** மழையோடு விளையாடு **
விளையாடு விளையாடு
மழையோடு விளையாடு
துள்ளித்துள்ளி விளையாடு
மழையோடு விளையாடு
மழையோடு விளையாடு
துள்ளித்துள்ளி விளையாடு
மழையோடு விளையாடு
மழைத்துளி மண்ணுக்கு மட்டுமல்ல
உயிர்களுக்கெல்லாம் உயிரே
மழைத்துளி!!!
உயிர்களுக்கெல்லாம் உயிரே
மழைத்துளி!!!
ஓடியாடி விளையாடு
உருண்டுபுரண்டு விளையாடு
மழையோடு விளையாடு
உருண்டுபுரண்டு விளையாடு
மழையோடு விளையாடு
இறைவனின் அருட்கொடையின்
உருவமே விண்ணின் மழைத்துளி!!
குற்றமில்லை குறையுமில்லை
எந்தவொரு பாதிப்புமில்லை
துள்ளித்துள்ளி விளையாடு!!!
உருவமே விண்ணின் மழைத்துளி!!
குற்றமில்லை குறையுமில்லை
எந்தவொரு பாதிப்புமில்லை
துள்ளித்துள்ளி விளையாடு!!!
விண்ணின் துளிகள்
உச்சந்தலையில் கொட்டி
காலடியில் விழும்போது
உற்சாகமும் புரண்டிடுமே!!!
உச்சந்தலையில் கொட்டி
காலடியில் விழும்போது
உற்சாகமும் புரண்டிடுமே!!!
உடம்பின் ஒவ்வொரு
அங்கங்களும் மாற்றத்தை
உணர்ந்திடுமே
மனசெல்லாம் புத்துணர்வும்
பிறந்திடுமே!!!!
மழையோடு விளையாடு
உடலினை அனைத்திடும்
மழைத் துளிகள்
உடம்பின் சூட்டினையும்
அணைத்து குளிர்வித்திடுமே
உடலினை அனைத்திடும்
மழைத் துளிகள்
உடம்பின் சூட்டினையும்
அணைத்து குளிர்வித்திடுமே
மழையோடு விளையாடு
மழலையோடு விளையாடு
மழைத்துளிகளும் முத்தமிடட்டும்
உன் மழலையை!!!!
மழலையோடு விளையாடு
மழைத்துளிகளும் முத்தமிடட்டும்
உன் மழலையை!!!!
எக்கலப்படமில்லாத
தண்ணீரினை உன்மழலையும்
ரசித்து ருசிக்கட்டுமே!!!
விளையாடு விளையாடு
மழையோடு விளையாடு
விண்ணை தொட முயற்சித்து
துள்ளிகுதித்து விளையாடு
மழையோடு விளையாடு
விண்ணை தொட முயற்சித்து
துள்ளிகுதித்து விளையாடு
மழைத்துளி நீரினில்
மின்னிடும் மின்னல்களின்
அழகைப் பார்!
மின்னிடும் மின்னல்களின்
அழகைப் பார்!
விண்ணில் புறப்பட்டு
மண்ணில் சங்கமாகிடும்
மழைத்துளியைப் போல்
வாழ்கின்ற வரையில்
உனது வாழ்க்கையும்
பிறர்க்கு பயன்படும்படி
வாழ்ந்திட பழகிக்கொள்!!!!
மண்ணில் சங்கமாகிடும்
மழைத்துளியைப் போல்
வாழ்கின்ற வரையில்
உனது வாழ்க்கையும்
பிறர்க்கு பயன்படும்படி
வாழ்ந்திட பழகிக்கொள்!!!!
மழைத்துளி மழைத்துளி
நல்லவர் கெட்டவர்
பார்த்து பொய்வதில்லை
நீயும் அன்பினை செலுத்து
உயிர்கள ணைத்தின் மேலும்
நல்லவர் கெட்டவர்
பார்த்து பொய்வதில்லை
நீயும் அன்பினை செலுத்து
உயிர்கள ணைத்தின் மேலும்
விளையாடு விளையாடு
மழையோடு விளையாடு
மழையோடு விளையாடு
No comments:
Post a Comment