
நீ அழுவதாலும்
சோகமாய் இருப்பதாலும்
மாறிவிடுமா உன்
பிரச்சனைகள்!!!
தோழி தோழி
மகிழ்ந்திருக்கும் பொழுதினை விட
அழுதிடும் பொழுது
உடலின் அதிகமான வேலை
நடக்கின்றது என
மருத்துவம் சொல்கின்றது……..
கவலைகளினால் துன்பப்பட்டு
துன்பப்பட்டு ஏன்
உன்னை நீயே உருக்குகின்றாய்!!!!
இல்லாததை எண்ணியெண்ணி
வருந்துவதை விட
இருப்பதை எண்ணியெண்ணி
மகிழ்வாக வாழ்ந்திடு!!!!!
செருப்பில்லையென
வருந்தியவன்
காலி ல்லாதவனை கண்டவுடன்
மகிழ்வாய் எழுந்து
வெறும் காலில் ஓடினான்!!!
எல்லோர்க்கும் எல்லாம்
கொடுத்திட இறைவன்
ஒன்றும் முட்டாள் இல்லை
துன்பங்களை தாங்கிடும்
வல்லமை உன்னிடம்
இருப்பதால் தான் உன்மேல்
துன்ப பாரங்களை ஏற்றுகின்றான்!!!
இன்றைய துன்பம்
நாளைக்கும் மாறும்
என தெரிந்தும் ஏன்
இன்றைய பொழுதினை
துயரத்தோடு கழிக்கின்றாய்!!!

தோழி தோழி
மகிழ்வாய் இரு
சந்தோஷமாய் இரு
புன்னகையுடன் இரு

வாடியிருக்கும் மலர்கள்
அழகு சேர்ப்பதில்லை
அதுபோல் வாடியிருக்கும்
முகம் அழகு சேர்ப்பதில்லை
குடும்பத்திற்கு!!!!

குடும்பம்
பூந்தோட்டமாக இருப்பதும்
முட்புதராக இருப்பதும்
தோழி உந்தன்
சிரிப்பினிலே
தோழி உந்தன்
மகிழ்வினிலே

சிரி சிரி சிரி
மகிழ்வாய் என்றும் சிரி
உண்மையாய் சிரி
சிரித்திடும் உள்ளம்
என்றைக்கும் சோர்வதில்லை
சிரித்திடும் உடல்
என்றும் பலவீனமாவதில்லை!!!!

No comments:

Post a Comment